Fwd: Fw: Old Parents

5 views
Skip to first unread message

V Ramesh

unread,
Apr 18, 2007, 5:06:25 AM4/18/07
to Tamil2...@googlegroups.com, Thami...@googlegroups.com, Tamila...@googlegroups.com, ITamizh...@googlegroups.com, il...@googlegroups.com

 
 
An 80 year old man was sitting on the sofa in his house along with his 45
years old highly educated son. Suddenly a crow perched on their window.

The Father asked his Son, "What is this?"

The Son replied "It is a crow".

After a few minutes, the Father asked his Son the 2nd time, "What is this?"


The Son said "Father, I have just now told you "It's a crow".

After a little while, the old Father again asked his Son the 3rd time,

What is this?"

At this time some expression of irritation was felt in the Son's tone when
he said to his Father with a rebuff. "It's a crow, a crow, a crow".

A little after, the Father again asked his Son the 4th time, "What is
this?"

This time the Son shouted at his Father, "Why do you keep asking me the
same question again and again, although I have told you so many times 'IT IS
A CROW'. Are you not able to understand this?"

A little later the Father went to his room and came back with an old
tattered diary, which he had maintained since his Son was born. On opening a
page, he asked his Son to read that page. When the son read it, the
following words were written in the diary :-

"Today my little son aged three was sitting with me on the sofa, when a
crow was sitting on the window. My Son asked me 23 times what it was, and I
replied to him all 23 times that it was a Crow. I hugged him lovingly each
time he asked me the same question again and again for 23 times. I did not
at all feel irritated I rather felt affection for my innocent child".

While the little child asked him 23 times "What is this", the Father had
felt no irritation in replying to the same question all 23 times and when
today the Father asked his Son the same question just 4 times, the Son felt
irritated and annoyed.

So..

If your parents attain old age, do not repulse them or look at them as a
burden, but speak to them a gracious word, be cool, obedient, humble and
kind to them. Be considerate to your parents. From today say this aloud, "I
want to see my parents happy forever. They have cared for me ever since I
was a little child. They have always showered their selfless love on me.

They crossed all mountains and valleys without seeing the storm and heat to
make me a person presentable in the society today".

Say a prayer to God, "I will serve my old parents in the BEST way. I will
say all good and kind words to my dear parents, no matter how they behave."
 

Thanks and Regards,
Nayeem
NaukriGuru
nay...@naukriguru.in
www.naukriguru.com
 
Phone: 022 -27810035  Ext 38

 



--
ஈன்று உவப்பது தாய்க்கு கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே
ஒளிர்வாள் அருஞ்சமம் முறுக்கி
களிறு எறிந்து பெயர்தல்
காளைக்கு கடனே

என்றும் மறவா நட்புடன்
ரமேஷ்

விஸ்வநாதன் பாலசுப்ரமணியன்

unread,
Apr 18, 2007, 5:44:30 AM4/18/07
to il...@googlegroups.com
அன்புள்ள ரமேஷ்,

ஏற்கனவே படித்த ஒரு கதைதான். என்றாலும், எனக்குப் பிடித்த நல்ல கதை இது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

திரு. டி.வி. ரமணன் அவர்களும் இது போன்ற சுவையான பல மடல்களை அனுப்பிய வண்ணமே இருக்கிறார், "தினமும்". ஆனால், MS-Word இணைப்பாக இல்லாமல் இருப்பதால், அவரின் நூற்றுக்கணக்கான மடல்களை இதுவரை நீக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

எனவே, இனிமேல், நேரம் இருப்பின், இது போன்ற நல்ல கதைகள், செய்திகள் போன்றவற்றை Ms-Word கோப்பில் இட்டு இணைப்பாக அனுப்பவும் (http://azhagi.com/illam.html வலைப்பக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது போல்).

வாழ்க வளமுடன்!

மிக்க அன்புடன்
- விஸ்வநாதன்

On 4/18/07, V Ramesh <rames...@gmail.com> wrote:
An 80 year old man was sitting on the sofa in his house along with his 45
years old highly educated son. Suddenly a crow perched on their window.

... .... ..
 
...
..

