Fw: உண்மையின் பெருமை

19 views
Skip to first unread message

azhagi.com

unread,
Nov 8, 2006, 9:13:28 PM11/8/06
to illam Google Groups
என் அன்பிற்குரிய (75 வயது நிரம்பிய)திரு.சீனிவாசன் அனுப்பிய மடலை மீண்டும் இடுகிறேன் - அவருடைய மடல் எல்லோருக்கும் சரியாய்ப் போய்ச் சேர்ந்திருக்காதோ எனும் ஐயப்பாடு காரணமாக. வலையில் சென்று காண்கையில் அவர் மடல் ஒருங்குறி(யூனிகோட்) எண்களாகத் தெரிகின்றன. அதனாலேயே இந்த ஐயப்பாடு.
 
அன்புடன்
- விஸ்வநாதன்
 
Sent: Wednesday, 08 November, 2006 11:31 PM
Subject: உண்மையின் பெருமை

மேதாவி விஷி அவர்களது அன்பும் அறிவும் கூட மெய்யறிவும் பொங்கும் எதை எடுத்துச்  செல்வதென்று புரியாமல் கடைசியில் நான் முன்பே ஆங்கிலத்தில் www.geocities.com/seenufour/His_mother என்ற வெப்ஸைட்டில் (website) எழுதியதை தமிழில் எழுதலானேன். ஆனால் வெட்கப்படும் ஒரு உண்ம என்னவென்றால் பிறவித்தமிழனாலும் தமிழ் மொழியின் பால் பேரன்பு வைத்திருப்பவனாலும் எனக்குத் தமிழில் பிழையின்றி எழுத் தெரியாது. எனினும் ம்க்க முயற்சி செய்து, ஒரு பகுதியை தமில் எழுதி அதை எடுத்து  வந்திருக்கிறேன். விஷி அவர்களும் இல்ல்த்தின் மற்ற உருபினர்களும் இதில் உள்ள பிழைகளை மன்னிப்பது மட்டும் இல்லாமல் எனக்கு எடுத்துக் காட்டுமாறு தாழ்மையுடன் விண்ணப்பத்துக் கொள்கிறேன்

அடுத்த பகுதியைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். அது முடியுமுன் முதல் பகுதியிலுள்ள பிழைகள் யாதும் தெரிய வந்தால் 2ம் பாகத்தையாவ்து பிழைகளை தவிர்க்க முயற்சி செய்வேன். நன்றி, வணக்கம். நான் எழுதியதைக் கீழே காணலாம்

சீனிவாசன்.

உண்மையின் பெருமை


கரூருக்கு அருகிலுள்ள புகலூரில் (புராதனபெயர்: புகழூர்) 1930 டிசம்பரில் பிறந்த அந்த பாலகன்  ஒரு வயதாகுமுன் தன் அன்புத்  தந்தையை அடி வயிற்றுக் கோளாரில் (அப்பெண்டிஸைடிஸ்) இழந்தான்.

இருதயக் கோளாரால் பாதிக்கப்பட்டிருந்த   அவனது உயிருக்குயிரான 30 வ்யதுத்தாய் (தன் முதலிரண்டு  மனைவியையும் இழந்த தந்தையின் மூன்றாம் தாரம்) அந்தக் காலத்திய விதி, முறை, கட்டுப்பாட்டின் படி தன்  அழகான கூந்தலையிழந்து, சந்தன நிறப்புடவையை (காவிநிறப்புடவை யென்றும் சொல்லலாம்) தரித்து அதையே தன்  தன் தலையை மறைக்க முக்காடாக வைத்துக் கொண்டு வாழலானார்.

1935ம் வருடம் செல்லமாக வளர்த்து வந்த தன் ஒரே பெண்ணிற்கு பிள்ளை வீட்டார் அடாபிடியாகக்கேட்ட  வரதக்ஷிணை  மற்ற சீர்வரிசைகளெல்லாம் கொடுத்து விவாகம் செய்து வைத்தார்.

தன் மூத்த மகன் (வயது 17க்கு மேல்), மற்றும் தனது முதல் மூத்தாளின் இரு பேரன்களின்  படிப்பை முந்நிட்டு திருச்சியில் வாடகை  வீட்டில் 1938 வரை தன் நோயையும் பொருப்படுத்தாமல் மிகச் சிரமத்துடன் குடித்தனம் நடத்தி வந்தாள்.  இருதயக்களாரினால் மிகவும் பலவீனமாய்போய் மேலும் தாங்க முடியாத நிலைமையில் அடுத்த வ்ருடத்  தொடக்கத்தில் மேற்சொன்ன தன் கடைசிப் புதல்வனை அழைத்து க்கொண்டு புகலூருக்கு  திரும்படி நேர்ந்தது.

