கண்ணாடிகள்

1 view
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
May 21, 2012, 3:12:13 AM5/21/12
to
கண்ணாடிகள்
URI: http://tamilnanbargal.com/node/39922


கண்ணாடிகள்
==========

எனக்கு மிகவம் பிடித்தவன்
என்னுடன் அரட்டை அடிப்பவன்
நண்பன் சில நேரம் தந்தை சில நேரம்
அவனுக்காகவே என் கண்ணாடி வைத்திருக்கிறேன்
அவன் தவறுகள் என் கண்களில் விழுந்ததில்லை

இவன் யாரோ என்ன பெயரோ
என்னிடம் அரட்டையில் தொந்தரவு செய்ததில்லை
என்ன உறவோ யாரறிவார்? இவனின்
தவறுகளை தேடவே என் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கிறது
கேள்வி கேட்கவே நான் அதிகம் படித்திருக்கிறேன்

யாரோ ஒருவன் இவனுக்காகவே நான்
கண்ணாடிகளை விதவிதமாக புதுப்பிக்கிறேன்
கண்ணாடி கடைகளை நாடுகிறேன்

தெருவோரம் திரும்பும் போதெல்லாம் சில
கடைகள் மட்டும் கண்களில் படுகிறது
அங்கே தவறாமல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
"இங்கே பூதக்கண்ணாடிகள் வாடகைக்கு விடப்படும்"
புதிய கண்ணாடிகள் வாங்குகிறேன்
புதிய யாரோ ஒருவனுக்காக...

எத்தனை படித்தால் என்ன
பண்பு படிப்பால் வருவதில்லை என
கண்ணாடிகள் காட்டியதில்லை ஒரு போதும்... ஆனாலும்
புதிய கண்ணாடிகள் மாட்டுவதை மட்டும் நான் விட்டதில்லை.

வினோத் கன்னியாகுமரி



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

"சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கூறிய எந்த கட்சிக்கும் சாதிகளை ஒழிப்போம் என்று ஓலமிடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது."


Reply all
Reply to author
Forward
0 new messages