 

vishalam raman

unread,
Apr 18, 2007, 6:11:42 AM4/18/07
to il...@googlegroups.com
அன்பு ரமேஷ்  மிக அருமை  ,,மனதில் அழமாகப் பதிந்து விடும் கதை    ,,,,,,,அன்புடன் விசாலம்  

வேந்தன் அரசு

unread,
Apr 18, 2007, 8:05:21 AM4/18/07
to il...@googlegroups.com
டயரி வாசிக்கசொல்லிட்டு சன் மடியில் ஃபாதர் ஏறி உட்கார்ந்துட்டாரா(:

On 4/18/07, V Ramesh <rames...@gmail.com> wrote:

Aananthen R

unread,
Apr 18, 2007, 9:11:01 PM4/18/07
to il...@googlegroups.com
அன்பின் ரமேஷ்,
வாழ்க வளமுடன். இதில் பெரிய முரண்பாடு இருப்பதை உணர்கிறேன். குழந்தை
தெரியாமல் கேட்கிறது. எத்தனை தடவைக் கேட்டாலும் சொல்வது சரி.
நாட்குறிப்பைத் தேடி கொடுக்கும் அளவுக்கு அறிவு சரியாக இருக்கும்போது
அந்தத் தந்தையின் செயல் எப்படி ஏற்புடையதாக இருக்கமுடியும். மனநிலை
சரியில்லாதவராக இருந்தால் ஏற்கலாம்.

On 4/18/07, V Ramesh <rames...@gmail.com> wrote:
>
>
>
>


--

வாழ்க வளமுடன்

இரா.ஆனந்தன்
visit: http://www.aananthen.blogspot.com

parvamani

unread,
Apr 18, 2007, 10:19:47 PM4/18/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆனந்தன்,

நீங்கள் நினைப்பது தவறு. வயதானவர்களுக்கு, ஏற்படும்
சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்காமல் எரிச்சல் படுவது தவறு என்பதை
எடுத்துக்காட்ட கையாண்ட யுக்தி இது. தவிர மனநிலை சரியில்லாதவர் என்று
நினைப்பது சரியில்லை

தகப்பனார், காக்கை பற்றி கேட்பது போல் இல்லாமல், வேறு ஏதேனும் விஷயத்தை
தேர்ந்தெடுத்திருந்தால் இந்த ஐய்யப்பாடு ஏற்பட்டிருக்காது,

பார்வமணி.


On Apr 19, 6:11 am, "Aananthen R" <ran.my...@gmail.com> wrote:
> அன்பின் ரமேஷ்,
> வாழ்க வளமுடன். இதில் பெரிய முரண்பாடு இருப்பதை உணர்கிறேன். குழந்தை
> தெரியாமல் கேட்கிறது. எத்தனை தடவைக் கேட்டாலும் சொல்வது சரி.
> நாட்குறிப்பைத் தேடி கொடுக்கும் அளவுக்கு அறிவு சரியாக இருக்கும்போது
> அந்தத் தந்தையின் செயல் எப்படி ஏற்புடையதாக இருக்கமுடியும். மனநிலை
> சரியில்லாதவராக இருந்தால் ஏற்கலாம்.
>

> visit:http://www.aananthen.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

வேந்தன் அரசு

unread,
Apr 18, 2007, 11:09:04 PM4/18/07
to il...@googlegroups.com
வயசானவங்க சந்தேகம் கேட்டால் பரவாயில்லை.
கேட்டு விட்டு அறிவுரை சொல்லுவாங்களே? குழந்தை சொல்லுமா?

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Aananthen R

unread,
Apr 19, 2007, 8:27:37 PM4/19/07
to il...@googlegroups.com
அன்பின் பார்வமணி,
வாழ்க வளமுடன். இது யுக்தி அல்ல. மீண்டும் நான் எழுதியதைப் பாருங்கள்.
மனநிலை சரியில்லாதவராக இருந்தால் ஏற்கலாம். நல்ல ம்னநிலையில் உள்ளவரின்
இந்த போக்கு ஏற்புடையது அல்ல. இது நடைமுறைக்கு சரியாகுமா?. எந்த
பொறுமையானவனும் கடுப்பாகிவிடுவான். சினத்தை எப்படித் தவிர்ப்பது என்று
பயிற்சி அளிக்கும்போது, இது போன்ற நிலை ஒருவர்க்கு பெரியவர்களால்
ஏற்படும்போது அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறோம்.
எந்த விஷயமாக் இருந்தாலும் வேண்டுமென்றே கேட்கும் நல்ல நிலையில்
உள்ளவர்களின் போக்கு ஏற்புடைத்தல்ல. உங்களுக்கு மிகப் பெரிய மனம். இது
சரி என்கின்றீர்கள். நம்மால் முடியாது.