வேறு வழியில்லாமல், பாதிப் படிப்பில் (நான்காம் வகுப்பில்) நிறுத்திக் கூட்டிக் கொண்டு வந்த பையனின் மேல்  படிப்புக்கு என்ன செய்வதென்று யோசிக்கலானாள். கிராமத்துப் பள்ளியில் 5ம் வகுப்பிற்கு மேல் கிடையாது.

காவேரிக்கு அக்கரை வேலூரிலுள்ள உயிர்நிலைப்பள்ளியில் சேர்ப்பதை விட வேறு வழியொன்றும்  தென்படவில்லை.அந்தக் காலத்தில் இளம் விதவைகள் ஆண்களின் முன் நிற்கக் கூட மாட்டார்கள்.
ஆதரவற்ற  அந்நிலையுலும் தன் மகனை எப்படியாவது அப்பள்ளியில் சேர்ப்பதற்தென்று உறுதி செய்து கொண்டாள்..

தன் சிறுவனைக் கூட்டிக் கொண்டு மிகச் சிரமத்துடன் பரிசலில் நதியைத் தாண்டி பள்ளிக்கு வந்தடைந்தாள்

(இந்த உண்மைக் கதை அடுத்த பகுதியில் முடிவடையும்)

 

separa

unread,
Nov 8, 2006, 10:00:47 PM11/8/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள விஷி
எங்களுர்க்காரரை எனக்கு
அறிமுகம் செய்ததற்கு மிக்க
நன்றி. அவரது வயதைத்
திருப்பிப் போட்டால் எனது
வயது என்ற அளவில், (மேலும்
தூண்டித் துருவிப்
பார்த்தால், என்னை விட எனது
பெரிய சகோதரருக்கு) மிக
நெருக்கமான அளவில்
அறிந்தவராக இருப்பாரோ எனத்
தோன்றுகிறது.
பொறுத்திருந்து
பார்ப்போம்.
அன்புடன்
செபரா

வேந்தன் அரசு

unread,
Nov 8, 2006, 10:04:31 PM11/8/06
to il...@googlegroups.com
அன்பின் விஷி,

திரு.சீனிவாசன் அவர்களூடைய மடல் ஏன் எண்களாக வருகின்றன? அவர் திஸ்்கியில் எழுதுகிறர் போலும், அவர் என்ன செய்ய வேண்டும்.

கதை துயரமாக தொடங்குகிறது.

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

விஸ்வநாதன்

unread,
Nov 8, 2006, 10:18:57 PM11/8/06
to இல்லம் (your HOME)
திரு. சீனிவாசன் அவர்களது
இரண்டாவது மடல் கீழே. நானே
மீண்டும் இடுகிறேன். அவர்
அனுப்பிய மடல், வலையில்
வெறும் ஒருங்குறி
எண்களாகவே தெரிவதால், அதை
நீக்கி விடுகிறேன்.
பின்னூட்டம் இட
விரும்புபவர்கள், இரு
மடல்களுக்கும் சேர்த்து
இங்கேயே இடலாம்.

அவருக்குத் தனிமடல்
அனுப்பி எதனால் அவர்
மடல்கள் எண்களாகவே
வருகின்றன என்று காரணம்
அறிந்து தீர்வு காண
முயற்சி செய்கிறேன்.
சிறிது நாட்கள் ஆகலாம்.

அன்புடன்
- விஸ்வநாதன்

From: Venkatram Shrinivas
To: il...@googlegroups.com

Sent: Wednesday, 08 November, 2006 11:46 PM
Subject: Am ashamed of the very beginning of my letter


நான் முதலில் அனுப்பிய
மடலில் "மேதாவி விஷி


அவர்களது அன்பும் அறிவும்
கூட மெய்யறிவும் பொங்கும்

இல்லத்திற்கு" என்று எழுத
வந்த நான், தவிர்த்திருக்க
வேண்டிய அவசரத்தில் மிக
முக்கியமான கடைசிச்சொல்லை
('இல்லத்திற்கு') விட்டு
விட்டேன்.

தவறுதலுக்கு மிக
வருந்துகிறேன்.

சீனிவாசன்

விஸ்வநாதன்

unread,
Nov 19, 2006, 10:31:04 AM11/19/06
to இல்லம் (your HOME)
திரு. சீனிவாசன் அவர்களின்
முதல் மடலின் தொடர்ச்சி
கீழே................

