self introduction

140 views
Skip to first unread message

AKR

unread,
Oct 23, 2006, 3:40:01 AM10/23/06
to il...@googlegroups.com
நண்பர்களே,
 
நண்பர் விஷியின் ஆலோசனைப்படி, தமிழ் கூறும் நல்லோர் நிறைந்த இல்லத்திற்கு என்னை நானே அறிமுகம் செய்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
 
என் இயற்பெயர் ஆ.கி. ராஜகோபாலன், பிறந்தது ஜூலை 8, 1953. நான் இரும்பைக் காய்ச்சி உருக்கி, இயந்திரங்கள் செய்திடும் ஒரு இயந்திரப் பொறியாளன். கரும்பைச் சாறு பிழிவதைப் பார்த்திருக்கிறேன். கடலில் மூழ்கி முத்தெடுத்ததில்லை, எடுப்பதைப் பார்த்ததுமில்லை.
பல தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த பின், நானே ராஜா, நானே மந்திரி என்று சுயமாக என் வீட்டிலிருந்து கொண்டே ஒரு பொறியியல் ஆலோசகனாகப் பணியாற்றுகிறேன்.
 
என் மனைவி ஹேமா ராஜகோபாலன் ஒரு இல்லத்தரசி,
 
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை 
 இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் - அவ்வில்
புலிகிடந்த தூராய் விடும்
 
என்ற ஔவை மூதாட்டியின் வரிகளுள் முன்னிரண்டைக் கடைப்பிடிப்பவள்.
 
எனக்கு ஒரு மகன், பெயர் சந்தோஷ், 10ஆம் வகுப்பு படிக்கிறான், மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொள்கிறான். ஒரு மகள்,  பெயர் அய்ஷ்வர்யா, 6ஆம் வகுப்பு படிக்கிறான், பரத நாட்டியம் பயிலுகிறாள். இருவரும் ஓவியம் வரைவதில்
ஆர்வமுள்ளவர்கள்.
 
தந்தை ஓய்வு பெற்ற அரசு அலுவலர். தமிழ் இலக்கியத்தில் மிக்க ஆர்வமுள்ளவர், ஆர்வமென்றால் மிகவும் கடின
நடையில் எழுதப் பட்ட வில்லிபுத்தூராழ்வார் எழுதிய வில்லி பாரதம் படிக்குமளவிற்கு, தேவாரம், திருவாசகம்,
ஔவையார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் மற்றும் பலருடன் சேர்த்து.
 
அதில் ஒரு சிறிது எனக்கு அவர் கூறும் விஷயங்களிலுந்து ஏற்பட்டது. வேற்று நிருவனங்களில் பணி புரியும் போது தமிழ் படிக்கக் கூட நேரமில்லாமல் இருந்தது. தற்பொழுது நிறையப் படிக்கும் வாய்ப்புள்ளது. கணிணி மூலம் என் தொழில் முறைப் பணிகளைச் செய்யும்போது கணிணித் தமிழில் விருப்பம் ஏற்பட்டதால் இணையத்தில் நுழைந்து பல மென் பொருட்களைத் தேடிப் பிடித்து உபயோகித்துப் பார்த்த பின் அழகியின் அழகில் மயங்கி விழுந்து விட்டேன். இன்னும் முழுதாய் எழுந்திருக்கவில்லை அழகியின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பிள்ளை போல் நடை பயிலுகிறேன்.
 
இளம் விஞ்ஞானிகள் வரிசையில் விஷியின் நேர்முகம் படிப்பதற்காக நிலாச்சாரலில் நுழைந்தவன் இன்னும் நனைந்து கொண்டிருக்கிறேன். நண்பர் சக்தி சக்திதாசன், சகோதரி சுகந்தி, நண்பர் பார்வமணி போன்றோரது படைப்புக்களைப்  படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
 
இசையில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு, அதிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் ஈடுபாடு அதிகம். இதைத்
தவிர ஓரளவுக்குக் கர்நாடக சங்கீதத்திலும் ரசனை உள்ளது.
 
ஆகிரா

N Suresh, Chennai

unread,
Oct 23, 2006, 4:47:39 AM10/23/06
to il...@googlegroups.com, akrcons...@gmail.com
அகிரா அண்ணா
 
உங்களைப் பற்றி
அறிய
ஆசைப்பட்டிருந்தேன்.
 
இன்றறிந்தேன்
கொஞ்சம்.
மகிழ்ந்ததென்
நெஞசம்
 
உங்களுக்கென்
வாழ்த்துக்களுக்கா பஞ்சம்!
 
பாசமுடன்
தம்பி, என் சுரேஷ்


 
On 23/10/06, AKR <akrcons...@gmail.com> wrote:


sakthisak...@googlemail.com

unread,
Oct 23, 2006, 7:28:54 PM10/23/06
to இல்லம் (your HOME)
அன்பின் ஆகிரா,

உங்களைப் பற்றி அறிந்தேன்
உள்ளம் முழுவதும்
நனைந்தேன்
உலகம் முழுவதும் வாழும்
உன்னதத் தமிழர் வரிசையில்
உள்ளம் தன்னில் கோர்த்த
மாலையில்
உம்மையும் ஒரு ரோஜாவாய்
உணர்ந்ததினால் நெஞ்சில்
உவகை பூக்குது தொடரட்டும்
உங்கள் உன்னத ஆக்கங்கள்

அன்புடன்
சக்தி

AKR

unread,
Oct 24, 2006, 10:44:41 AM10/24/06
to il...@googlegroups.com
தங்கள் குறள் கூறும் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய பாடம் புகட்டுவதாக
அமைந்துள்ளது. படிப்போர் யாவரும்
மிக்க பயனடைவார்கள்.

ஆன்றோர் பலர் கூடியிருந்த சபையில் தன் பெரிய புராணத்தை அரங்கேற்று முன்
சேக்கிழாருக்கு தன் படைப்பில் தவறு ஏதேனும் நேர்ந்து விடக்கூடாதே என்ற பயம்
ஏற்பட்டதாக "திருவருட் செல்வர்" திரைப் படத்தில் அவ்வேடமேற்று நடித்த நடிகர்
திலகத்தின் வாய்மொழியாக ஏ.பி. நாகராஜன் படைத்துள்ளார்.

சேக்கிழாருக்கு உண்மையில் பயம் இருந்ததோ இல்லையோ, எனக்கு மிக்க பயம் உண்டு.
என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கோ. ஆல்பர்ட் எனும் நண்பர் கவிதைகள்
புனைவதில் வல்லவர். அவர் கவிதைகள் பெரும்பாலும் நாட்டுப் பாடல் வடிவில்
அமைந்திருக்கும். நான் சொந்தமாக சில வரிகளைக் கவிதை என்ற பெயரில் அவரிடம் ஒரு
நாள் சொல்ல அவர்

"கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழி
தானுமதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி"

எனும் வெண்பாவைக் கூறவே அன்றிலிருந்து கவிதை புனையும் தொழிலைக் கவிஞர்களிடம்
விட்டு விட்டு ஒரு கவிதா ரசிகனாக ஆகிவிட்டேன்.

நாங்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்ற காலத்தில் எனக்கும் ஆல்பர்ட்
அவர்களுக்கும் புகை பிடிப்பது, அதிலும் பீடி பிடிக்கும் பழக்கம் உண்டு.
ஒருவரிடம் பீடி தீர்ந்து போனால் மற்றவரிடம் கேட்டு வாங்கிப் பிடிப்போம். ஒரு
நாள் பீடி கேட்டு ஆல்பர்ட் என் அறைக்கு வந்தபோது நான் விளையாட்டாக பீடியின்
மேல் ஒரு கவிதை பாடு அப்பொழுது தான் பீடி தருவேன் என, ஒரு பேனாவும் பேப்பரும்
எடுத்துக்கொண்டு ஐந்தே நிமிடங்களுக்குள் ஒரு வெண்பா எழுதிவிட்டார்,

"பீடிகை போட்டுநான் பீடிவாங்கல் என்றனக்குப்
பீடில்லை என்பதனால் பாடுகிறேன் - மாடேநீ
பாடியதற்கோர் பீடி பாவலனுக்கீந்திடில்
பீடுறுவாய் இன்னுந்தா பீடி"

என்று. "மாடே" என்றால் செல்வனே என்றும் ஒரு பொருள் உள்ளதையும் எனக்குச்
சொன்னார்.