On 4/18/07, parvamani <parv...@airtelbroadband.in> wrote:
> அன்புள்ள ஆனந்தன்,
>
> நீங்கள் நினைப்பது தவறு. வயதானவர்களுக்கு, ஏற்படும்
> சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்காமல் எரிச்சல் படுவது தவறு என்பதை
> எடுத்துக்காட்ட கையாண்ட யுக்தி இது. தவிர மனநிலை சரியில்லாதவர் என்று
> நினைப்பது சரியில்லை
>
> தகப்பனார், காக்கை பற்றி கேட்பது போல் இல்லாமல், வேறு ஏதேனும் விஷயத்தை
> தேர்ந்தெடுத்திருந்தால் இந்த ஐய்யப்பாடு ஏற்பட்டிருக்காது,
>
> பார்வமணி.
>
>

AKR

unread,
Apr 19, 2007, 9:03:27 PM4/19/07
to il...@googlegroups.com
அன்பு ஆனந்தன், அண்ணா,

இளமைப் பருவத்திலிருக்கும் மகனுக்குக் கோபம் வருவது இயற்கை. தன் தந்தையில் மேல்
அவன் கோபம் கொண்டதனால் அவர்மேல் அவனுக்கு அன்பில்லை என்றாகிவிடாது. ஒரு தகப்பன்
தன் குழந்தை எவ்வளவு முறை ஓரே கேள்வியைக் கேட்டாலும் அவன் திரும்பத் திரும்ப
சலிக்காமல் பதில் கூறுவது ஏனெனில் அவன் தன் குழந்தை கேள்வி கேட்பதையும்
அதற்குத் தான் பதில் கூறுவதையும் பேரின்பமாகக் கருதுகிறான்.

மகன் பெரியவனாக வளர்ந்து தானும் ஒரு தந்தையாகையில் இதனை உணர்வான். இதில்
யாரையும் குறை கூறுவதற்கில்லை.

அன்புடன்

ஆகிரா

separa

unread,
Apr 21, 2007, 2:36:35 AM4/21/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆகிரா

இந்த வரிகள்

ஈன்று உவப்பது தாய்க்கு கடனே

இப்படி இருக்க வேண்டும்.(நன்றி - தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று
வரை

By Dr. C.R. Krishnamurti,
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C.
Canada)


ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக்கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்கடன
(Anon)

Notwithstanding their indulgence in describing subjective passions of
love and romance at considerable length, the Sangam poets held lofty
ideals of life. The duties of different segments of the society are
outlined in the following verse:

ஆனால் இப்படிக் கடனே என்று (கடனுக்குக் கடமை எனப் பொருள் கூறினாலும்)
பாசம் அன்பு இல்லாது வளர்க்கும் பெற்றோருக்கு இப்படி ஒரு மகன் இருப்பதில்
வியப்பென்ன?

எனது கருத்து

என்னவன் இளையன் இனி வரும் நாளும்
நன்னடை உடையனாய், நற்பெயர் பெறவே
இன்னரும் தாயாய் எனது பங்கீதென
முன்னர் இருப்பாள் அவள் முகவரி தாயென!!

மன்னவன் இவனெனக்கு மாதவம் என்றே
சொன்னவன் தந்தை; சுற்றமும் உறவும் போற்ற
நன்னலம் தரும் கல்வி நயந்தங்கே வழங்கும்
அன்னவர் (மனம் மகிழ) மைந்தன் அரும் பெரும் செயலும் ஆற்றும்

அன்புடன்
செபரா

> >> > visit:http://www.aananthen.blogspot.com-Hide quoted text -

AKR

unread,
Apr 21, 2007, 4:17:20 AM4/21/07
to il...@googlegroups.com
அன்பு செபரா,
இணைப்பைக் காண்க.
puRam312.jpg

வேந்தன் அரசு

unread,
Apr 21, 2007, 8:04:50 AM4/21/07
to il...@googlegroups.com
On 4/21/07, separa <sepa...@gmail.com> wrote:
எனது கருத்து

என்னவன் இளையன் இனி வரும் நாளும்
நன்னடை உடையனாய், நற்பெயர் பெறவே
இன்னரும் தாயாய் எனது பங்கீதென
முன்னர் இருப்பாள் அவள் முகவரி தாயென!!