[ முதல் மடலின் சுட்டி இங்கே
-
http://groups.google.com/group/illam/browse_frm/thread/774df360ad8974dc
]

------------------------------------------------------------------------------------
பள்ளியின் வெளியே
வாசற்கதவின் பின்
மறைந்திருந்தபடி,
முந்தையப்பள்ளியில்
படித்ததற்கான தன் மகனின்
சான்றிதழ்கள் முதலியவற்றை
வைத்திருந்த பையை அவனிடம்
கொடுத்து தலைமை
ஆசிரியரிடம் எப்படிப் பேச
வேண்டும் என்ன சொல்ல
வேண்டுமென்று
கிளிப்பிள்ளையைப்போல்
சொல்லிக் கொடுத்து உள்ளே
அனுப்பினார்.

சிறுவன் மிகப் பயத்துடன்
உள்ளே சென்றான். என்ன
செய்வதென்று புரியாமல்
தலைமை ஆசிரியரின் அறைக்கு
வெளியேயிருந்த
பொதுக்கூடத்தில்
நிற்கலானான்.

ஏதோ வேலை நிமித்தம்
தன்னறையை விட்டு வெளியே
வந்த முதல்வர்
அச்சிறுவனைப் பார்த்தார்.
"யார் நீ? எதுக்காக வெளியே
நின்னுட்டிருக்கே?" என்று
அதட்டலாகக் கேட்கலானார்.

மிக நடுங்கத்தொடங்கிய
பையன் "நான், என்னோட அம்மா,
அஞ்சாங் க்ளாஸ்" என்று
உளறத் தொடங்கினான்.
கண்களில் நீர் மல்கியது.

அச்சமயம் அந்தப்பள்ளியில்
துப்புரவுப்பணி புரியும்
ஒரு பெண்மணி வேகமாக தலைமை
ஆசிரியரிடம் வந்து "இந்தப்
பையனுக்கு அப்பா
இல்லையாம். இவனை அஞ்சாம்
க்ளாஸ்லெ சேக்கணும்னு
அக்கரெலேந்து இவனோட அம்மா
கூட்டிட்டு
வந்திருக்காங்க. பையோட
அவனெ உள்ளே
அனுப்பிச்சுட்டு வாச
கேட்டுப்பின்னாலெ
நின்னுக்கிட்டிருக்காங்க"
என்று கூறினாள்.

"அநாதையா? பாவம்" என்று
கனிந்த குரலில் கூறி, பிறகு
சிறுவனின் ஐயத்தை
நீக்குவதற்காக அவனைத்
தட்டிக் கொடுத்து உள்ளே
அழைத்துச் சென்றார்.
அவனிடமிருந்த
சான்றிதழ்களையெல்லாம்
வாங்கி கவனமாகப்
படித்ததற்குப் பின் "எல்லா
ச்ப்ஜெக்ட்டிலேயும் நல்ல
மார்க் வாங்கிருக்கையே
பின்னெ எதுக்கு அப்படி
பயந்து நடுங்கினே?" என்று
சொல்லி விட்டு பணியாளர்
ஒருவரைக் கூப்பிட்டனுப்பி
அவரிடம் விவரமாகப்
பேசிவிட்டுப் பையனிடம்
"இவரை ஒங்கம்மாகிட்ட
கூட்டிண்டு போ, என்னென்ன
செய்யனும்னு அவர்
ஒங்கம்மாகிட்ட சொல்லிக்
கொடுப்பார். முடிஞ்சா நீ
நாளேலேந்து 5-ஆம்
க்ளாஸுக்கு வரலாம்"
எனச்சொல்லியனுப்பினார்.

பொங்கிய மகிழ்ச்சியுடன்
தன் மகனை
வீட்டிற்கழைத்துச்
சென்றார் அந்தத் தாய்.

பள்ளிக்குச்செல்லத்
தொடங்கிய தன் பிள்ளையின்
பிடிவாதத்திற்கிணங்கி,
தினமும் காவேரிக் கரை வரை
கூடச்சென்று பரிசலில்
ஏற்றி அதே தோணியில்
பள்ளிக்குச் செல்லும்
பெரிய வகுப்புப்
பையன்களிடம் சிறுவனை
கவனித்துக் கொள்ளுமாறு
கேட்டுக் கொண்டு பிறகு
திரும்புவார் . படகு
காவிரையைப் பாதி தாண்டும்
வரை தன் தாய்
திரும்பிச்செல்லும்
திசையையே நோக்கிக்
கொண்டிருப்பான் அவளிடம்
சொல்லொணாப் பற்றுதலும்
நம்பிக்கையும் நன்றியும்
வைத்திருந்த அச்சிறுவன்..

உடல் நலமில்லாத அந்த
அம்மையாரால் சில நாட்களே
அப்படிச் செய்ய முடிந்தது.
இருதய நோய் மேலும்
தீவிரமாகி அவளைப் படுத்த
படுக்கையாய் இருக்கச்
செய்துவிட்டது.