"கேடில் விழுச்செல்வம் கல்வி - ஒருவருக்கு
மாடல்ல மற்றையவை"

எனும் திருக்குறள் நினைவுக்கு வந்தது.

ஆகிரா

vishalam raman

unread,
Oct 24, 2006, 11:55:46 AM10/24/06
to il...@googlegroups.com
அன்பு ஆகிரா  விஷியின் அழகில்  விழாதவர்  யாரோ?
அன்பின்  உருவம்   அத்னால் யார்  அங்கு போனாலும்
அந்த அழகில் விழுந்து பெருமை அடைகிறார்கள்
அன்பு விஷிக்கு  என் ஆசிகள்... உங்களைப் பற்றி
முழுவதும் அறிந்துக்கொண்டேன் .உங்களுக்கு
தமிழ்த் தொண்டில் ஈடுப்ட உறுதுணையாக இருந்த  உங்கள் தந்தைக்கு என்  பணிவான வணக்கங்கள்
 அன்புடன் விசாலம்  

 
On 23/10/06, AKR <akrcons...@gmail.com> wrote:


அஞ்ஞானி

unread,
Oct 24, 2006, 12:14:14 PM10/24/06
to இல்லம் (your HOME)
ஆல்பர்ட்டின் இரண்டு
கவிதைகளையும் மிகவும்
ரசித்துப் படித்தேன். வாய்
விட்டு சிரித்தேன்.
'பீடு' (பெருமை) கொண்டேன்
ஆ.கி.ரா என் நண்பர் என்று.

AKR

unread,
Oct 24, 2006, 12:48:38 PM10/24/06
to il...@googlegroups.com
முதற் கவிதை வாங்கோழியப் பற்றியது ஔவையாருடையது.
 
பீடிக் கவிதை தான் நண்பருடையது. "இன்னுந்தா பீடி" என்று குறிப்பிட்டுள்ள காரணம், கவிதை புனையு முன்பே, கவிதை எழுத மூட் வர வேண்டுமென்றால் ஒரு பீடி பிடிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி ஒரு பீடியைப் பிடித்துக் கொண்டே அப்பீடி முழுதும் எரிந்து முடிக்கு முன் கவிதை எழுதி விட்டார். எழுதி முடித்ததும் இன்னும் ஒரு பீடி வாங்கிக்கொண்டார்.
 
ஆகிரா
 
----- Original Message -----
From: "அஞ்ஞானி" <ong...@azhagi.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>

N Suresh, Chennai

unread,
Oct 25, 2006, 1:17:20 AM10/25/06
to il...@googlegroups.com, AKR
 
 
அன்பிற்கினிய அண்ணா,
 

"கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழி
தானுமதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி"
 
 
மயில்களின் 
ஆணவம்  தாங்கமுடியவில்லை. 
 
நடனத்தை ரசிக்க
வாங்கோழிகளுக்கு அறிவுமில்லை. 
 
பாவனைகளின் அர்த்தம்
வாங்கோழிகளுக்கு புரியாதவண்ணம். 
 
புரிந்து கொள்ள தகுதியற்ற
வறுமையும் தாங்கமுடியாமல்
 
வாங்கோழியில் சிலவை
தன்னால் முடிந்தவை
இதோ என்று ஆட
 
இன்று மயிலகளோ
வியப்பில்
 
கவிதை பாடும் வாங்கோழி
தம்பி
என் சுரேஷ்

 

mazalais

unread,
Oct 25, 2006, 1:34:23 AM10/25/06
to இல்லம் (your HOME)
அருமை சுரேஷ், அருமை.

தன்னடக்கத்திலும் ஒரு
கவிஞனின் இயல்பான
ரசிக்கும்படியான கர்வம்.

'அறிவில்லை', 'வறுமை',
'தன்னால் முடிந்தவை' எனச்
சொல்லி இறுதியில்
'இன்று மயில்களோ வியப்பில்,
கவிதை பாடும் வாங்கோழி'

:) அருமை.

--- விஷி
'ஒன்றுமே புரியாத' இவனுக்கு
:) உங்கள் கவிதைகள்
புரிகின்றன. :) :)
பீடு என்றால் பெருமை என்று
அகராதி பார்த்தே தெரிந்து
கொண்டது உண்மையே!

அஞ்ஞானி

unread,
Oct 25, 2006, 1:50:18 AM10/25/06
to இல்லம் (your HOME)
"விஷி" எழுதிக்கொள்வது:
---------------------------------------------
mazalais முகவரியில்
பின்னூட்டம் இட்டிருப்பது
நானே. AKR-ஆ விஷியா என
நினைத்து குழம்பிட
வேண்டாம். mazalais account-இற்கு
இருவருக்குமே access உண்டு. ஒரு
setting மாற்ற அதில் நுழைந்த
நான் அந்த முகவரியிலேயே
இட்டு விட்டேன், "தவறுதலாக".

- "விஷி"

N Suresh, Chennai

unread,
Oct 25, 2006, 1:56:09 AM10/25/06
to il...@googlegroups.com, a...@airtelboradbrand.com
மிக்க நன்றி விஷி,
 
பாசமுடன்
என் சுரேஷ்

 

AKR

unread,
Oct 25, 2006, 2:46:42 AM10/25/06
to il...@googlegroups.com
இதில் தவறேதுமில்லை. இதுவே முறை.

ஆகிரா
----- Original Message -----
From: "அஞ்ஞானி" <ong...@azhagi.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>
Sent: Wednesday, October 25, 2006 11:20 AM
Subject: Re: self introduction

அஞ்ஞானி

unread,
Nov 1, 2006, 10:13:15 PM11/1/06
to இல்லம் (your HOME)
செ.ப.ரா - செனப்பிரட்டி
பசுபதி ராமமூர்த்தி

From: separa
Date: Wed, 01 Nov 2006 18:43:28 -0800
Subject: Re: நான் கண்ட செ.ப.ரா. -
சுருக்கமாக
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>

அன்புள்ள விஷி, உங்கள்
கோரிக்கை
நிறைவேற்றப்பட்டது.

அன்புடன்
செபரா.

செ.ப.ரா - செனப்பிரட்டி
பசுபதி ராமமூர்த்தி; --- ஒரு
அறிமுகம்

பல முறை விஷி என்னை எழுதச்
சொல்லி வற்புறுத்தியும்,
இன்றுவரை எழுதவில்லை. இது
போன்ற ஒரு குழுவிற்கு,
என்னை அறிமுகம் செய்து
கொள்வது என்பது எனக்குப்
புதிய அனுபவம். சுய
விளம்பரம் போலத்
தோன்றினால், அது எனக்கு
எழுதத் தெரியாததன் பிழை.

தற்பொழுது L&T Group Company ஒன்றில்
கணிணித் துறையில் நிர்வாக
அதிகாரியாகப் பணி
புரிகிறேன். 37 வருட
சேவைக்குப் பின், இன்னும்
ஆறு மாதத்தில் பணி ஓய்வு
எதிர்பார்த்துக்
கொண்டிருப்பவன் என்றாலே
வயது பற்றி கணிக்க
முடியும். வயது 57.

எனது தந்தையார் திரு S.R.
பசுபதி

ஆசிரியப் பெருந்தகையாய்,
வடமொழி அறிவதனில்
வல்லுநராய்,
பேசுமொரு சிறப்பின்
நட்பைப் பேணி
வளர்த்தவராய்,
மாசில்லா வாழ்வதனில், நல்ல
மறையவர் வழியொட்டி,
நேசமுடன் எனை வளர்த்தார்
அவர்தம் (திரு. பசுபதியின்)
நினைவதனைப் போற்றுவனே!

