பற்றறற வாழ்வு
”காலம் தன் வழியே வெகு வேகமாக ஓடிக்கொண்டிருகிறது. காலம் என்பது மரணதேவதையான எமதர்ம ராஜாவே ஆகும். மிகமேலான நன்மைபெறுவதற்காக ஒருவன் தன் நேரத்தை எப்படிச் செல்விடவேண்டும் பிதாமஹரே! தயவு செய்து இதை எனக்குச் சொல்வீராக” என்று யுதிஷ்டர்ர்ர் கேட்டார்;. பீஷ்மர் சொன்னார்: வேதம் படிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்திய பிராம்மணனும், முக்திமார்க்கத்தை நன்கு உணர்ந்த மேதாவி என்ற அவர் மகனும் பேசிக்கொண்ட கருத்து மிகவும் விறுவிறுப்பானது.. பொருள் பொதிந்த்து. அதைப் பற்றிக் கூறுகின்றேன்” என்றார்
தந்தையிடம் மகன் கேட்டான்,”தந்தையே! மனிதனின் ஆயுட்காலம் வெகு வேகமாக்க் கழிகிறது. இந்தச் சூழ்நிலையில் அறிவுள்ள மனிதன் என்ன செய்ய வேண்டும்?”
தந்தை கூறினார்,” பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வேத்த்தைப் படிக்கவேண்டும். பின்னர் தம் மூதாதையரைக் காப்பதற்காகச் சந்த்தியை விரும்பவேண்டும், மறை நூல்களில் விதிக்கப்பட்டுள்ளபடி அக்னிஹோத்ரம் மற்றும் யாகங்களைச் செய்யவேண்டும். பின்னர் வனம் சென்று வானப் பிரஸ்த்தன் ஆகவேண்டும். அதன் பின் அனைத்தையும் துறந்துமுனிவனாகிப் பொறுமையுடன் மரணத்தை எதிர்நோக்கி இருக்கவேண்டும்” என்றார்.
“அனைத்து திசைகளிலும் உலகம் தாக்கப்படுகிறது. எல்லாவற்றையும் அழிக்கவல்ல இடிகள் விழுந்துகொண்டிருக்கின்றன. உங்களால் இப்படி அமைதியாக எப்படிப் பேசமுடிகிறது தந்தையே?” என்று கேட்டான் மகன். “என் அன்பு ம்கனே! இந்த உலகம் எதனால் தாக்கப்படுகிறது? இடிகள் என்பது என்ன? உன் வார்த்தைகளால் என்னை ஏன் குழப்புகிறாய்?” என்று கேட்டார் தந்தை.
துன்பம், பயம், நோய், முதுமை, மரணம் மற்றும் எண்ணற்ற விபத்துக்கள் ஒருமனிதனைத் தாக்குகின்றன. பகல்களும் இரவுகளும் இடைவிடாது இடிபோல் விழுந்துகொண்டிருக்கின்றன. ஒருநாள் கழிந்த்து என்றால் ஒருவனது வாழ்வும் அதனுடன் கழிகிறது. மரணம் எந்த அறிவிப்பும் இன்றி அனைத்தையும் உடனே பறித்துவிடுகிறது. எனது அன்புத் தந்தையே இதைக் குறித்துத் தாங்கள் ஆழ்ந்து சிந்திக்கவில்லையா? மரணத்தை வெல்வதற்காகத் தீவிர முயற்சி எடுக்கவேண்டாமா? மேலான அமைதியுடன் கூடிய நிலைத்த ஆனந்த்த்தை அடையவேண்டாமா?”
“ஒருவன் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கையில் மரணம் அவனையும் பறித்துவிடுகிறது. எனவே நாளைக்குச் செய்வதற்காக விட்டுவைத்திருப்பதை ஒருவன் இன்றே செய்துவிடவேண்டும். மாலையில் செய்ய ஒருவன் விரும்பும் செய்யலை காலையிலேயே செய்து விடவேண்டும்.. மரணம் காத்திருக்காது எனவே ஒருவன் இளமையிலேயே ஜபம், தியானம், தவம், யோகம் போன்றவற்றைப் பயின்று கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் வாழ்க்கை நிலையற்றது, முதுமை வரும் வரை அவன் காத்து இருக்க்க் கூடாது.”
அன்புத் தந்தையே! அறியாமையின் காரணமாக ஒருவன் மரணத்துக்குப் பலியாகிறான். உண்மைப் பொருளை அறிவதன் மூலம் அழியாப் பெருநிலை அடையப்படுகிறது.. அமரத்துவத்தை அடையவேண்டிக் காம்ம், கோபத்தினின்று என்னை நான் விடுவித்துக்கொள்வேன். சிந்தனை,சொல், செயலில் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிப்பேன். மிருகங்களை வதைத்துச் செய்யும் கொடிய யாகங்களைச் செய்ய மாட்டேன். யாகம் தேவையானால், அது ஆணவத்தைத் தியாகம் செய்வதாக இருக்கட்டும். இதுவே மிக உயர்ந்த யாகமாகும். அடக்கத்தைப் பயின்று புலன்களைக் கட்டுப்படுத்தி என் எண்ணங்களை இடையறாது பிரம்மத்தில் நிலை பெறச்செய்வேன். அழியாத ஆனந்த சொரூபமாகிய அந்தராத்மாவில் நான் அடங்கி இருத்தல்வேண்டும்”
“பிள்ளை பெறுவதுதான் வாழ்க்கையில் ஒரே நோக்கமாகாது. நான் ஆத்ம யாகம் செய்வேன். என்னை விடுவிக்க எந்த சந்ததியையும் நான் விரும்பவில்லை. பிராம்மணனுக்கு எளிய வாழ்வு, பேச்ச்சில் உண்மை, பணிவு, அனைத்துயிரிடத்தும் சம நோக்கு, நன்னட்த்தை, பக்தி, தவம், தியானம் இவைகளுக்கு ஈடான செல்வம் கிடையாது. செல்வம், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் ஆகிய இவர்கள் மரணத்தின் பிடியிலிருந்து
நீங்கள் விடுபட உதவுவார்களா? அவர்கள் உண்மையில் உங்கள் பகைவர்களேயாவர். இந்த உலக வாழ்க்கைக்கு உங்களை அடிமையாக்கி உங்கள் இயல்பான அமரத்துவத்தை அடைவதிலிருந்து உங்களைத் தடுப்பதால் அவர்கள் திருடர்களேயாவர். நீங்கள் ஒரு பிராம்மணர், மரணத்தை வென்று அழியாநிலையையும், பேரானந்த்த்தையும் அடையவேண்டும். உங்களுடைய லட்சியமும் கடமையும் இதுவேயாகும். என் அன்புத் தந்தையே! உலகப் பற்றுகளை விட்டு அழியாப் பெருநிலையை அடையுங்கள்” என்றான் மேதாவி.
“மேதாவியினுடைய இந்த அறிவுபூர்வமான வார்த்தைகளைக் கேட்டு அவன் தந்தை அதன் படியே நடந்தார் யுதிஷ்டிரா! நீயும் அதைப் போலவே உண்மையை உணர்ந்து மரணத்திற்கப்பால் உள்ள பெருநிலையை அடைவாயாக!” என்றார் பிதாமகர் பீஷ்மர்.
நன்றி தர்மச்சக்கரம்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.