ஒரு வாரத்தில் இரண்டு
தடவையாவது பக்கத்தூர்
வேலாயுதம்பாளயத்திலிருந்து
ஒரு வைத்தியர் வந்து
பரிசோதனை செய்துவிட்டுச்
செல்வார் . ஒரு நாள் அவரிடம்
தன் புதல்வனைக் காண்பித்து
" இந்தக் குழந்தையை
பாத்துக்கறத்துக்காகவாவது
நான் இன்னும் கொஞ்சம் நாள்
உசிரோட இருக்கனும் .
எப்படியாவது என்னை
காப்பாத்திடுங்க டாக்டர்"
என்று உருக்கத்துடன்
கேட்டுக் கொள்வவதைக்
கேட்டுக் கேண்டுக்
கொண்டிருந்த பாலகன்
தாங்கமுடியாத்
துயரத்துடன் பெரிதாக
அழத்தொடங்கினான் .
வைத்தியர், தாய்/மகன்
இருவருக்கும் நம்பிக்கை
கொடுத்து ஆறுதல்
சொல்லிவிட்டுச் சென்றார் .

உயிருக்குயிரான தன் தாயின்
நிலைமை, இன்னமும்
பழக்கப்படாத வகுப்பு
மாணவர்கள் - இப்படிப்பட்ட
ஆதரவற்ற நிலைமையில்
சிறுவனுக்குப் படிப்பில்
கவனம் செலுத்த
முடியவில்லை. அதனால், அவன்
பள்ளியில் சேர்ந்த 11/2
மாதத்திற்குள்
வைக்கப்பட்ட கால் வருடப்
பரீட்சையில் தேறவில்லை.

"கடவுள் புண்யத்திலெ என்
கடைசிப்பிள்ளை ரொம்ப
கெட்டிக்காரக் கொழந்தையா
பொறந்துடுத்து. க்ளாசிலெ
எப்போதும் ஃபஸ்ட்
இல்லாட்டா செகண்ட்
இப்படித்தான் வருவான் "
என்று
பெருமைப்பட்டுக்கொள்வார்
அந்த அன்னை ( அது ஆங்கிலேயர்
ஆண்ட காலமாதலால்
அரைகுறையாகப்
படித்திருந்தாலும்
ஆண்களும் பெண்களும்
பேச்சினிடையில் ஆங்கில
வார்த்தைகளைச் சரளமாகப்
பயன்படுத்துவார்கள் .

அச் சிறுவன் அதுவரை மிக
நன்றாகப்
படித்துவந்ததினால் அவன்
தாய் அதிகப்படுத்திச்
சொன்னாலும் அவர்
சொல்லியதில் சிறிது உண்மை
இருந்தது. இப்பொழுதோ
பையனின் நிலை மிகப்
பரிதாபத்திக்குறியதாயிருந்தது
.

பரிட்சையில் அவனுக்குக்
கொடுக்கப்பட்ட
மதிப்பெண்கள் கொண்ட
அட்டையை (மார்க் ஷீட்)
எடுத்துக் கொண்டு தாயிடம்
வந்தான். " அம்மா " என்று மிக
மெல்லிய குரலில்
அழைத்தான்.
குப்புறமாகப்படுத்திருந்த
அம்மாவின் உடம்பிற்கு
ஒத்தடம் கொடுத்துக்
கொண்டிருந்த விதவை நண்பர்
ஒருவர் அவன் தாய்க்குத்
தெரியாமல் அவனிடமிருந்து
அந்த அட்டையை
வாங்கிப்படிக்கலானார்.

"என்னடா கண்ணா,
மார்க்கெல்லாம்
கெடச்சுடுத்தா / கணக்குலெ
எத்தெனெ வாங்கிருக்கே?"
எனச் செல்லமாகவும்
பெருமையாகவும் கேட்டார்.
அந்த விதவை நண்பரும்,
அவருடன் கூட இருந்த மற்ற
சிநேகிதியும் அவனிடம்
சைகைகள் காட்டித்
தடுத்துக்கொண்டிருந்தபொழுதும்
"ரெண்டு (2%) அம்மா" என்று
ஈனக்குரலில் சொன்னான்.

அந்தத் தாய் தன் வெளிறின
முகத்தில் புன்னகை
வரவழைத்துக்கொண்டு "
பாத்தேளாடீ! எம்பிள்ளே
செத்தாக் கூடப் பொய்
சொல்லமாட்டன் தெரியுமோ?
அவன் வாய்லெ சத்தியம்தான்
வரும். நீங்கள்ளாம்
அவனுக்கு ஜாடைக்
காட்டிண்ட்ருந்ததெ நான்
பாக்கலேன்னு
நினைச்சுக்காதேங்கோ" என்று
கூறலானாள் .