ஒரு பெரியப்பா தமிழ்ப்
பண்டிதர்; மற்றொருவர்
புல்லாங்குழல் கலைஞர்;
ஒன்றுவிட்ட பெரியப்பா
தமிழிசைமணி ஆதிசேஷன் (கே.பி
சுந்தராம்பாளின்
தனித்திருந்து வாழும்
தவமணியே இவரது பாடல்தான்)
ஒரு பாடலாசிரியர்

எனது தாய் திருமதி
V.K.நாமகிரி இலக்குமி

இனியவள் எந்தாய்;
இதயமுவந்து
பிறர்க்குதவும் பாங்கின்,
தனியொருத்தியாய்த்
தனைநிறுத்தும்
தகைமையினால் நட்பு வளர்,
கனிமொழி பேசாள் எனினும்
(பிறரைக்) கடிந்து ஒரு
வார்த்தை சொல்லாள்!
நனி சிறப்பின் (எந்தாய்
இங்கு) நான் வணங்கும்,
நாமகிரி இலக்குமியே!!

(அந்தக் காலத்திலேயே தனது
தந்தை initial ஆன V.K என்பதனை தன்
பெயருக்கு முன்னால்
போட்டு புரட்சி செய்தவர் -
எனது தந்தையும்
பெருந்தன்மையாய் அதனை
ஒத்துக் கொண்டது
மற்றுமொரு சிறப்பு)

எனது மனையாள் திருமதி
R.ஜெயந்தி

மனை விளங்க வந்ததனால் (என்)
மதிப்பினிலே உயர்ந்தவளை,
எனை ஆளும் சிறப்பினிங்கு
எந்தனது மனையாள்தன்னை,
அனைவரும் அறிந்திடவே அழகு
தமிழ்க் கவிதையொன்றை,
புனைந்திட்டேன்; பொன்னில்
வைரம், பொதிந்து வைத்த
அழகே போல!!


ஜெயந்தி என் மனைவி - "மனை
மாட்சி அது என் மனையாள்
மாட்சி" என்ற எனது
படைப்பின் கதாநாயகி. இதனை
விஷியின் முயற்சியினால்
நண்பர் ஜவஹர் மூலம் வலைத்
தளத்திலே வெளியிட்டேன்.

இரண்டு பெண்கள்; எனதிரு
கண்கள். மூத்தவள் அனுராதா (B
Com, CWA,CA & CPA) மணமாகி,
அமெரிக்காவில் நிலைத்தவள்;
இரண்டாமவள் ஆர்த்தி B Com
முடித்து MBA (Fin) படித்துக்
கொண்டிருக்கிறாள்.

நான் வர கவி அல்ல; (எழுத)
வந்தால் மட்டுமே, கவி.

வடமொழியின் பொருள்
தெரிந்து வேண்டுவது
சிறப்பு என நினைத்ததால்
உருவாகியது "பொன்மழை
பொழியத் துதி" (பாடல்
வடிவில் கனகதாராவின் தமிழ்
மொழிபெயர்ப்பு - மங்கையர்
மலரில் வெளிவந்தது).
வடமொழியில் உள்ள ஆதி
சங்கரரின் இதர சக்திப்
பாமாலையினையும் தமிழில்
மொழிபெயர்க்க வேண்டும்
என்பது அவா. என்று முடியும்
எனத் தெரியவில்லை.

"அன்னமளிக்கும் அன்னையைத்
துதி" (அன்னபூர்ணாஷ்டகம் -
இன்னும் 7 ஸ்லோகம் மீதம்
இருக்கிறது). இதைத் தவிர
அருள்மிகு லலிதா தேவியின்
ஐம்பொன்னாரம் (லலிதா
பஞ்சரத்னம்), ஆதி சக்தியின்
அருளமுதம், காஞ்சிப்
பாமாலை, அருள்மிகு
செல்லாண்டியம்மன் 108,
கந்தரலங்காரம் (புதியது)
என்பன எனது பக்திப்
படைப்புக்களில் சில.

எல்லோரும் ஸ்ரீ ராமஜெயம்
எழுதும் பொழுது நான்
சற்றே வித்தியாசமானவனாக
இருக்க எண்ணியதால்,
"முருகனுக்கு முன்னூறு"
என்ற தலைப்பில், காலையில்
முதன் முதலில் நான் கேட்ட
சொல், அன்றைய நாளில் முதன்
முதலில் என் நினைவுக்கு
வந்த ராகம் இதனை
அடிப்படையாகக் கொண்டு
(பெரும்பாலும் கர்நாடக
இசையில் அமைந்தது)
இன்றுவரை, ஏறக்குறைய 600+
பாடல் இயற்றியுள்ளேன்.
இதைத்தவிர ஸ்ரீ
ராகவேந்திரர் (15 பாடல்கள்),
விநாயகர் (12 பாடல்கள்),
திருமால், சிவன் என்றும்
என் மனைவி (37 பாடல்கள்), என்
மகள், அன்னை (59 பாடல்கள்)
மேலும் சில தனிப்பட்ட
பாடல்களுமாக ஏறக்குறைய 1500+
பாடல்கள் இயற்றியுள்ளேன்.
ஆனால் முறையாக சங்கீதம்
பயிலாத காரணத்தால்,
இப்பாடல்களின் ராகம்,
தாளம் இவையெல்லாம்
சரியாகக் குறிப்பிட
முடியவில்லை. எந்த
ராகத்தில் பாடுவது என்பது
எனக்கு மட்டுமே தெரிந்த
ஒன்று. சங்கீதம் அறிந்த
ஒருவர் உதவிக்கு வரும்
பொழுது இவை
முறைப்படுத்தப்படும் என
நம்புகிறேன். நாள்
எந்நாளோ அறியேன்!

இவை அனைத்துமே எனக்காக, என்
மன நிறைவிற்காக மட்டுமே
இயற்றியதால் எவரிடமும்
சொன்னதில்லை; முறையாக
எழுதியும் வைத்ததில்லை.
என் மனைவிக்குக் கூடச்
சமீப காலம் வரை தெரியாது!
முரசு அஞ்சல், பாரதி,
ஸ்ரீலிபி என பல தமிழ்
செயலியினையும்
பயன்படுத்திப் பார்த்த
காரணத்தால், "அழகி" யினைக்
கண்ட பின்னர் மற்றவை
அவ்வளவு சிறப்பாகத்
தோன்றவில்லை. அது முதல்
எனது படைப்புக்களுக்கு
எனது அழகியும் (என் மனைவி)
அழகியுடன் உறுதுணையாக
இருக்கிறாள். இப்பொழுது
கணிணியில் பதிகிறேன். எனது
மனைவியும் அழகியினைக்
கற்றுச் சில பாடல்களைப்
பதிவு செய்ய
ஆரம்பித்துள்ளாள். எனது
காலத்திற்கு முன் அவற்றை
குறுந்தகடில் பதிவு செய்து
வெளியிட விருப்பம்.
ஆண்டவன் சித்தம் அதுவே
நடக்கும்.

அழகன் (விஷி) என்னை
அவ்வப்பொழுது
ஊக்குவிக்கின்ற
காரணத்தால், பகுதி நேர
மொழி பெயர்ப்பாளனாக
இருக்கும் நான் பணி
ஓய்விற்குப் பின் முழு நேர
மொழி பெயர்ப்பாளனாக
எண்ணியுள்ளேன்

படைத்தவன் இறைவனென்றால்
(மனப்)பாரம் தீர்ப்பதவன்
கடனே!
இடைப்பட்ட காலத்து இங்கு
எனக்கேன் இனிக் கவலை;
இறையொன்று உண்டு என
இதயத்துக் கொண்டதனால்
குறையொன்றுமில்லை;
(நாளும்) குமரன் இங்கெனைக்
காப்பான்!!

இதுவே எனது நம்பிக்கையாக,
(விஷியனைய) நண்பர்கள்
உடனிருக்க, இனி வரும்
நாளதும் நன்னாளே என
நம்பும்

அன்பின்,
செபரா.

separa

unread,
Nov 2, 2006, 2:56:35 AM11/2/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள சுரேஷ்- உங்கள்
வழியே ஒரு சிந்தனை

"வான்கோழி தனையுமொரு
வண்ணமயிலாய் நினத்ததனால்,
ஆங்கதன் முன் சிறகு
விரித்து அழகு நடம்
ஆடியதன்,
பாங்கதனை ரசித்த மஞ்ஞை (தன்)
பாதை வழி சென்றிடவும்,
ஈங்கதன் சிறப்பறியா எவனோ
ஒருத்தன் எழுதியது ஈது!!"