மன்னவன் இவனெனக்கு மாதவம் என்றே
சொன்னவன் தந்தை; சுற்றமும் உறவும் போற்ற
நன்னலம் தரும் கல்வி நயந்தங்கே வழங்கும்
அன்னவர் (மனம் மகிழ) மைந்தன் அரும் பெரும் செயலும் ஆற்றும்
 
பாடல்கள் இனிமை

இரா. ஆனந்தன்

unread,
Apr 22, 2007, 10:12:35 PM4/22/07
to இல்லம் (your HOME)
அன்பின் ஆகிரா,
வாழ்க வளமுடன். கோபம் என்பதற்கு இங்கு இடமில்லை. இங்கு யதார்த்தம்
குறித்து சொன்னேன். எந்த ஒரு உயர்ந்த அறிவில், அன்புடன் இருப்பவனும்
எவராவது வேண்டுமென்றே திரும்பத் திரும்ப ஒன்றைக் கேட்டால் சிரித்துக்
கொண்டே பதில் சொல்வார்களா?
அப்பா 30 வயது பையனைப் பார்த்துக் கேட்கிறார்.
எங்கு போய்விட்டு வருகிறாய்?
பையன்: நண்பர் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.
அப்பா: மீண்டும் எங்கு போய்விட்டு வருகிறாய்.
பையன்:நண்பர் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.
அப்பா: மீண்டும் எங்கு போய்விட்டு வருகிறாய்.
பையன்:நண்பர் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.
அப்பா: மீண்டும் எங்கு போய்விட்டு வருகிறாய்.
பையன்:நண்பர் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.
அப்பா: மீண்டும் எங்கு போய்விட்டு வருகிறாய்.
பையன்:நண்பர் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.
அப்பா: மீண்டும் எங்கு போய்விட்டு வருகிறாய்.
பையன்:நண்பர் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.
..........................................................

அப்பா மிக்க அன்போடு வளர்த்தார். அதனால் இப்படியே எந்த பையன் சொல்லிக்
கொண்டுருப்பான். நடைமுறைக்கு ஒவ்வாததை எழுத்துக்காக சொல்வது நம்மை நாமே
நியாயப் படுத்திக் கொள்வதாகவே ஆகும்.

> >> > visit:http://www.aananthen.blogspot.com-Hide quoted text -

AKR

unread,
Apr 23, 2007, 3:14:57 AM4/23/07
to il...@googlegroups.com
அன்பு ஆனந்தன்,

இவ்விஷயத்தில் தங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். என்
அனுபவத்தில் இதனை நன்கு உணர்ந்திருக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் 1983ஆம்
வருடம் திருமணம் நடந்தது. பலவருடங்கள் பிள்ளைப்பேறின்றி மருத்துவப்
பரிசோதனையில் எங்களுக்கு அந்தப் பேறு இல்லை எனக் கூறிவிட்டபின்னர் தெய்வாதீனமாக
1992ஆம் ஆண்டு 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு மகன் பிறந்தான். வாழ்வில் ஒளி
பிறந்தது. தினமும் அலுவலகத்திலிருந்து திரும்பிய நேரம் முதல் மறு நாள் காலை
மீண்டும் அலுவலகம் செல்லும் வரை அவனுடனேயே இருந்து கொஞ்சி மகிழ்ந்திருந்தேன்.

தினமும் அவன் என்னைக் கதை சொல்லச் சொல்வான். காக்காய் நரிக் கதை, காட்டெலி
நாட்டெலிக் கதை, காக்கா குருவி கதை என்று பல கதைகளை தினமும் சொல்வேன்.
திரும்பத் திரும்ப ஓரே கதையை மறு முறையும் கூறும்படி வற்புறுத்துவான்.
சலிக்காமல் நானும் மீண்டும் மீண்டும் சொல்வேன். அதைக்கேட்டுச் சிரித்து
மகிழ்வான் அவன்.