அடுத்த மூன்றே நாட்களில்
அவனது தெய்வத்தாய்
வானுலகமெய்திவிட்டாள்.....

-----------------------------------------------------

தொடரும்...

vishalam raman

unread,
Nov 19, 2006, 10:53:54 AM11/19/06
to il...@googlegroups.com
அன்பு சீனிவாசன் அவர்களுக்கு அந்தக் காலத்தில்  சத்தியத்திற்கு இருந்த மதிப்பும்  மரியாதையும் 
இப்போது திரும்பி வருமா ..,,,,,வரும்   வர வேண்டும்
நல்லதையே  நினைப்போம்  உங்கள் நல்லாசிகளை 
வேண்டி நிற்கும்  அன்புடன் விசாலம்  

 

Siva Sankar

unread,
Nov 19, 2006, 11:40:29 AM11/19/06
to il...@googlegroups.com

கண்கள் குளமாகின விசு
திரு சீனிவாசன் அவர்களின் கதையின் நாயகன் கொண்ட சொல்லொனாத்துயரினை எண்ணும்போது :(, தாயையும் இழந்த அந்த பாலகன் என்ன பாடுபட்டிருப்பான்? அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி....
சிவா....அசாமிலிருந்து...:(

 

விஸ்வநாதன்

unread,
Nov 20, 2006, 9:06:01 PM11/20/06
to இல்லம் (your HOME)
ஆமாம் சிவா. உண்மைதான்.

இந்தக் கதையை எப்பொழுது
படித்தாலும் நான் மிகவும்
கண்கலங்கி விடுவேன்.
பெற்றோர் இருவரையும் சிறு
வயதில் இழந்தோர் மனநிலை
மிகவும்
பரிதாபத்திற்குரியதே!

அன்புடன்
விஸ்வநாதன்

விஸ்வநாதன்

unread,
Nov 25, 2006, 10:07:50 PM11/25/06
to இல்லம் (your HOME)
அம்மா என்பது தமிழ்
வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல்
வார்த்தை
அம்மா இல்லாத
குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள்
வார்த்தை!

கவலையில் வருவதும் அம்மா
அம்மா!
கருணையில் வருவதும் அம்மா
அம்மா!
தவறு செய்தாலும்
மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா
அம்மா!.....

பூமியின் பெயரும் அம்மா
அம்மா!
புண்ணிய நதியும் அம்மா
அம்மா!
தாய்மொழி யென்றும்
தாயகமென்றும்
தாரணி அழைப்பதும் அம்மா
அம்மா!.....

- கண்ணதாசன்
azhagi - tamil word processing software
http://www.azhagi.com/free.html
http://groups.google.com/group/illam
http://groups.yahoo.com/group/azhagi

விஸ்வநாதன்

unread,
Nov 28, 2006, 9:05:43 AM11/28/06
to இல்லம் (your HOME)
திரு. ஸ்ரீனிவாசன்
அவர்களது கதையின் 3-ஆம்
பாகம் கீழே
----------------------------

திடீரென ஏற்பட்ட
மாரடைப்பினால் தன் தாயை
இழந்த அதிர்ச்சியில் கதி
கலங்கி, மருண்டு சுருண்டு
விழுந்து தாங்கொணாத்
துயரத்துடன் ஓவென்று கதறி
அழத்தொடங்கினான் சிறுவன்.