மஞ்ஞை - மயில்

எளிதில் புரிவதற்காக,
சொற்றொடர்களைப் பிரித்து
எழுதியுள்ளேன்.
நக்கீரர்கள் மன்னிக்கவும்.

பொருள்:

தன்முன் நடனம் ஆடியது
வான்கோழி என்பதனை மயில்
அறியும்; வான்கோழிக்கும்
தன்னால் வண்ணமயிலைப் போல
ஆட முடியாது என்பது
தெரியும் இருப்பினும்
தளராது முயற்சி செய்வதனை
(பாராட்டுமுகத்தான்)
மயிலும் குறை சொல்லவில்லை.
ஆனால் இவ்விரண்டையும்
பார்த்திருந்த (அதற்கு
தொடர்பேயில்லாத) ஒரு
வழிப்போக்கன் எழுதிய பாடல்
இது (இப்பாட்டைப்பாட என்ன
தகுதி உடையவன்?)

இது எனது கருத்து
நம்மில் பலர் வான்கோழியாக
இருப்பினும், வண்ணமயிலாக
நடனம் ஆட முயற்சிக்கிறோம்.
இது ஒரு Positive thinking" எனக்
கொள்வோம். எள்ளி
நகையாடுவோரும் உண்டு. அதனை
எப்படி நாம் எடுத்துக்
கொள்கிறோம் என்பது நாம்
வான்கோழியா அல்லது வண்ண
மயிலா என்பதனைப்
பொருத்தது. இந்த மனிதனை
மறந்துவிடுவோம். மயிலே
பொருட்படுத்தாத ஒன்றை
இவனெதற்கு பாட வேண்டும்?
இத்தகையோரும்
இருக்கிறார்கள். இவர்களை
மறந்து விடுவோம்

வாழ்க்கையில் முன்னேற
வேண்டுமாயின், நம்மை
வான்கோழியாக,
குறையுடையவராக
எண்ணக்கூடாது. மறந்தும்
கூட, விளையாட்டாகக் கூட
நம்மை நாமே இழிவு
படுத்திக் கொள்ளக்கூடாது.
நம்மை இழிவாகப் பேசுவோரை
சட்டை செய்யக்கூடாது. நம்
குறையினை நாமறிவோம்.
"உள்ளுவதில் உள்ளல்
உயர்வுள்ளல்" வள்ளுவரை
நினையுங்கள்

(விஷி இதற்கு உதாரணம். தனது
குறையினைப் பெரிதாக
எண்ணாது முயன்று சாதனை
படைத்தவர் என்பதனால்.)


சகோதரி கல்கியும் கூட
வான்கோழியாக இருப்பினும்
தன் இடைவிடா
செயற்திறத்தால் வண்ண
மயிலாக முயற்சிப்பதனை
அவரது
வலைத்தளத்திலிருந்து
அறிந்து கொண்டேன். இவரைப்
போல இன்னும் பலரும் சாதனை
படைத்திருக்கிறார்கள்
என்பதனையும் இணையதளம்
மூலம் அறிந்தேன். நான் ஏதோ
செய்ததாக நினைத்திருப்பது
அற்பம் என்பதனையும்
உணர்ந்தேன்.

vishalam raman

unread,
Nov 2, 2006, 3:30:50 AM11/2/06
to il...@googlegroups.com
அன்பு செபரா .நான் தேடிகொண்டிருந்த நபர் நீங்கள்தான்
என்று தெரியும் போது மிகவும் ஆச்சரியப்பட்டேன்
அன்னையின் அருள்தான் கனகதாரா ஸ்லோகம்
மொழிப் பெயர்ப்பைப் பார்த்து  இவர் யார் என்று  தெரியவில்லையே  ..பாபா மனது வைத்தால் தானே
தெரியும்  என்று விட்டுவிட்டேன் இன்று உங்கள்
அறிமுகத்தின்  மூலம்  என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .உங்கள் நட்பு எனக்கு கிடைத்த
பாக்கியம் தான் .அன்னையைப் பற்றி எழுதியப் பாட்டை அனுப்பி வைக்கவும்  சங்கீதம் தான்  என் உயிர், உங்களைக்
காட்டிய என் அருமை விஷிக்கு நன்றி  அன்புடன் விசாலம்   

AKR

unread,
Nov 2, 2006, 2:30:25 PM11/2/06
to il...@googlegroups.com
அன்பு செ.ப.ரா.
தங்கள் பாரம்பரியமும் பணிகளும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன்வந்தெதிர்த்தவன் யாரடா?

என்ற ஓட்டக்கூத்தரின் வரிகளை மிஞ்சியதாய்
எதுகையும் மோனையும் தங்கள் தமிழில் கொஞ்சி விளையாடுகின்றன.

இத்தகைய தமிழ் வளர்க்கும் நல்லோர் கூடி மகிழும் இல்லத்தில் வாழ நான் என்ன தவம்
செய்தேனோ?
தங்கள் தமிழ்ப் பயணம் இனிதே தொடர இறைவனை வேண்டுகிறேன்.

தங்கள் தமிழ்ப் பணியில் என்னால் ஏதேனும் உதவி செய்ய இயலுமானால் முழு மனதுடன்
செய்யக் காத்திருக்கிறேன்.

ஆகிரா
----- Original Message -----
From: "அஞ்ஞானி" <ong...@azhagi.com>

To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>

Sent: Thursday, November 02, 2006 8:43 AM
Subject: Re: self introduction

separa

unread,
Nov 3, 2006, 2:57:28 AM11/3/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள சகோதரி
எனது தந்தையின் மேல்
மதிப்பிருந்தாலும், என்
தமிழ் அறிவு
சாணையிடப்பட்டது
நண்பர்களால்தான். அவர்கள்
என்னைச் சீண்டி விட்டு
கவிதை புனையும்படி
செய்யவில்லையென்றால், நான்
முயற்சி செய்திருப்பேனோ
என்னவோ தெரியாது. நண்பர்
திரு பத்மநாபன் (TVS
குடும்பத்தின் ஒரு
அங்கத்தினர்) அவர்தான்
முதன் முதலில் இந்த
சீண்டலைத் தொடங்கி
வைத்தவர்.
குறிப்பிடத்தக்கவர். பிறகு
விஷி மற்றும் ஜவஹர்லால்,
திருமதி கல்யாணி மாமி,
(பணத்திற்கு வழி
பண்ணியாயிற்று; சோத்துக்கு
வழி பண்ணக்கூடாதா எனக்
கேட்டு அன்ன பூர்ணாஷ்டகம்
மொழி பெயர்ப்பு ஆரம்பிக்க
உதவியவர்), திருமதி ரேவதி
சங்கரன் (என் வீட்டிற்குத்
தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு எனது மனைவியை
"உசுப்பேற்றி" கனகதாராவை
மங்கயர் மலரில்
அரங்கேற்றியவர்) என
இன்னும் பலர்.
கலைஞர்களுக்கே அவர்களது
ரசிகர்கள்தான்
பற்றுக்கோடு.
வளர்ச்சிக்குக் காரணம்.
ஆண்டவன் அவர்களுக்கு நல்ல
ஆரோக்கியமும் ஆயுளும்
நல்கட்டும்.

கீழ்க்கண்ட பாடல் இன்றைய
சமையல் - என்றோ கேட்ட பாடல்;
ராகம் இன்று ஞாபகம் வந்தது.
"மனதுக்குகந்தது முருகனின்
ரூபம்" - பாம்பே ஜெயஸ்ரீ
("ரீதிகெளள" ராகத்தில் என
நினைக்கிறேன்) பாடியது.
நீங்களும் பாடிப்
பார்த்துச் சரிதானா எனச்
சொல்லவும்.