இன்று அவன் 10ஆம் வகுப்பு பரிக்ஷை எழுதியுள்ளான். அவனிடம் நான் ஒரு விஷயத்தைப்
பற்றி இரண்டாம் முறை கேட்டாலே அவன், "இப்போ தானேப்பா சொன்னேன்" என்று
அலுத்துக்கொள்வான். அவனது வயதும், எண்ண வேகமும் அவ்வாறு அவனை இயங்கச்
செய்கின்றன. தெரிந்த செய்தியையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டும்
கேட்டுக்கொண்டும் இருப்பதை வளரும் பருவத்தினர் விரும்புவதில்லை. புதிது
புதிதாய்ப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு அதிகம். அதை
நாம் புரிந்துகொண்டு நடந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

ஆகிரா

----- Original Message -----
From: "இரா. ஆனந்தன்" <ran....@gmail.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>

வேந்தன் அரசு

unread,
Apr 23, 2007, 7:24:52 AM4/23/07
to il...@googlegroups.com
கேட்டால் எரிச்சல் அடைவான் என அறிந்தும் மகனை மென்மேலும் கேள்வி கேட்கும் தந்தையை என்ன சொல்லுவது?
 
வயசுதான் வளர்திருதுச்சு.

 
--

Aananthen R

unread,
Apr 24, 2007, 9:42:10 PM4/24/07
to il...@googlegroups.com
வாழ்க வளமுடன். இதுதான் நடைமுறை. வயதானவர்கள் இதுபோன்று சிக்கல்
ஏற்படுத்தும்போது சிறியவர்கள் முகத்தைச் சுழிக்காமல் அங்கிருந்து
நாசுக்காக் நழுவிக் கொள்ளவேண்டும்.

separa

unread,
Apr 25, 2007, 11:45:26 PM4/25/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆகிரா
எதுவொன்றையும் பரிட்சித்துப் பார்ப்பது, பிறகு ஒத்துக் கொள்வது என்பது
மனித இயல்பு. "ஈரப் பெயிண்ட்" என்று எழுதியதைப் பார்த்தபின்னும்,
தொட்டுப் பார்த்துக் கையில் ஒட்டிய பின், முகம் சுளிப்பது
நம்மியல்புதானே!.

இந்தப் பிரச்சினை வயதான பின் அதிகமாகிறது. அதிலும், வயதாகி, மனம் சற்று
சஞ்சலப்படும் பொழுது, நம் மேல் அன்புடையவர்களை மேலும் மேலும் சோதித்து
(எரிச்சலூட்டி!!) நம் மேல் அவர்கள் இன்னமும் அன்புடையவாரக
இருக்கிறார்களா, நமக்கு மதிப்பு !!! இன்னமும் இருக்கிறதா என்றெல்லாம்
பார்ப்பதும் அதன் காரணமே.

வயதானபின் அனைவரும் குழந்தைகளாகிவிடுகிறார்கள். குழந்தைகள் போலத்தானே
நடப்பார்கள். இதனை நமது பிள்ளைகளுக்கு, உணர்த்தினால், இந்த வலி
தெரியாது.
சிறுவர்கள் இதனை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தங்களைச் சோதிப்பது
பெரியவர்களின் நோக்கமல்ல என்று உணர்ந்த இடத்துப் பொறுமை காக்கிறார்கள்.
இது எனது அனுபவ உண்மை.

இந்த இரண்டும் கெட்டான்கள் (விடலைப்பருவத்தில் இருப்பவர்களும், 30 முதல்
50 க்குள் இருப்பவர்களும்தான்) அதிகம் தொந்தரவு செய்கிறார்கள்.
இவர்களுக்குத்தான் பொறுமை குறைவு. காரணம் அன்பு இல்லை என்பதில்லை.
பல்வேறு பிரச்சினைகள்; மனம் அல்லல்படுகிற பொழுது, இந்த சோதனை
எரிச்சலூட்டுகிறது.

" இன்று அவன் 10ஆம் வகுப்பு பரிக்ஷை எழுதியுள்ளான். அவனிடம் நான் ஒரு
விஷயத்தைப் பற்றி இரண்டாம் முறை கேட்டாலே அவன், "இப்போ தானேப்பா
சொன்னேன்" என்று அலுத்துக்கொள்வான்"

- அலுத்துக் கொள்கிறானே தவிர
பொறுமை இழப்பதில்லை என்பதனை நான் நேரிலேயே கண்டேனே!! இத்தகு பிள்ளைகளைப்
பெற்றவர்கள் புண்ணியசாலிகள்!