பிறந்ததிலிருந்தே தன்
குழந்தையின் மேல் ஒரே
கவனமாய், சற்றும் குறையாத
அன்புடனும் பொறுப்புடனும்
வளர்த்து வந்த தன் தாயின்
உருவத்திலே, தாய், தந்தை,
ஆசான் மூவரையும் கண்ட
அப்பாலகன், இம்மியளவேனும்
பிசகாது அந்த அம்மையின்
சொற்படி நடந்து வந்தான்.
நாளுக்கு நாள் கவலையை
அதிகரிக்கும் தன் தாயின்
நிலைமையைக் கண்டு, அவன்
வணங்கி வரும் முருகக்
கடவுளை எக்கணமும் வேண்டிக்
கொண்டிருந்தான் - "முருகா!
நீ தான் எனக்கு கதி.
எப்படியாவது என்னோட
அம்மாவெக் காப்பாத்திடு.
என்னோட அப்பா ஒம்மேலே
எவ்வளவு பக்தி
வச்சிருந்தா, உனக்காக
என்னெல்லாம்
பண்ணுவான்னுட்டு அம்மா
எங்கிட்டே அடிக்கடி
சொல்லுவா. அதே மாதிரி
நானும் வருஷா வருஷம்
உனக்கு காவடி எடுப்பேன்.
சித்திரை வைகாசி அக்னி
நக்ஷத்திரத்திலே வெடி
காலம்பர எழுந்துண்டு
காவேரீலெ ஸ்நானம்
பண்ணிட்டு அம்மா
எனக்குன்னு
கொடுத்திருக்கிற சின்ன
கொடத்துலெ காவேரி ஜலம்
எடுத்துண்டு உன் மலைக்கு
(பாடல் பெற்ற புகழிமலை -
திருப்புகழ்- பாடல்
எண்:619-Thiruppugazh-verse619 கடைசி வரிகள்
"புகலரிய தான தமிழ்முநிவ
ரோது புகழிமலை
மேவு....பெருமாளே") கொண்டு
வந்து உனக்கு அபிஷேகம்
செய்யறத்துக்கு குருக்கள்
கிட்ட கொடுப்பேன். அம்மா
எனக்குச்
சொல்லிக்கொடுத்தபடியே
கொஞ்சம் கூட பிசகாம
நடந்துப்பேன். செத்தாக்கூட
ஒரு பொய் கூட
சொல்லமாட்டேன். இது, நான்
உனக்கு அடித்துக்
கொடுக்கும் சத்தியம்.
முருகா! முருகா!
எப்படியாவது என்னோட
அம்மாவெக் காப்பாத்திடு"

அம்மா அம்மாவென்று
புலம்பிக்கொண்டிருந்த
அச்சிறுவனுக்கு
திடீரென்று கடவுள்
நம்பிக்கையே விலகியது.
"முருகனாவது கடவுளாவது?
எல்லாமெ வெறும் பொய்.
உண்மையாகக் கடவுள்
இருந்தால், எல்லோருக்கும்
நன்மை செஞ்சிண்டு ஒரு ஈ
எரும்புக்குக் கூட மனசால
கூட கெடுதல் செய்யாத 38 வயசு
கூட ஆகாத என் அம்மா
எதுக்காகச் சாகணும்? அந்த
முருகனே கதின்னு
விடாப்பிடியா
நம்பின்றிருந்து தானும்
ஏமாந்து, பாவம் என் அம்மா
தெரியாமல் நானும் ஏமாறும்
படி விட்டுப்போய்
விட்டார்."

இவ்வாறெல்லாம்
புலம்பத்தொடங்கிய சிறுவன்
அவனால் விளக்க முடியாதபடி
ஓர் அநுபவத்தைத் "தினமும்"
பெறத்தொடங்கினான். "தவறாது",
'ஒவ்வொரு இரவும்', அவன்
கனவிலே அவனது தாய்
தேவதையாக வந்து ஆற்றுதல்,
தேற்றுதல் செய்துவிட்டு
மறைந்து போகலானார்.
இப்படியாவது தன் தாயைப்
பார்க்க முடிந்ததே என்று
பையனவன் தன் உள்ளத்தையும்
மனத்தையும் சிறிது
தேற்றிக் கொள்வான்.

1939-இல் தன் பூத உடலை விட்ட
தாய் 1974-75 வரை "ஒருபொழுதும்
தவறாமல்", கனவில்
மட்டுமல்லாது
எப்பொழுதாவது ஏதும்
காரணத்தால் படு துயரத்தில்
மனம் நொடிந்து வருந்திக்
கொண்டிருந்தால், அவரது
செல்லப்பிள்ளையின்
மனக்கண் முன்னேயே தோன்றி (in
astral form) கிடைக்கொணா ஆறுதலும்
தேறுதலும் கொடுப்பார்.

1975-ஆம் ஆண்டு தெய்வத்தாயின்
வருகை சட்டென நின்று
விட்டதால், அதைப் பற்றி
மிகவும் வருந்திக்
கொண்டிருந்த 44 வயதான அவரது
பிள்ளையின் மனதிற்குள் ஒரு
எண்ணம் உருவாயிற்று - "நான்
வேண்டிக் கொண்ட மாதிரி
அந்த முருகப்பெருமான் என்
அம்மாவின் உயிரைக்
காப்பாற்றியிருந்தால் என்
அம்மாவிற்கு இப்பொழுது 72-73
வயதாயிருக்கும். தன்
மெலிந்து நலிந்த
பூதவுடலுடன்
இம்மண்ணுலகிற்கே உண்டான
பலவிதமான தொல்லைகளையும்
பிடுங்கல்களையும்
தாங்கிக் கொண்டு வாழ
நேர்ந்திருக்கும்.
உயிருக்குயிரான என்
அன்புத்தாயிற்கு
அதையெல்லாம் தவிர்த்து
பரம்பொருளான திருமுருகன்
அவரை அசரீரி தேவதையாக
அவருடைய செல்லப்பிள்ளை
கூடவே 1975 வரை இருக்கவருள்
செய்திருக்கிறார்".