நினைவில் நிலைத்திடும்,
ஒரு திரு நாமம்.
நித்தமும் எனைக் காக்கும்,
வித்தகன் திருநாமம்!

நினைவில்

அலைகடல் துரும்பெனவே,
அலைக்கழியும் மனதில், (2)
ஆனந்தம் தரும் அந்த,
அறுமுகன் திருநாமம்!!

நினைவில்

பாசமுடன் நேசமுடன், பழகும்
நல் உறவதுவும்;
ஈசனவன் திருவருளால்,
இசைந்ததெல்லாம் பெறவும்;
(2)
பூசுரரும் பணியும் அந்தப்,
புண்ணியனின் திருவடியை
வாசமலர் தூவி நித்தம்
வணங்கியே துதிக்கும்
எந்தன்


நினைவில்

vishalam raman

unread,
Nov 3, 2006, 3:21:56 AM11/3/06
to il...@googlegroups.com
அன்பு செபெரா  நன்றி பாடல் மிகவும் எளிதாகவும்
மனரஞ்சகமாகவும்  இருக்கிறது  நான் இதை வசந்தா ராகத்தில்  பாடிப் பார்த்தேன் மிக நன்றாக அமைந்தது
பாண்டிசேரி அன்னையைப் பற்றியும் எழுதி இருந்தால்
அனுப்பவும் .வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்

 

separa

unread,
Nov 3, 2006, 3:15:26 AM11/3/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆகிரா

உங்களால் முடியும் ஒரு
நாள் உங்கள் தந்தையாரைப்
பார்த்து, தமிழில் உரையாட
வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும். இன்னும்
எனக்குப் புரியாத பல
செய்திகளை அவரிடம்
கேட்டுத் தெரிந்து கொள்ள
வேண்டும். பிள்ளைத்தமிழில்
முருகனைப்பாட, சில
செய்திகளை அறிய வேண்டும்.

இன்றைய கற்பனை. ராகம்
எனக்குத் தெரியும்.
எனினும் இது என்ன
ராகத்தில் பாடினால்
சிறப்பாக இருக்கும் என்று
சொல்லுங்களேன்


வருவேன் ஒருநாள் உங்கள்
வாசல்தனையே தேடி,
அருளதனைப் பெறவே
அகமகிழ்ந்தே ஓடி,

வருவேன்

பொருள் வேண்டி அலையும்
இந்த, புண்ணிய பூமிதனில்,
அருள்தனையே வேண்டும்,
நல்லோர் அறிவுதனைத் நாடி!

வருவேன்

கருவான நாள் முதலாய், கற்ற
பல வித்தைகளும், (2)
குருவின் முன்னால் நிற்க,
(அன்று) குறையெனத்
தெரியுமென்பார்!
ஒரு முறையேனும் நானும்,
உரையாடி மகிழ வாய்ப்பு
தருவது உம் கடமை; தமிழுக்கு
அது உவகை!

வருவேன்

AKR

unread,
Nov 3, 2006, 8:38:00 AM11/3/06
to il...@googlegroups.com
அன்பு செபரா,

என் தந்தைக்கு 84 வயது. அவர் கோவையில் என் இளைய சகோதரியுடன் வசித்து வருகிறார்.
அவருக்குப் பிள்ளைத் தமிழ் பற்றித் தெரிந்ததெல்லாம், முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் முதலான பல நூல்கள் புத்தகக்
கடைகளில் கிடைக்கின்றன என்பதும், மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது மட்டுமே. தமிழில் ஆராய்ச்சி
செய்யுமளவிற்கு அவரோ நானோ தமிழ் பயிலவில்லை.

நான் வாய்ப் பாட்டு,டன் புல்லாங்குழல், புல் புல் தாரா, மௌத் ஆர்கன் முதலான
வாதியங்களும் பயின்றுள்ளேன், அனைத்தும் தானே தனக்கு குரு என்ற முறையில். ஆனால்
கர்நாடக சங்கீதம் முறையாகப் பயிலவில்லை. ஏதோ சில ராகங்களை அடையாளம் காணத்
தெரியும். மற்ற படி பாடல்களுக்கு ராகம் அமைப்பது போன்றதெல்லாம் எனக்கு எட்டாக்
கனியாகும். இருப்பினும் காஞ்சிபுரத்தில் சங்கீதம் தெரிந்தவர்களிடம் கேட்டுப்
பார்க்கிறேன்.

ஆகிரா

----- Original Message -----
From: "separa" <sepa...@gmail.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>

Sent: Friday, November 03, 2006 1:45 PM
Subject: Re: self introduction

Vinoth

unread,
Nov 3, 2006, 8:58:00 AM11/3/06
to il...@googlegroups.com
இசையில் ஆர்வம் உள்ள நான் செய்ய முடிந்ததெல்லாம் வாழவின் ஒரு பகுதியை தொலைத்தது.... :(

என்னால் முடிந்ததெல்லாம் நினைக்கும் தலைப்பில் கூகிளில் குழுக்களை ஆரம்பிப்பது. அந்த வகையில் ஆரம்பித்த ஒன்று இன்னிசை.

தொடங்கியதுதான் ஞாபகம் . அந்த பக்கம் தலைவைப்பது கூட இல்லை. :)

இன்னிசை
--
வினோத்

அஞ்ஞானி

unread,
Nov 3, 2006, 10:19:21 PM11/3/06
to இல்லம் (your HOME)
From: separa

To: இல்லம் (your HOME)
Sent: Saturday, 04 November, 2006 8:29 AM
Subject: Re: self introduction

அன்புள்ள சகோதரி
ஜன ரஞ்சகம் (mass appeal) எனக்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
மனரஞ்சகம் (mind appeal) என்பது
இப்பொழுதுதான்
கேள்விப்படுகிறேன்.
எனினும் சிறப்பாகத்
தெரிகிறது. மனதுக்குப்
பிடித்தது. வடமொழியும்
(ரஞ்சகம்) தமிழ் மொழியும்
(மனம்) இணைந்த சொல்.
வசந்தா ராகத்தில் சில
மனரஞ்சகமான பாடலைக் (நான்
எழுதியதைத் தவிர)
குறிப்பிடவும்.

இன்றைய சமையல்

மெட்டு: வெற்றி
எட்டு திக்கும் எட்ட என்ற
பாட்டைப் போல்

வள்ளலவன் நாமம் சொல்ல, வளம்
பெருகும். நல்ல
உள்ளங்களும் உவந்திங்கே,
ஒரு திருப் புகழ் பாடி

வள்ளலவன்

நல்லவராய்ப் பிறர் நலன்,
நாடுமொரு மனமதனை, (2)
வல்லவன் முருகன் எங்கள்,
வடிவேலன் அருள் செயவே

வள்ளலவன்

இல்லம் சிறந்திடவும், இனிய
தமிழ்ப் பாடல்தன்னில்,
இறைவனின் அருள் வேண்டி,
இசைத்திடும் அறிவதனை,
சொல்லும் சிறப்பினிங்கு,
(அந்த) சுகம் தரும்
அனுபவத்தை,
எல்லோரும் பெற அருளும்,
இளையனைப் பாடிடவே!!

வள்ளலவன்

அஞ்ஞானி

unread,
Nov 3, 2006, 11:26:04 PM11/3/06
to இல்லம் (your HOME)
அன்பர்களே!

'message moderation queue'வில் கூகிள்
சற்று சறுக்கியுள்ளது.
அவர்கள் அதை எப்பொழுது சரி
செய்வார்கள் என்று
தெரியவில்லை. எனவேதான்,
நானே இந்த மடலை forward
செய்துள்ளேன்.

வேந்தன் அவர்களுக்கு:
நீங்கள் இனி நேரடியாகவே
மடலிடலாம். settings
மாற்றியாகிவிட்டது. நேற்றே
இதைச்செய்திருக்க
வேண்டும். மறந்து விட்டேன்.

