americavil oru kovil

1 view
Skip to first unread message

vishalam raman

unread,
Apr 30, 2007, 1:48:27 PM4/30/07
to namb...@googlegroups.com, முத்தமிழ், il...@googlegroups.com
ஒரு கோவில்  ,,,,அந்தக் கோவிலைத்தொட்டபடி  ஒரு உணவு விடுதி ,அந்த இடத்தில் பலதரப்பட்ட  மக்கள்  கோவிலுக்குள்   நுழைகின்றனர் ,பின்னர் ஸ்வாமி தரிசனம் 
பிற்கு   நேரே  சிற்றுண்டிச்சாலைக் குள்ளும்   போய் அமர்ந்து வயிற்றுக்கும் பூசை நடக்கிறது,
எல்லோரும் ஒரு வெட்டு   வெட்டினப் பின்  ஐஸ்க்ரீம்  கையில் வர அதை ஆனந்தமாக 
 உதடுகள் வைத்துச் சுவைக்கிறார்கள் ,, ஆம் அந்தக்  கோவில்   ஷிகாகோ  என்ற  நகரில் 
எல்மாண்ட்  என்ற இடத்தில்  உள்ளது  முன்னால்   பெரிய  ராஜகோபுரம்     எங்கிருந்து
பார்த்தாலும்    தெரிகிறது அது பூமியின் சமபரப்பின்  அளவைவிட  சற்று உயரத்தில் 
கடப்பட்டிருப்பத்தால் எங்கிருந்த்தாலும்  நன்றாகப் பார்க்க  முடிகிறது  ஸ்ரீரரம   இல்ட்ச்மண
சீதா தேவியுடன்  நமது அனுமாரும்  காட்சித் தருகிறார்   இதைத்தவிர நவகிரஹம்  
ராதாகிருஷ்ணா  ஸ்த்யநாராயண இலட்சுமி   வெங்கட்ரமணர்  என்று பல பிரதிஷ்டைச்
செய்யப்பட்டிருகின்றன.அங்கு என்க்கு மிகவும் பிடித்திருந்த ஒன்று என்னவென்றால் 
நமது பாரதீய ஸம்ஸ்கிருதியை விடாமல் மாணவிகளுக்கு கோலம் போட,,மெடிடேஷன்
யோகா வகுப்புகள் இசை நாட்டியம் ஓவியம்  என்று பலவிதமாகக் கற்றுகொடுக்கிறார்கள்.
அத்துடன் பகவத் கீதை  திருப்புகழ்   என்றும் வகுப்புக்கள் நடக்கின்றன
அத்துடன்  கோவிலில்  ஜன்மாஷ்டமி  ,வரலட்ச்மி பூஜை  தசரா   தீபாவளி   கார்த்திகைத் தீபம் என்று விடாமல் எல்லா விழாக்களும்   நடத்துகின்றனர். 
சிற்றுண்டிச் சாலையிலும்    புளியோதிரை   வெண்பொங்கல் சர்க்கரைப்பொங்கல்
தயிர்சாதம்  வடை  இட்லி  தோசை சட்னி என்று இருப்பதைப் பார்த்தால்  எங்கே தமிழ் நாட்டில்  தான் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது ஸ்வாமிக்கு செய்த
பிரசாதங்களை  இங்கே   வழங்குகிறார்கள்  என்று நினக்கிறேன்  நிறைய அமேரிக்கர்களையும்    இங்கு நான் பார்த்தேன் பொதுநலத்தொண்டும்     அன்னதானமும் 
நடக்கின்றன பண வசதி இல்லாமல்    படிப்பு   விட்டவர்களுக்கு  மேற்படிப்புக்கு
உதவுகிறார்கள் . சில  சமயம்     நான்   சென்னையில் இருக்கிறேனா  என்று கூடத்  தோன்றியது .நமது  இந்தியர்கள்    வெளி நாடுகளில் உள்ளன்போடு 
மனம் ஒன்றி பல நல்ல காரியங்களைச்  செய்து  பாரத் நாட்டின்  கலாசாரத்தைப்பரப்பி
வருவது  மனதிற்கு   மிக  ம்கிழ்ச்சியைத்  தருகிறது   
 
 
அன்புடன் விசாலம்   
 
  

separa

unread,
May 2, 2007, 5:49:37 AM5/2/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள சகோதரி,
இதுதான் உலகம். பொதுவாக ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், மற்றொரு புதிய
இடத்திற்குச் சென்றால், அங்கு தன்னை தனது சமுதாயத்துஅடன் இனம்
காட்டிக்கொள்ளத், தமக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு,
ஒற்றுமையாக, (தனது சொந்த நாட்டில் கூடப் பார்க்க முடியாத அளவு
ஒற்றுமையாக) சிறப்பாகச் செயலாற்றுவார்கள்.

பிட்ஸ்பர்க், நியூஜெர்ஸி, மேப்பிள் மற்றும் மல்லிபூ போன்ற இடங்களிலும்,
இத்தகு கோவில்கள், சிறப்பாக இந்தியர்களால் (பெரும்பாலும் ஆந்திர
மாநிலத்தவரால்) நிர்வகிக்கப்பட்டுச் செய்லாற்றிக் கொண்டிருக்கின்றன.
அங்கு சென்றால் நீங்கள் சொன்ன உணர்வுதான் - நாம் இந்தியக் கலாசாரத்தை
விடாமல், எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். அந்த நாட்டு
மனிதர்களும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள் என்பதே சிறப்பு.

நியம நிஷ்டைகள் நம் நாட்டை விடச் சிறப்பாக இருக்கிறது. இங்கும்
சிருங்கேரி மடத்தால் பராமரிக்கப்படும் கோவில்களில், அர்ச்சகர்/குருக்கள்/
பட்டாச்சாரியார்கள் பணத்திற்காக அலைவதில்லை. அவர்களின் தேவைகளை மடம்
சிறப்பாகக் கவனிப்பதால், தங்கள் கடமைகளை (நித்ய அனுஷ்டானங்களை) முறை
தவறாது செய்கிறார்கள். ஒரு வேளை தவறு செய்து பிடிபட்டால், அவர்கள்
நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.
இசைக் கச்சேரிகள் பஜன் எல்லாம் உண்டு.

பெரும்பாலும் மஹாவிஷ்ணுவின் கோவில்கள் அதிகம் இருக்கிறார் போலத்
தோன்றுகிறது. காரணம் தெரியவில்லை.

கோவிலைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை எல்லோருமே
படித்தவர்கள், நாகரீகம் தெரிந்த ஒரு சமுதாயம் என்ற காரணமோ ? சிறிது பிற
மதக் காழ்ப்பு (மல்லீபூ கோவில் சம்பவம் பற்றிப் படித்திருப்பீர்கள் என
நினைக்கிறேன்) உணர்ச்சி இருக்கிறது. இதற்கு இங்கு நடக்கும் மதக் கலவர
நிகழ்ச்சிகளும் மூலகாரணமாக இருக்கலாம்.
மொத்தத்தில் சிறப்பான அனுபவம்.
அன்புடன்
செபரா

Reply all
Reply to author
Forward
0 new messages