அவரது மேற்சொன்ன
நம்பிக்கைக்கு புறம்பாக
யார் என்ன சொன்னாலும் அதை
ஒரு பொழுதும் ஆமோதிக்க
அவர் தயாராயில்லை.
விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்
இவை இரண்டின்
கண்ணோட்டத்துடனும் "நிறைய"
படித்த அவர் இறைவனின்
அருளால்தான் அவருக்குத்
தன் தாயின் உருவத்தை
அசரீரியாக (astral body) பார்த்து
வர முடிந்தது என்று
"உறுதியாக" நம்புகிறார்.

இந்த இளம் நூற்றாண்டிலும்
கடந்த நூற்றாண்டிலும் தலை
சிறந்த விஞ்ஞானியான
ஐன்ஸ்டீன் (Einstein) கடவுளைப்
பற்றி என்ன
சொல்லியிருக்கிறார் என்று
படிக்க ஆவலுள்ளவர்கள் கீழே
கண்ட 'மின்னகத்திற்கு' (website)
சென்று படித்துத் தெரிந்து
கொள்ளலாம்.
http://geocities.com/seenufour

ஓர் உண்மைக் கதையை மூன்று
ஏடாகப் பிரித்து அதன்
மூன்றாவது மடலை
அனுப்புவதற்கு மிகக்
காலத்தாமதம் ஆனதற்கு
மன்னிப்புக் கோரிக்கொண்டு,
அன்பு பண்பு
இவ்விரண்டிற்கும்
நிறைவிடமானதும் மேதாவி
விஷி அஸ்திவாரமிட்டதுமான
இல்லத்திலுள்ள


எல்லோர்க்கும்

பணிவன்புடன்
சமர்ப்பிக்கின்றேன்.

ஸ்ரீனிவாசன்

விஸ்வநாதன்

unread,
Dec 7, 2006, 11:41:03 AM12/7/06
to இல்லம் (your HOME)
அன்புடைய திரு.ஸ்ரீனிவாசன்
அவர்களுக்கு,

உங்கள் 'உண்மையின் பெருமை'
கதை நிறைவடைந்த நிலையில்,
அது தாயின்/உண்மையின்
பெருமையை வலியுறுத்தியும்,
மற்றபடி பலவற்றைச்
சிந்திக்கத் தூண்டும்
வகையாகவும் இருக்கிறது..

நான் உங்களிடம்
தொலைபேசியில் பேசியபோது
சொன்னேன், '4 வயதில் பார்த்த
சினிமாவில் வந்த ஒரு
நிகழ்ச்சி, என் மனதில்
வேரூன்றி விட்டது' என்று.
அதை மறுபடியும் எழுதுவது
மிகையாகாது என்று
நம்புகிறேன்.

எனக்கு நான்கு வயது
இருக்கும். என் பெற்றோர் "
சத்தியமே ஜெயம்" என்ற
தெலுங்கு படத்திற்கு
அழைத்துச் சென்றனர்.
அந்தப் படத்தில் ஒரு
திருடன் புத்த பிக்க்ஷூ
ஒருவரின் தலையில் அடிக்க
வேண்டி பெரிய கல் ஒன்றை
எடுக்கிறான். அதன்
அடியிலிருந்து ஒரு
நாகப்பாம்பு அவன் கையில்
சுற்றிக்கொள்கிறது. அவன்
அலறிக்கொண்டு கல்லைக் கீழே
போட, புத்த பிக்க்ஷூ
திரும்பிப் பார்க்கிறார்.
திருடனிடம் வந்து கையில்
சுற்றிய பாம்பை எடுத்து
கீழே விட, அது போய்
விடுகிறது. அது கண்டு
திருடன் "ஐயா, உங்களைக்
கொல்ல வேண்டி கல் எடுத்த
என்னைப் பாம்பு சுற்றிக்
கொண்டது. நீங்களோ,
பயமேதுமின்றி அதை
எடுத்துவிட அதுவும்
போய்விட்டது. நான்
உங்களைக் கொல்ல
நினைத்ததிற்கு
வெட்கப்படுகிறேன்"
என்றான். புத்த பிக்க்ஷூ
கேட்டார்: "நீ ஏன் வேறு
ஏதாவது தொழில்
செய்யக்கூடாது" என்று.
"எனக்கு வேறு ஒரு தொழிலும்
தெரியாது. குடும்பத்தைக்
காப்பாற்ற திருடுவதைத்
தவிர வேறு வழி இல்லை"
என்றான். "அப்படியானால் சரி.
எப்பொழுதும் உண்மையே பேசு"
என்று சொல்லிவிட்டுப்


போய்விட்டார்.