அன்புடன்
செபரா

On Apr 23, 12:14 pm, "AKR" <akrconsulta...@gmail.com> wrote:
> அன்பு ஆனந்தன்,
>

> ...
>
> read more »- Hide quoted text -

AKR

unread,
Apr 26, 2007, 4:34:49 AM4/26/07
to il...@googlegroups.com
உண்மைதான் அன்பு செபரா,

என்னிடம் மிகவும் அன்புகொண்டவன் என் மகன். மழலைப் பருவத்தில் இருக்கும்பொழுது
அவனிடம், "உன்னை யார் பெற்றார்?" என்று கேட்டால், எத்துணை முறை கேட்டாலும்,
"அப்பா பெற்றார்" என்றுதான் சொல்வான். அவ்வளவு நெருக்கமாக என்னிடம் இன்னும்
இருக்கும் அவனது பொறுமையை சோதிக்கும் கேள்வி எதையும் நான் கேட்பதைத் தவிர்த்து

வருகிறேன்.

மேலும் இக்காலக் குழந்தைகள் பள்ளியிலும் மற்ற துறைகளிலும் நாம் அவர்கள்
வயதினராயிருக்கையில் உழைத்ததை விட மிகக் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை
இன்றைய காலகட்டத்தில் நிலவுவதால் இயற்கையிலேயே அவர்களுக்கு மன இறுக்கத்தை
உண்டாக்கும் சூழல் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய மன இறுக்கத்தைக் குறைக்கும் வகையில் அவர்களிடம் நாம் நடந்துகொள்வது
அவசியமாகிறது.

வேந்தன் அரசு

unread,
Apr 26, 2007, 8:08:33 AM4/26/07
to il...@googlegroups.com
>வயதானபின் அனைவரும் குழந்தைகளாகிவிடுகிறார்கள்
 
அது யாருங்க. வஜ்பாய்?, ராஜாஜி? பெரியார்? கலாம்?

Venkatram Shrinivas

unread,
Apr 26, 2007, 2:08:40 PM4/26/07
to il...@googlegroups.com

எனக்குத் தெரிந்த வரை இருக்கிறான் ஒரு 76வயதுடைய 'சீனு' என்ற பெயர் கொண்ட ஒருவன்.

இந்த மும்முரமான கருத்துப் பரிமாற்றத்தில், தாறுமாறாக எதையாவது எழுதி அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொல்லை கொடுக்கவேண்டாமென்று இவ்வளவு நாள் சும்மாயிருந்தவனை திரு வேந்தனது வினா என்னையறியாமல் 'புகுந்து' (நான் முன்பே சொன்னபடி 'தாறுமாறாக' பதிலளிக்க வைத்துவிட்டது. எல்லோரும் எப்பொழுதும் போல் என்னை மன்னித்து விடவும்

separa

unread,
Apr 27, 2007, 1:42:23 AM4/27/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தே
சிலர் குழந்தையாகக், கள்ளமில்லாது பழகுகிறார்கள்; பேசுகிறார்கள். இது
மனிதத்தன்மையினைக் காட்டுகிறது. சில நேரத்தில் (நம் மன நிலையினைப்
பொறுத்து) எரிச்சலூட்டலாம் எனினும், வெறுக்கப்படுவதில்லை.

சிலர் வயதானபின்னும், எல்லாம் அறிந்தும், அறியாதது போலக்
குழந்தைத்தனமாகப் பேசுகிறார்கள். இது ஆழம் பார்ப்பது. உணர்ந்தவர்கள்
எச்சரிக்கையாகப் பழகுவார்கள். அநேகமாக ஒதுங்கிப் போகவே எல்லோரும்
விரும்புவார்கள்.

நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம், குழந்தைகள் கூட்டத்தில் குழந்தைகள்
போலச் செயல்படுபவர்கள். மற்ற நேரத்தில் எதிராளியினைக் குழந்தைகளாக்கி
(மனப் பக்குவம் இல்லாதவராகக் காட்டி) விடுபவர்கள். இது அறிவாற்றலைக்
காட்டுவது.மதிப்பினை உண்டாக்குவது. வெறுக்கப்படவில்லை எனினும், தொலைவில்
இருப்பதனையே பெரிதும் விரும்பப்படுவது

ஆக வயதானபின்னும், முதல் வகைக் குழந்தைகளாக இருப்பது விரும்பப்படுகிறது.
அவ்வளவே


அன்புடன்
செபரா

வேந்தன் அரசு

unread,
Apr 27, 2007, 6:46:42 AM4/27/07
to il...@googlegroups.com
On 4/26/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:

எனக்குத் தெரிந்த வரை இருக்கிறான் ஒரு 76வயதுடைய 'சீனு' என்ற பெயர் கொண்ட ஒருவன்.