அன்புடன்
- விசுவநாதன்

-----------------------
From: வேந்தன் அரசு
To: il...@googlegroups.com
Sent: Saturday, 04 November, 2006 9:15 AM
Subject: Re: self introduction

>


> வருவேன் ஒருநாள் உங்கள்
> வாசல்தனையே தேடி,
> அருளதனைப் பெறவே
> அகமகிழ்ந்தே ஓடி,
>
> வருவேன்
>
> பொருள் வேண்டி அலையும்
> இந்த, புண்ணிய பூமிதனில்,
> அருள்தனையே வேண்டும்,
> நல்லோர் அறிவுதனைத் நாடி!
>
> வருவேன்
>
> கருவான நாள் முதலாய், கற்ற
> பல வித்தைகளும், (2)
> குருவின் முன்னால் நிற்க,
> (அன்று) குறையெனத்
> தெரியுமென்பார்!
> ஒரு முறையேனும் நானும்,
> உரையாடி மகிழ வாய்ப்பு
> தருவது உம் கடமை; தமிழுக்கு
> அது உவகை!
>
> வருவேன்
>
> அன்புடன்
> செபரா


இந்தபாடல் மிக இனிமையாக
இருக்கிறது,
இயற்றியவருக்கு
பாராட்டுக்கள்.

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

separa

unread,
Nov 3, 2006, 9:59:21 PM11/3/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள சகோதரி
ஜன ரஞ்சகம் (mass appeal) எனக்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
மனரஞ்சகம் (mind appeal) என்பது
இப்பொழுதுதான்
கேள்விப்படுகிறேன்.
எனினும் சிறப்பாகத்
தெரிகிறது. மனதுக்குப்
பிடித்தது. வடமொழியும்
(ரஞ்சகம்) தமிழ் மொழியும்
(மனம்) இணைந்த சொல்.
வசந்தா ராகத்தில் சில
மனரஞ்சகமான பாடலைக் (நான்
எழுதியதைத் தவிர)
குறிப்பிடவும்.

இன்றைய சமையல்

மெட்டு: வெற்றி


எட்டு திக்கும் எட்ட என்ற
பாட்டைப் போல்

வள்ளலவன் நாமம் சொல்ல, வளம்
பெருகும். நல்ல
உள்ளங்களும் உவந்திங்கே,
ஒரு திருப் புகழ் பாடி

வள்ளலவன்

நல்லவராய்ப் பிறர் நலன்,
நாடுமொரு மனமதனை, (2)
வல்லவன் முருகன் எங்கள்,
வடிவேலன் அருள் செயவே

வள்ளலவன்

இல்லம் சிறந்திடவும், இனிய
தமிழ்ப் பாடல்தன்னில்,
இறைவனின் அருள் வேண்டி,
இசைத்திடும் அறிவதனை,
சொல்லும் சிறப்பினிங்கு,
(அந்த) சுகம் தரும்
அனுபவத்தை,
எல்லோரும் பெற அருளும்,
இளையனைப் பாடிடவே!!

வள்ளலவன்

அன்புடன்
செபரா

வேந்தன் அரசு

unread,
Nov 3, 2006, 10:45:21 PM11/3/06
to il...@googlegroups.com

>
> வருவேன் ஒருநாள் உங்கள்
> வாசல்தனையே தேடி,
> அருளதனைப் பெறவே
> அகமகிழ்ந்தே ஓடி,
>
>                                     வருவேன்
>
> பொருள் வேண்டி அலையும்
> இந்த, புண்ணிய பூமிதனில்,
> அருள்தனையே வேண்டும்,
> நல்லோர் அறிவுதனைத் நாடி!
>
>                                     வருவேன்
>
> கருவான நாள் முதலாய், கற்ற
> பல வித்தைகளும்,                  (2)
> குருவின் முன்னால் நிற்க,
> (அன்று) குறையெனத்
> தெரியுமென்பார்!
> ஒரு முறையேனும் நானும்,
> உரையாடி மகிழ வாய்ப்பு
> தருவது உம் கடமை; தமிழுக்கு
> அது உவகை!
>
>                                      வருவேன்
>
>                               அன்புடன்
>                                செபரா

இந்தபாடல் மிக இனிமையாக இருக்கிறது, இயற்றியவருக்கு பாராட்டுக்கள்.

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2006, 8:14:33 AM11/4/06
to il...@googlegroups.com
>>வேந்தன் அவர்களுக்கு: நீங்கள் இனி நேரடியாகவே மடலிடலாம்

அன்பின் விஷி, நான் நேரடியாகதானே மடல் இட்டேன்.
நான்  குழுமமும்் செல்்லும் வழக்கம்  மேற்கொள்ளவில்லை

அஞ்ஞானி

unread,
Nov 4, 2006, 10:32:47 AM11/4/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தன்
அவர்களுக்கு,

நான் சொன்ன 'நேரடியாக' வேறு.

நேற்று உங்களது குழும
உறுப்பினர் அமைப்புகளில்,
நேரடியாக நீங்கள்
மடலிடும்படி நான் மாற்றம்
செய்யாமல் விட்டதால்,
உங்கள் மடல் மட்டறுத்தல்
வரிசைக்குச் சென்று
விட்டது. அந்த நேரத்தில்
கூகிளில் ஏதோ பிரச்சினை
காரணமாய் மட்டறுத்தல்
வரிசையிலிருந்து உங்கள்
மடலை வெளியேற்றவே
முடியவில்லை. அதனால்,
தாமதம் போக்க, எனது
'Inbox'-இலிருந்து நானே உங்கள்
மடலை வெளியிட்டு விட்டேன்.
இனி உங்கள் மடல்
மட்டறுத்தலுக்குச்
செல்லாது. நேரடியாகவே
குழுமத்தில் தெரிந்து
விடும். இதை நான் முந்தைய
மடலில் விளக்கமாய்ச்
சொல்லத் தவறி விட்டேன்.

மிக்க அன்புடன்
விஷி

AKR

unread,
Nov 4, 2006, 11:19:27 AM11/4/06
to il...@googlegroups.com
"மட்டறுத்தல்" என்றதும் நினைவுக்கு வரும் பாடல்:

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியனிங்கில்லை
குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலையிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே.

ஆகிரா

----- Original Message -----
From: "அஞ்ஞானி" <ong...@azhagi.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>

Sent: Saturday, November 04, 2006 9:02 PM
Subject: Re: self introduction

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2006, 3:45:16 PM11/4/06
to il...@googlegroups.com
"மட்டறுத்தல்" என்றதும்  நினைவுக்கு வரும் பாடல்:
மட்டுறத்தல் தான் பொருத்தமான சொல்.


On 11/4/06, AKR <akrcons...@gmail.com> wrote:
"மட்டறுத்தல்" என்றதும்  நினைவுக்கு வரும் பாடல்:

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2006, 3:45:43 PM11/4/06
to il...@googlegroups.com
On 11/4/06, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
"மட்டறுத்தல்" என்றதும்  நினைவுக்கு வரும் பாடல்:
மட்டுறத்தல் தான் பொருத்தமான சொல்.

மன்னிக்கவும். மட்டுறுத்தல் 

On 11/4/06, AKR <akrcons...@gmail.com> wrote:
"மட்டறுத்தல்" என்றதும்  நினைவுக்கு வரும் பாடல்:

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)



--

AKR

unread,
Nov 5, 2006, 2:19:39 AM11/5/06
to il...@googlegroups.com
மட்டறுத்தல் = மட்டு + அறுத்தல்
மட்டுறுத்தல் = மட்டு + உறுத்தல்
 
மட்டு என்றால் அளவு, பொதுவாக மிதமான அளவு அதிகமுமின்றிக் குறையுமின்றி நிர்ணயிக்கப் படும் அளவு.
 
'எட்டின மட்டு' என்றால் எட்டின வரை, இங்கே அதிக பட்சம் என்று பொருள் படுகிறது.
 
"மட்டற்ற மகிழ்ச்சி" என்றால் அளவிலா ஆனந்தம்.
"மட்டு மரியாதை" கிடையாதா? என்று கேட்பது சகஜமான வழக்கு. இங்கே "மட்டு" என்பது ஒரு எல்லையைக் குறிக்கின்றது.
 
"மட்டம்" என்பதும் "மட்டு"டன் தொடர்புடைய வார்த்தை, சம நிலை என்று பொருள் படுகிறது. "மட்டக் கோல்" எனும் ஒரு நீண்ட சதுரமான மரக்கட்டையைக் கட்டிடம் கட்டும் தொழிலாளி சுவற்றில் செங்கற்களை அடுக்கும் போதும், தரையை அல்லது கூறையை சமன் செய்யும் போதும் பயன் படுத்துகிறார்.
 
1964-65 ஆண்டுகளில் "முகத்தல்" அளவைகளான தொன்று தொட்டு உபயோகத்தில் இருந்த படி, பக்கா, மரக்கால் போன்ற அளவைகள் மாற்றப் பட்டு லிட்டர் அளவு நடைமுறைக்கு வந்தது. படி, பக்கா, மரக்கால் அளவைகளில் தானியங்களையும் பிற பொருட்களையும் வியாபாரிகள் நிறைத்து குவியக் குவியத் தருவார்கள். லிட்டர் வந்த உடன் அவற்றின் தலையைத் தட்டி மட்டமாக அளந்து தருவதை வழக்கமாகக் கொண்டார்கள், "தலை த்ட்டி".
 
ஒரு பொருளை உருவாக்கும் போது உதாரணமாக ஒரு நாற்காலியை உருவாக்கும் போது அதிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் சிறு துண்டுகளை அறுத்து நீக்குதல் முறை.
 
மின்னஞ்சலில் "moderation" என்பது இதற்கு ஒப்பாகும், தேவையான, முறையான கடிதங்களை அனுமதித்து, தேவையற்ற கடிதங்களைக் களைதல் ஒரு "moderator" செய்ய வேண்டிய கடமை.
 
பள்ளிகளுலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் போது மிக அதிகப் படியான மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் பெறத் தவரும் போது ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிகப் படியான சில மதிப்பெண்களைத் தந்து தேர்ச்சி பெறச் செய்யும் முறைக்கும் "moderation" என்று சொல்வார்கள். இங்கே அளவைக் குறைப்பதில்லை, மாறாகக் கூட்டுகிறார்கள்.
 
"சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டு" எனும் பழமொழி அறிவோம்.
 
"அம்மட்டும் இச்சிறு பழ விஷயத்தில் தங்கள் குணத்தைக் காட்டியதற்கு நன்றி, வருகிறேன்" என்று விநாயகருக்கு ஞானப் பழத்தைத் தந்தததும் முருகன் கூறுவதாக, திருவிளையாடல் திரைப்படத்தில் முருகனாக வரும் ஸ்ரீதேவியின் வசனம் ஒன்று வருகிறது.
 
"உறுத்தல்" என்பது பொதுவாக "உணர்த்தல்" எனப் பொருள்படும்.
"அறன் வலியுறுத்தல், அச்சுறுத்தல், பயமுறுத்தல்"
 
ஏன் உன் மனம் "உறுத்துகிறதா?" என்று தவறு செய்பவரை நோக்கிக் கேட்கப்படும் கேள்வியும் உணர்ச்சியைத் தான் குறிக்கின்றது.
 
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை முனையாது கற்றல் நன்றே"
 
என்பதில் "உறு" என்பது தேவையான எனப் பொருள்படுகிறது.
 
இவற்றையெல்லாம் கருதுகையில் "மட்டறுத்தல்" என்பது மின்னஞ்சலைப் பொருத்தவரை சரி என்றே தோன்றுகிறது.
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Sunday, November 05, 2006 2:15 AM
Subject: Re: self introduction

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2006, 10:32:05 AM11/5/06
to il...@googlegroups.com
மட்டறுத்தல் = மட்டு + அறுத்தல்
மட்டுறுத்தல் = மட்டு + உறுத்தல்
இரண்டும் நேர்மறை பொருள் தருவன்

அறுத்தல் =களைதல்
உறுத்தல் = அமுல்படுதல்

நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம்
நோயுற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்????????????
நோயுற்ற வாழ்வே குறைவுற்ற செல்வம். இல்லையா?
--

vishalam raman

unread,
Nov 5, 2006, 10:38:52 AM11/5/06
to il...@googlegroups.com
அன்பு ஆகிரா ,,நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.இது போல் விவரித்து எழுதினால் 
தமிழ் மேலும் கற்றுக் கொள்ள முடிகிறது ..
ஆமாம் ,,,,,காலேஜ்க்கு மட்டம்  போட்டேன்  என்கிறார்களே
அது   எதைச் சேர்ந்தது ?அன்புடன் விசாலம்  
 

 
On 05/11/06, AKR <akrcons...@gmail.com> wrote:


வேந்தன் அரசு

unread,
Nov 5, 2006, 11:17:02 AM11/5/06
to il...@googlegroups.com
On 11/5/06, vishalam raman <rvis...@gmail.com> wrote:
அன்பு ஆகிரா ,,நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.இது போல் விவரித்து எழுதினால் 
தமிழ் மேலும் கற்றுக் கொள்ள முடிகிறது ..
ஆமாம் ,,,,,காலேஜ்க்கு மட்டம்  போட்டேன்  என்கிறார்களே
அது   எதைச் சேர்ந்தது ?அன்புடன் விசாலம்  

கல்லூரிக்கு போனால் அறிவு வளருமே. 

AKR

unread,
Nov 5, 2006, 1:30:48 PM11/5/06
to il...@googlegroups.com
மட்டம் போடும் மாணவர் கூட்டம்
  கொட்டமடித்தே கலக்குது - அதை
சட்டம் போடும் ஆசிரியக் குழு
  கட்டுப் படுத்தப் பாக்குது
 
மாணவ மணிகள் வரவில்லையென்றால்
  வகுப்பை நடத்த முடியாது
மாத முடிவில் சம்பளம் இன்றி
  வாத்தியார் வாழ முடியாது
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Sunday, November 05, 2006 9:08 PM
Subject: Re: self introduction

separa

unread,
Nov 5, 2006, 11:51:27 PM11/5/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தன் அரசு
அவர்களே

வணக்கம். வள்ளுவம் எனது
சமயம் எனச் சொன்ன
பாங்கிற்காக, உங்களுக்கு
எனது பணிவான சமர்ப்பணம்.
கீழ்க்கண்ட பாடல்,
"வள்ளுவம் ஒரு வாழ்க்கை
நெறி" என்ற நாட்டிய
நாடகத்திற்காக, எழுதத்
தொடங்கிய எனது முயற்சியின்
ஒரு பாடல். கர்நாடக இசை
வடிவில், நடனமாடத் தக்க
அபிநயங்களுடன் ஆட எளிதாக
இருக்கும். 1330
அருங்குறளுக்கும் இது போல
எழுத வேண்டுமென்பது எனது
ஆவல். நிறைவேறும் நாள்
அறியேன். முயற்சி தொடரும்.

முன்னுரையாக, முதல்
நாட்டியத்திற்கான
பாடல்களில் ஒன்று

வள்ளுவம் உரைத்தொரு
வாழ்க்கை நெறி அதனை
உள்ளுவம் என்பதுவோர்
உயர்ந்த வழி! திரு

வள்ளுவம்

தெள்ளுதமிழ்ப் பாடல்களில்
திரு வள்ளுவன் உரைத்தான்!
தினமும் ஓர் திருக்குறளைத்
தெரிந்து கொள்வாய் நெஞ்சே !!


வள்ளுவம்

அறம் பொருள் இன்பமெனும்
அறிவுடைத் தத்துவத்தைத்
திறம்பட எடுத்துரைத்தான்;
திருவள்ளுவன் வாழி!
மறந்திடப்போமோ நன்றி
மனமுவந்து நானும் சொல்ல;
சிறந்தது இதுவே என
செப்பிடுவார் பெரியோர்!


வள்ளுவம்

வேந்தன் அரசு

unread,
Nov 6, 2006, 7:37:36 AM11/6/06
to il...@googlegroups.com
அன்பின் செபரா,

நல்ல முயற்சி. தங்கள் ஆர்வத்தைக்கண்டு மெய் சிலிர்கிறது.

ஒரு குறளுக்கு ஒன்று இல்லை என்றாலும் ஒரு அதிகாரத்துக்கு ஒன்று என்று படைக்கலாம்.

இந்த பாடைலை பாடிஉள்ளா(ளீ்)ர்களா? கேட்க விழைகிறேன்


மிக நன்றி
--

அஞ்ஞானி

unread,
Nov 6, 2006, 7:56:01 AM11/6/06
to இல்லம் (your HOME)
அன்புடைய செ.ப.ரா ஐயா,

வேந்தர் அளிக்கும்
பாராட்டுகள் கண்டு அகம்
மகிழ்கிறேன்.

உங்களின் மகிழ்ச்சியில்
மகிழும் நான்.

- விஷி

separa

unread,
Nov 6, 2006, 10:35:12 PM11/6/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தே,
பெயர் வேந்தன் என்பதனால்,
"அமைச்சரே, மாத
மும்மாரி/மாதமும் மாரி
பொழிகிறதா? என்று கேட்பது
போலக் கேட்கிறீர்கள்
போலும். எழுதுவது வரை எனது
வேலை. என்னாலும் முடியும்
என்று காண்பிப்பது. இதற்கு
அடவு பிடிப்பது நடன
ஆசிரியரின் திறமை. ஏதோ ஒரு
காரணத்தால், அந்தப்
பெண்ணிற்கு நடனப்
போட்டியில் இடம்
கிடைக்காது போனதால், இது
அரங்கேறவில்லை. நமக்கும்
விதி என்று ஒன்றிருக்கிறது
அல்லவா!!

மற்றபடி நான் ஒரு பாடலில்
இரண்டு அல்லது மூன்று
தொடர்புடைய குறள்களை
அடக்குகிறேன்.

நன்றியுடன்

separa

unread,
Nov 6, 2006, 10:46:13 PM11/6/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆகிரா
உங்கள் தமிழறிவுக்கு எனது
சமர்ப்பணம்

" மட்டில்ல
மகிழ்ச்சியினிங்கென்
மனதுக்குப் பிடித்த ஒன்று,
தொட்டதெல்லாம் சிறப்புற
விளக்கும் தோழர் ஆகீராவின்
கை
பட்டதனால் தமிழும் இங்கே
பரிமளிக்கும் காரணத்தின்,
எட்டின மட்டும் பயன் பெறவே
இதயமே விழைகவென்றேன்!!"


அன்புடன்
செபரா.

வேந்தன் அரசு

unread,
Nov 6, 2006, 10:52:50 PM11/6/06
to il...@googlegroups.com
On 11/6/06, separa <sepa...@gmail.com> wrote:
அன்புள்ள வேந்தே,
பெயர் வேந்தன் என்பதனால்,
"அமைச்சரே, மாத
மும்மாரி/மாதமும் மாரி
பொழிகிறதா? என்று கேட்பது
போலக் கேட்கிறீர்கள்
போலும். எழுதுவது வரை எனது
வேலை. என்னாலும் முடியும்
என்று காண்பிப்பது. இதற்கு
அடவு பிடிப்பது நடன
ஆசிரியரின் திறமை. ஏதோ ஒரு
காரணத்தால், அந்தப்
பெண்ணிற்கு நடனப்
போட்டியில் இடம்
கிடைக்காது போனதால், இது
அரங்கேறவில்லை. நமக்கும்
விதி என்று ஒன்றிருக்கிறது
அல்லவா!!

ஊழையும் உப்பக்கம் காணலாம்.

மற்றபடி நான் ஒரு பாடலில்
இரண்டு அல்லது மூன்று
தொடர்புடைய குறள்களை
அடக்குகிறேன்.

நன்றியுடன்
அன்பின் செபரா

Sivasan...@gmail.com

unread,
Nov 8, 2006, 2:44:19 AM11/8/06
to இல்லம் (your HOME)
வணக்கம் இல்லம்,
ஆகிரா,செபரா, வேந்தன் ஐயா,
விசாலம் அம்மா, விசுவனாதன்,
மற்றுமுள்ள அனைவருக்கும்
என் பணிவான வணக்கங்கள்,
என்ன எழுதுவது என்று
புரியாமல் இந்த அறிமுகம்
இழையில்
நின்றுகொண்டிருக்கின்றேன்,
எல்லோருடைய வரிகளையும்
படித்தேன்,
ஜாம்பவான்களுக்கு இடையில்
என்னைப்பற்றிக்கூற அதிகம்
ஏதும் இல்லை. என் பெயர்
சிவசங்கர், நான் ஒரு
இயந்திரப்பொறியாளன், பி.ஈ
படித்தது ஆதிபராசக்தி
பொறியியற்கல்லூரி,
மேல்மருவத்தூர், முடித்த
ஆண்டு 1994, எம்.ஈ.கணினி
உதவியுடன் கூடிய
வடிவமைப்பியல் படித்தது
அரசு பொறியியற்கல்லூரி ,,
சேலம், 1997ல் வெளியே வந்தேன்,
அருணை பொறியியற்கல்லூரி
திருவண்ணாமலையில் 3
ஆண்டுகள் விரிவுரையாளர்
பணி, சொந்த ஊர் செங்கம்,
திருவண்ணாமலையிலிருந்து 32
கிலோமீட்டர்கள் தொலைவு.
தற்சமயம்
இடுப்பெலும்பிற்கு
மாற்றெலும்பு
கண்டுபிடிக்கும் ஆய்வின்
இறுதிக்கட்டத்தில், இந்திய
தொழில்நுட்பக்கழகம் ( ஐஐடி)
குவஹாத்தி, அசாமில் ஆய்வு
செய்துகொண்டிருக்கின்றேன்.
அப்பா, ஓய்வு பெற்ற வங்கி
அதிகாரி, அம்மா
அரசுப்பள்ளி தலைமை
ஆசிரியை, தம்பி பல்
மருத்துவன், தங்கை அரசு
வங்கி ஒன்றின் மேலாளர்.
என்னைப்பற்றிய சுருக்கமான
சுய விமர்சனம் இது.
பொழுதுபோக்கு வலையுலாவல்,
வேந்தன் ஐயா அவர்களால்
செல்லமாக வலைச்சிலந்தி
என்ற
பட்டப்பெயரிடப்பட்டவன்..:)
உங்கள் அனைவருக்கும் என்
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வாழ்க வளமுடன்,
சிவா...@
சிவசங்கர்.முருகையன்.

அஞ்ஞானி

unread,
Nov 8, 2006, 3:35:13 AM11/8/06
to இல்லம் (your HOME)
அன்பு சிவா,

நீங்கள் 'அருணாசல சிவா'
என்று அறியாமல்
போய்விட்டேனே!!!! :)

எலும்பு விசாரம் தவிர்த்து
'நான் யார்?' எனும் ஆத்ம
விசாரமும் உண்டோ? :)

எல்லோரும் சுருக்கமாய்க் CAD
என்று சொல்வதை நீங்கள்
மொழிபெயர்த்து இட
விழைந்ததை இரசித்தேன்.

உங்கள் சுருக்கமான
சுயவிமர்சனம் எனக்குச்
சுருக்கமாகச் சொல்வது
என்னவென்றால்
"சிவாவின் குடும்பம் ஒரு
பல்கலைக்கழகம்" :) :)
உங்கள் குடும்பத்தாருக்கு
என் பாசத்தினைத்
தெரிவிக்கவும்.

அன்புடன்
-விஷி
http://azhagi.com/free.html
http://groups.google.com/group/illam

AKR

unread,
Nov 8, 2006, 6:40:40 AM11/8/06
to il...@googlegroups.com
அன்பு சிவா,

ஜாம்பவானுக்குத் தன் பலமும் தெரியும்,
அனுமனின் பலம் தனதை விடப் பெரியது என்பதும் தெரியும், ஆனால் அனுமனுக்கோ தனது
பலம் தெரியாது, அதை ஜாம்பவான் நினைவூட்டிய பின்னர்தான் உணர்ந்தான்.

ஆகிரா

----- Original Message -----
From: <Sivasan...@gmail.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>
Sent: Wednesday, November 08, 2006 1:14 PM
Subject: Re: self introduction

Reply all
Reply to author
Forward
0 new messages