ஒரு நாள் இவன்
ராஜகுமாரியின்
கழுத்துச்சங்கிலியைத்
திருடிவிட்டான். ஆனால்,
காவலர்கள் வேறு யாரையோ
பிடித்து அரசனிடம்
கொண்டுவர, அவன் என்ன
முறையிட்டும், அவனுக்குத்
தண்டனை விதித்தார். அந்தக்
காலத்து வழக்கப்படி
முச்சந்தியில் தூக்கிலிட
ஆயத்தமாயினர். இதைக்
கேள்விப்பட்ட திருடன்,
புத்த பிக்க்ஷூ கூறியதை
நினைவு கூர்ந்து,
அதிகாரிகளிடம் 'நான்தான்
திருடியவன். ஆகையால், இவனை
விட்டு விடுங்கள்' என்றான்.
திருடனை அரசனிடம்
அழைத்துச் செல்ல, திருடன்
தைரியமாக உண்மை சொல்லி ஒரு
நிரபராதியைக்
காப்பற்றியதற்காகவும்,
தன்னைத் தவறான தீர்ப்பு
கொடுத்த பழியிலிருந்து
மீட்டதற்காகவும், திருடனை
மன்னித்து, உண்மை
பேசியதற்காக அவனைத்
தன்னுடைய சேனையில்
சேர்த்துக்கொண்டார்.
இந்தக் கதை என் மனதில்
பசுமரத்து ஆணி போல்
பதிந்து விட்டது, 'உண்மை
கைவிடாது. நன்மையே தரும்'
என்று.

உங்கள் வலைதளத்தில்
(http://geocities.com/seenufour) கீழ்கண்ட
வாக்கியம் கண்டேன்.

Einstein had said he received signs and more or less clear images
(visions) in formulating his scientific theories (p.282 "Almanac Of The
Uncanny", Readers' Digest Publication-1995).

ஈன்ஸ்டீன் கடவுளை ஒரு 'invisible
piper' என அழைத்துச்
சொல்லியுள்ள மேற்கோளும்
படித்தேன்.

"Let us not forget that knowledge and skills alone cannot lead humanity
to a happy and dignified life. ..... I claim credit for nothing.
Everything is determined, the beginning as well as the end, forces over
which we have no control. It is determined for the insects as well as
for the stars, Human beings, vegetables or cosmic dust, we all dance to
a mysterious tune, intoned in the distance by an invisible piper.

உங்களுடைய ஆர்வம் 'metaphysical and
parapsychological aspects of mysticism' என்று
அறியப்படுகிறேன். இதைக்
குறித்து சமயம்
கிடைக்கும்பொழுது மேலும்
எழுதுங்கள்.

உங்களுடைய வலைதளம்
யாவையும் மேலோட்டமாக ஒரு
முறை பார்த்து விட்டேன்.
நிரந்திர காலண்டரும்,
தபால் தலை சேகரித்தலும்
மிகக் கவர்ந்தன. பிறகு
நிதானமாக எல்லாவற்றையும்
பார்க்கிறேன்.

உங்களுடைய அனுபவங்கள்,
'metaphysical and parapsychological aspects of mysticism'
இவைகள் பற்றி, நேரம்
கிடைக்கையில் இல்லத்தில்
எழுதுங்கள்.

அன்புடன்
பார்வமணி

seenu venkatram

unread,
Dec 7, 2006, 11:43:46 PM12/7/06
to il...@googlegroups.com
ஐயா, தங்களது மடலுக்கு மிக்க நன்றி. வெகு வெகு சிலரே நான் சேமித்து பிரசுரித்த வலை மடலை பிரித்துப் படிக்கிறார்கள். அப்படி அதைப் படிப்பவர்கள் கூட, தங்களைப் போலில்லாமல்,  அதை அவசரமாக வெளிப்படியாக பார்த்து விட்டுச் சென்றுவிடுகிறார்கள். தஙகளைப் போல அதை விரிவாகப் படிக்க, பரிசீலிக்க பொருமையோ ஆர்வமோ இருப்பதில்லை. எனது ஒரு சிரிய வேண்டு கோள் என்னவென்றால் அதில் என்னுடைய (Guest Column) தங்களுடைய விமரிசனம் ஏதாவது இருந்தால் எழுதிச்செல்லவும்.
மற்ற விவரங்களை உங்களது சொந்த ஈமெயிலுக்கு சமயம், மனம் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்
 
நன்றியுடனும் அன்புடனும்
சீனு (ஸ்ரீனிவசன்)
(visions) in formulating his scientific theories ( p.282 "Almanac Of The
Reply all
Reply to author
Forward
0 new messages