 
அந்த சீனு கடந்த 76 வருடங்களாக அப்படிதானே இருந்தார்?
 
ஐந்திலே வளைந்தவர்.(:

Venkatram Shrinivas

unread,
Apr 28, 2007, 10:17:20 AM4/28/07
to il...@googlegroups.com

என்னவெல்லாமோ சொல்லி இந்தசின்னப் பையனைக் குழப்பிவிட்டீர்கள் .

 

ஏதோ 'ஜோக் அடித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

எதற்கும் 'ஹொ ஹோ! ஹ ஹா!' (HO! HO! HA! HA! HA!) என்று வாய் விட்டு சிரித்து விடுகிறேன்.

 

இன்னமும் 'ஐந்தில் விளைந்தது' என்றெழுதியிருக்கிறீர்கள்.

எனக்கு விளைந்தது என்னவோ எனது எட்டு வயதில் தான். அவ்வயதில் எனது உயிருக்குயிரான அன்னையைப் பறிகொடுத்தேன் (விலை மதிப்பில்லா தந்தை எனது தந்தையார் நான் ஒரு வயதாகு முன் வானெய்துவிட்டார்)

 

எல்லாம் சரி. கீழே கொடுத்திருக்கும் எனது பாட்டைக் கேளுங்கள். நேற்றிரவு தான் பாடி அப்படியே கணிணியில் 'ரிகார்ட்' பதிவிரக்கம் செய்தது

hohohaha.gif

AKR

unread,
Apr 28, 2007, 10:43:08 AM4/28/07
to il...@googlegroups.com
அன்பு சீனு மாமா,
 
அஞ்சிலே வளைச்சா வளைஞ்சுவிடும்
அம்பதில் வளைச்சா ஒடிஞ்சுவிடும்
ஒராயிரம் கற்றதும் கேட்டதும்
கெட்டவன் புத்தியில் தங்குமா
 
கண்மணி பப்பா
மனிதன் பிறந்தது குரங்குக்குத்தானென
சொன்னது தப்பா
 
என்று ஜே.பி. சந்திரபாபு பாடிய பாடலை எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
தங்கள் பாடல் அருமை. இதன் "வார்த்தைகளை" (Lyrics) - email செய்யுங்கள்.
 
மழலைகள் படிக்கவும் கேட்கவும் அளிக்கலாம்.
 
அன்புடன்
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Saturday, April 28, 2007 7:47 PM
Subject: [ILLAM, your HOME] Re: Fwd: Fw: Old Parents



வேந்தன் அரசு

unread,
Apr 28, 2007, 11:06:45 AM4/28/07
to il...@googlegroups.com
On 4/28/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:

என்னவெல்லாமோ சொல்லி இந்தசின்னப் பையனைக் குழப்பிவிட்டீர்கள் .

 

ஏதோ 'ஜோக் அடித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

எதற்கும் 'ஹொ ஹோ! ஹ ஹா!' (HO! HO! HA! HA! HA!) என்று வாய் விட்டு சிரித்து விடுகிறேன்.

 
 

சீனு இது ஜோக்கு இல்லேங்க.
 
நீங்க சின்னப்லே இருந்து குழந்தை மனம் படைத்தவரா இருக்கணும் என்றேன். சரியா?
 
 குழந்தை மனம் படைத்தவரா எல்லாம் நடிக்க முடியாது.
 
முசுடு மனம் சாவும் வரை முசுடுதான்.
 

--

Venkatram Shrinivas

unread,
Apr 28, 2007, 1:52:10 PM4/28/07
to il...@googlegroups.com


தப்பு செய்யாவிட்டால் சீனு எப்படி சீனு ஆவான் !

"ஐந்தில் வளைந்தவர்" என்பதை "ஐந்து வயதினிலே என்று மனதில் வைத்துக் கொண்டு எப்பொழுதும்போல் உளறத்தொடங்கி விட்டேன்.

தவறுக்கு வழக்கம்போல் மன்னிப்புக் கோரிக்கொண்டு எப்படி இருப்பினும் என்

முதல்  உள்றிலில் மாற்றம் செய்து எல்லோருக்கும் மறுபடியும் தொல்லை

கொடுக்கப் போவதில்லை.

On 4/28/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:


--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Apr 28, 2007, 2:25:42 PM4/28/07
to il...@googlegroups.com

இல்லத்தார் அனைவரும் என்னை நம்புங்கள்

என் மடலை எழுதும்பொழுது திரு வேந்தன் அவர்களது ஞாபகம் தான்

இருந்தது . 'இல்லத்துக்கு' எழுதுகிறோம் என்ற எண்ணமேயில்லாமல்

மடலை அனுப்பிவிட்டேன் ! இப்பொழுது தெரிய வருகிறது கடவுளின் அருளால் தாங்களும் என்னருமை திரு விஷுவும் என்னுடைய பாடலை பொருமையுடன் கேட்டீரகள் என்பதையறிய எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

திரு ஆகிரா அந்தப் பாடலின் (lyrics) பதங்களைப் பற்றிக் கேட்டிருந்தார்

அவை பின்வருமாறு :

 

(If you are young at heart

you should survive

to a hundred and five.

You have the headstart,

If you are among the very young at heart.

If you are young at heart)

 

அந்தப் பாட்டின் வரிகளுக்கு என்னால் முடிந்த வரை செய்த தமிழாக்கம்

பின்வருமாறு :

 

எப்பொழுதும் இளமையுள்ளத்துடன் இருந்தால் (நூற்றுக்கும் மேல்) நூற்று ஐந்து ஆண்டுகாலம் வாழ்வீர்.

  உள்ளத்திலே மிக மிக இளைமையுடன் நீங்கள் இருந்தால் அப்படி இருந்து (களிக்க ) மேலும் அதிக வாய்ப்பு இருக்கிற்து

வேந்தன் அரசு

unread,
Apr 28, 2007, 2:50:22 PM4/28/07
to il...@googlegroups.com
சீனுவின் பாட்டை நானும் கேட்டேன்.
 
எனக்கு ஆங்கிலம் கேட்டு கேட்டு அலுத்து விட்டது. அதனால் விரல்மேல் வாய் வைத்துக்கொண்டேன்.

separa

unread,
May 2, 2007, 6:14:17 AM5/2/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தே

" குழந்தை மனம் படைத்தவரா எல்லாம் நடிக்க முடியாது

முசுடு மனம் சாகும் வரை முசுடுதான்" - ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

குழந்தை மனம் சிறப்பு; திரு ஸ்ரீனிவாசனைப் பற்றிய உங்கள் கணிப்பு
சரியாகத்தான் இருக்கும் என்பதனை, அவருடன் விஷியின் வீட்டில் முதன்
முதலாகத் தொலை பேசியில் பேசிய பொழுதும், பிறகு அவர் எனது பாடலை ராகம்
போட்டுப் பாடி எனக்குத் தெரிவித்த பொழுதும், உணர்ந்தேன்.உரைத்தேன்
அன்புடன்
செபரா.

On Apr 28, 8:06 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> On 4/28/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:
>
>
>

> > *என்னவெல்லாமோ சொல்லி இந்தசின்னப் பையனைக் குழப்பிவிட்டீர்கள்** .*
>
> > * *
>
> > *ஏதோ 'ஜோக் அடித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.*
>
> > *எதற்கும் 'ஹொ ஹோ! ஹ ஹா!' (HO! HO! HA! HA! HA!) என்று வாய் விட்டு சிரித்து
> > விடுகிறேன். *


>
> சீனு இது ஜோக்கு இல்லேங்க.
>
> நீங்க சின்னப்லே இருந்து குழந்தை மனம் படைத்தவரா இருக்கணும் என்றேன். சரியா?
>
>  குழந்தை மனம் படைத்தவரா எல்லாம் நடிக்க முடியாது.
>
> முசுடு மனம் சாவும் வரை முசுடுதான்.
>
>  --
>
>
>
> > வேந்தன் அரசு
> > சின்சின்னாட்டி

> > (வள்ளுவம் என் சமயம்)- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages