: shiva matam

29 views
Skip to first unread message

vishalam raman

unread,
Aug 1, 2007, 5:07:41 AM8/1/07
to pira...@googlegroups.com, முத்தமிழ், il...@googlegroups.com


ஆதவன் இளம் சிவப்பை அள்ளித்தெளித்து  ம்றைந்து கொண்டிருந்தான்.அந்தக் காட்சியை நான் ரசித்து கொண்டிருந்தேன்."வவ்  ...வவ்.. என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி கீழே வந்து அந்த திசையில் பார்த்தேன்..ஆம் ..அது நான் கட்டியிருக்கும் சிவமடத்திலிருந்து வந்தது..ஒரு பெரிய வேப்பமரம் நிழலை அள்ளிக்கொடுத்தது.அதற்கு கீழ் ஒரு மேடை..அந்த மேடைக்கீழ் நான்கு அருமையான நாய்க்குட்டிகள் தங்கள் தாயிடம்  பாலைக் குடித்துக்கொண்டிருந்தன. தாய் நாய் மிகவும் ஆசையாக் தன்னுடைய நாக்கால் நக்கிக்கொடுத்து தன் பாசத்தைக் காட்டியது.இந்தக் காட்சியைப் பார்த்து வியந்தேன்.தாய் பாசம் என்றாலே தனிதான்.அதில் ஒரு நாய் என்னை மிக கவர்ந்தது. கருப்பும் ,வெள்ளையும் கலந்தது அதன் உடல். நெற்றியில் நாமம் போல் கருப்புவண்ணம்.. அதை அள்ளி எடுக்கத்துடித்தது மனது. மெள்ள ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வந்தேன். எனக்கு பிடித்த ஹீரோவிற்கு பாலைக்கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.அம்ம நாய் குழ்ந்தைகளைக் கொஞ்சியபின் ச்ற்று வெளியே போயிற்று.நான் என்
மனம் கவர்ந்த ஹீரோவைத் தூக்கி அணைத்து பாலைக் கொடுத்தேன்.அது தன் பிஞ்சு நாக்கால் நக்கி,நக்கி ஒருஇன்பமான சத்தத்தை எழுப்பி நடுநடுவே என்னையும் தன் ஒரக்கண்ணால் பார்த்தது. தன் சிறு வாலை ஆட்டி கறுப்புப்ட்டன் போன்ற் கண்களை சுழ்ற்றி.....ஆஹா; என்ன கவர்ச்சி , என்ன அழகு:  அப்படியேஅதன் வசமானேன்.
என் சிவமடத்திற்குள்தான் என் அருமை சிவாஇருந்தது.நடந்து முடிந்த கதை.நான் இட்ட பெயர்தான்.நான் வளர்த்த என் அருமை ஜெர்மன்ஷெப்பெர்டு.அது தான் சிவா. அதை நாய் என்று யாரவது சொன்னால் எனக்கு ஆகாது.அது என் குழ்ந்தை.அதன் மேல் அத்தனை பாசம்.பத்து நாள் குட்டியாக் வந்தது.,,வளர்ந்தது..அதை ஆன்மீகமாக வளர்த்தேன். அது முன்பிறவியில் ச்ன்யாசியோ என்னமோ,வெளியே போனால்தன் இனத்துடன் சேர்ந்து ஒடாது.என் கூடவே இருக்கும் .நான் கீதைப் படிக்கும் நேரம் மணி 9.அதுவும் என் அருகில் அமரும்.முழு பூசையை கண்கொட்டாமல்பார்த்து ரசிக்கும். கற்பூரம் ஏற்றிய பின்னர் நான் அதன் கண்ணில் ஒற்றி விடுவேன் அது வரை அந்த இடத்தை விட்டு நகராது.பாட்டு ரசித்து கேட்கும்.வெளியிலிருந்து வந்தால்நேரே பாத்ரூமுக்கு போய் நிட்கும்.கால் அலம்பிய பிற்குதன் உள்ளே வரும் எல்லாம் ப்ழக்கிவிட்டேன்.
ஒருதடவை ஒரு திருடன் உள்ளே நுழைந்தான்.அது கத்தி.குரைத்த்து ஊரைக் கூட்டிவிட்டது.அவ்னிடைருந்து அடிகள் பெற்றுமவனை எதிர்த்தது.அவன் ஒடிவிட்டான் நான் பள்ளியிலிருந்துதிரும்பிவ்ந்தவுடன் ஒரே ஷாக்
அந்த சிவா என்னிடம் ஒடி வந்தது.நக்கியது தன் முதுகைக்காட்டி பலவிஷயங்கள் சொல்லமல் சொல்லியது,
அந்த பாஷை எனக்கு புரிந்தது..டில்லியில் கொளுத்தும் வெய்யில்.பத்து நாட்கள் சிம்லா போனபோது அந்தசிவாவை நாய் காக்கும் நிலயத்தில்விட.,,அது நாய் காக்கும் நிலயம் அல்ல  பணம் பிடுங்கும் நிலயம் என்றுபிற்குதான் புரிந்தது.உஷ்ணம் தங்காமல்.தண்னீருமில்லாமல் மஞசகாமலை வ்ந்து என் சிவா என் மடிமேல் உயிரை விட்டது.முடிவு காலம் தெரிந்த உடனேயே ராமநாமம் பாட்டு போட காதில் ராம்,ராம் என்றுசொல்ல வாயில் கங்கை நீர் ஊற்றஎன்னை நன்றியுடன் பார்க்க .....மறக்கமுடியவில்லையே அந்த தினம்.
 
அந்த சமாதி தான் இந்தமடம் அதில் ஒரு வேப்பமரம்ந்ட்டுமரமும் பெரிதாகிஅதன் நிழ்லில் இன்று பல பூனைக்குட்டிகள், நாய் குட்டிகள்..என் ஹீரோ புடவையைப்பிடித்து இழுக்க பழைய நினைவிலிருந்துவிடுப்பட்டு என் ஜுனியர் சிவாவை வெளியிலிருந்தே வளர்க்க ஆரம்பித்தேன்.
அந்த நாளும் வந்தது.நான் கறிகாய் வாங்கச் சென்றேன் என் அருமை ஜுனியர் சிவா என்னைத்தொடர்ந்துவந்தது. "போ சிவா '
உன் அம்மாவிடம் போ.பால் குடி பாவம் அவள் உன்னைத் தேடுவாள் நான் திரும்பி வந்ததும் வா "என்றேன்.ரொம்ப புரிந்தது போல் தன் முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து சம்மதம் தெரிவித்தது.வேக்மாக் நான் என் வேலையை முடித்துக்கொண்டு திரும்பிவந்தேன். பாவம் அது நடைப் பாதையில் எதிர்பக்கம் பொறுமையாக உட்க்கார்ந்திருந்தது.என் கையில் பிஸ்கட் இருந்தது.
மோப்ப சக்தியால் அது தெரிந்துகொண்டு ஆவலாக் என்னிட்ம் வர வேகமாக குறுக்கே பாய்ந்தது.
 
பீம்....பீம்.... அவ்வ்ளவுதான்..நான் வீல் என்று கத்தினேன்.  க்ண்மண் தெரியாமல் வந்த காரின் அடியில் என் அருமை ஹீரோ.யமன் ரூபத்தில் வந்துவிட்டான்.மனதை உருக்கும் ,...உலுக்கும் கூக்குரல் என் ஹீரோ எழுப்ப ஒரே கூட்ட்ம் ..கார் ஒட்டியவன் நிற்காமலே
ஒடிவிட்டான்.கார் ந்ம்பரைப் பார்த்தேன். அவன் தெரிந்தவந்தான். முன் வாரம் அஹிம்சையைப் பற்றி மேடையில் பேசினவன்.
பசுவதை சங்கத்தின் மெம்பர்...என் எதிரே ரத்தவெள்ளத்தில் என் ஹீரோ கிடக்க ஒரு சிலர்   பாவம் என்று சொல்ல மற்றவர்கள்
ஏதோ நாயாம் அறைந்துவிட்டதாம் என்று  சொல்லி அலட்சியமாக இடத்தைக் காலி செய்தார்கள். அதன் தாய் ஒடி வந்து .சுற்றி
சுற்றி அதை முகர்ந்து அழுதது.பின்னர் அதை இழுத்து .இழுத்து சற்று ஒரமாகப் போட்டது.என் க்ண்களில் நீர் பொங்க தாய் நாயை
தடவிவிட்டேன் .என்னால் வேறு என்ன செய்ய முடியும்?மெல்லப்போய் என் ஹீரோவை ஒரு அட்டைப்பெட்டிக்குள்  வைத்தேன்.
உயிர் போயிருந்தது. அதை மேலும் அறைய வைத்தோ அல்லது கழுகு கொத்திச்செல்லும் காட்சியைக் காணவோ என்க்கு மனதில்
தெம்பு இல்லை.சீனியர் சிவாவின் அருகில் குழி தோண்டி உப்பும் பாலும் விட்டு அடக்கம் செய்தேன். மனம் கார் ஒட்டின்வனை அசைப்போட்டது லஞ்சம் ஒழிக்க மேடையில் பேசி அவனே லஞ்சம் வாங்குகிறான்,மிருகவதைப் பற்றிபேசி அவனே மிருகத்தை
அழிக்கிறான்.சொல்வது ஒன்று செய்வது ஒன்றுஇது எங்கே போய் நிற்கும்?  கடவுளே ;......
 
உள்ளேவந்தேன். சுவரில் மாட்டிய கீதசாரம் என்னைப் பார்த்து சிரித்தது. "நீ என்னகொண்டு வந்தாய் ?அதை இழ்ப்பதற்கு"   ....மனதைத்தேற்றிக்கொண்டேன்.....போதும் அப்பா. இனி நாய் வளர்க்கவே மாட்டேன் .என் மனம் சொல்லியது.
பிரசவ வைராக்கியம் போலும் . ஒரு வாரத்திற்க்குப் பின்னர்   ....வவ் வவ் .இனிமையான குரல் ஒடினேன் பாலை எடுத்துகொண்டு.
மாயை என் கண்ணை மறைத்தது. மூன்றாவது சிவா வந்து விட்டான் .வளரப்போகிரான் ..வாழ்க சிவமடம் 
 
                                                                                                                                               விசாலம்.

AKR

unread,
Aug 1, 2007, 5:24:38 AM8/1/07
to il...@googlegroups.com
அன்பு சகோதரி,
 
மிருகங்கள், அதிலும் குறிப்பாக நாய்கள் காட்டும் பாச உணர்வை மனிதன் காட்டுவதில்லை, புரிந்துகொள்வதுமில்லை. என் சிநேகிதியான ஒரு நாயின் உயிரைக் காப்பாற்ற ஒரு சமயம் நான் என் வேலையையே துறக்கத்துணிந்தேன். அந்த விவரம்
 
 
 
ஆகிரா
 
---- Original Message -----

vishalam raman

unread,
Aug 1, 2007, 5:33:20 AM8/1/07
to il...@googlegroups.com
அன்பு ஆகிரா  கதையில்  அந்த வாயில்லாத மிருகத்தின் மேல் வைத்துள்ள பாசமும் அந்தச் சீவன்  காட்டும் நன்றியையும்  மனிதன்  மிருகமாகி விடுவதையும் மிக  அழகாக  படைத்திருக்கிறீர்கள் என்னுடையது  உண்மைச் சம்பவம்  உங்களதும் உண்மைதான் இல்லையா ?அன்புடன் விசாலம்

vim

unread,
Aug 4, 2007, 2:50:25 AM8/4/07
to இல்லம் (your HOME)
arumai arumai

> ஒடிவிட்டான்.கார் ...
>
> read more »

Venkatram Shrinivas

unread,
Aug 4, 2007, 4:48:31 PM8/4/07
to il...@googlegroups.com

ம்னிதர்கள்' பற்றிய எப்படி கணக்கிலா கூற்றுகள் (quotes), பழமொழிகள் (proverbs) இருக்கின்றனவோ அத்தனை மடங்கு 'நாய்கள்' பற்றியும் இருக்கின்றனவென்று எல்லோருக்கும் தெரியும். நான் ஒன்றும் புதிதாய் சொல்லுவதற்கில்லை. எனினும் என் மனதில் அடிக்கடி நினைவுக்கு வரும் ஒன்றை மட்டும் கூறவிரும்புகிறேன்.

மிலான் குண்டெரா (Milan Kundera) எனும்செக்கோஸ்லவாக்கிய எழுத்தாளர் கூறுகிறார்:

"Dogs are our link to paradise. They don't know evil or jealousy or discontent. To sit with a dog on a hillside on a glorious afternoon is to be back in Eden, where doing nothing was not boring--it was peace."

"நாய்கள், தேவலோகத்திற்கும் ('வானுலகம்' என்றும் வைத்துக் கொள்ளலாம்) நமக்கும் உள்ள ஒரு இணைப்பு. அவைகளுக்கு பெரும் தீயச் செய்ல், தீய எண்ணங்கள், பொறாமை, போராமைத்தனம் இவைகளைப் பற்றி சிறிதும் தெரியாது.  ஒரு நாயுடன் ஒரு மலைப்பகுதியில் உட்கார்ந்திருப்பது, தெய்விகப் பூங்காவில் இருப்பது போலாகும். அங்கு ஒன்றுமே செய்யாது சும்மாயிருப்பினும் சலிப்பு தட்டாது. அங்கே ஒரு அமைதி நிலவும்"

சிவாவைப் பற்றி படித்தவுடனேயே என்னுள்ளத்தைவிட்டகலாத எனது 'சிங்க்' (Singh) என் மனக்கண் தோன்றலானான்.

சிவனுக்கு ஒரு சமயம் மிகக் கோபத்துடன்  கால பைரவராகத் தோற்றமெடுத்தார் என்று நான் படித்ததுண்டு.  ஒரு நாயும்அந்தக் கால பைரவ்ருடன் கூடச்சென்றதால் நாயைக் கூட 'பைரவர்' எனச் சிலேடையாக கூப்பிடுவதண்டு.

நான் பிறந்த புகளூருக்கு பக்கத்தில் இருக்கும் மிகப்புராதனமான புகழிமலையில் முருகனது சன்னதிக்கு சற்றே கீழே இருக்கும் ஒரு சிரு கோவிலில் பரமசிவன் ஒரு நாயுடன் பைரவராகக் காட்சி கொடுக்கிறார். நான் இத்துடன் அனுப்பியிருக்கும் படத்திலுள்ள சிலையைப் போலவே காட்சி கொடுக்கிறார்.

கால பைரவரான பொழுது சிவனுக்கு நாய் வாகனம். 'பார்வதித்தாயாரவர்களக்கு அவர், மஹாகாளியான பொழுது சிம்ஹ வாஹனம். சிவாவைப்பற்றி படித்து விட்டீரகள்.
எனது சிங்கத்தின் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.

பிராணிகளின் அபிமானியாய்ப் பிறந்த எனக்கும் அந்த வாயில்லா ஜீவன்களுக்குமுள்ள தொடர்பைப் பற்றி ஒரு சீனாயனமாக (சீ+நாய் இல்லை! சீனு+நாய்) பிறகு எழுதுகிறேன். இப்பொழுது எனது சிங்கைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.

1973ம் வருடம் ஜனவரி 16ம் தேதியன்று, எங்களுடைய ஃபெம்மி2 (Femme2) முதல் தடவையாக நாங்கள் அதிசயமும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியுமடையும்படி நான்கே குட்டிகளைப் பெற்றது (ஒரு பெண்குட்டி மூன்று ஆண்குட்டி). பொதுவாக நாய்கள் ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளுக்குக் குறையாமல் பெற்றுக் கொடுப்பது தான் வழக்கம். ஒவ்வொரு குட்டியையும் அதனை விரும்பி எடுத்துக் கொண்டு அதனைக் கவனமாகவும் அன்புடனும் வளர்க்கத் தயாராக இருப்பவராகப் பார்த்துக் கொடுக்க வேண்டும் (இந்த விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்பானவன்). எண்ணிக்கையின் குறைவு எங்களுக்கு சிறிது ஆறுதல் கொடுத்தது.

ஃபெம்மி2 ஒரு வீட்டில் வளக்கப் பட்ட ஒரு கலப்பின நாய் (home-bred hybrid) குட்டிகளின் தந்தையோ குழந்தைப்பேறேயில்லாத எனது நண்பர் ஒருவர் அவருடைய் மனைவியுடன் அவர்களது சொந்தக் குழந்தை மாதிரி வளர்த்து வந்த ட்ரிகர் (Trigger) எனவ்ழைக்கப் பட்ட, அதிசியமாக ஒரு டாஷ்ஷண்டிற்கும் (dachshund) அல்சேஷியனுக்கும் (Alsatian) பிறந்த, எந்த நாயுடனும் உறவு கொள்ள இச்சையேயில்லாமிருந்த ஒரு அற்புதமான நாய்.

அச்சமயம், இந்திராநகரில் நாங்கள் குடியிருந்த விட்டிற்கு நாலாவது வீட்டிலிருந்த சிங்க் என்பவரின் மகனும் மகளும் என் மனைவியை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்ததினால் ஒரு குட்டியை என் மனைவி அவர்களுக்குக் கொடுத்து விட்டாள். குழந்தைகளின் பெற்றோர்கள் குட்டியை செல்லமாக  வளர்ப்பெதற்கு வாக்குறுதியுமளித்தனர்.

மற்ற மூன்று குட்டிகளும் செல்லப் பிராணிகளை நன்கு வளர்ப்பவர்களிடம் கொடுக்கப் பெற்றன.

எல்லா குட்டிகளையும் கொடுத்தபின் நாங்கள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டோம். ஏனென்றால் மிகச் செலவாளியான நான் எவ்வளவுதான் நாய்வள்ர்ப்பதில் ஆசையுள்ளவனாயினும், ஒரு நாய்க்கு மேல் வளர்க்கக் கட்டுப்படியாகாது என்று எனது மனைவி கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.

நாய்குட்டிகளையெல்லாம் கொடுத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. நாங்கள் சற்றும் எதிர்பாரமல் சிங்க் என்பவரின் பையன் நாங்கள் கொடுத்தக் குட்டியை என் மனைவியிடம் கொடுத்து விட்டு  தனது அப்பா கொடுத்துவிடச் சொன்னாரெனக் கூறிவிட்டுச் சென்று விட்டான். நான் மறு நாள் அந்தப் பையன் வீட்டிற்குச் சென்று விசாரித்த பொழுது தான் அவன் தந்தை சிங்க் கூறினார் அவருக்கு டெல்லிக்கு மாற்றலாகப் போகிறதென்றும் அவர்கள் கூட நாய்க்குட்டியை எடுத்துச் செல்ல இயலாதென்றும் கூறினார். பிராணிகள் மீது உண்மையான அன்புள்ளவரகள் வேலை மாற்றமென்றால் தன் வளர்ப்புப் பிராணிகளை அப்படியே விட்டு விட்டுச் செல்வார்களா? எனக்குண்டான வருத்தத்தையும் கோபத்தையும் அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் தகவலைச் சொன்னேன். என்னைவிட பன்மடங்கு கோபமு விரக்தியுமடைந்த என் மனைவி திரும்பி வந்த நாய்க்குட்டியை சிங்க் என்ற பெயரிட்டே அழைக்கலானார்.

ஒரு நாள் விடிகாலையில் பலத்தக் கூக்குறலுடன் என்னை எழுப்பிய என் மனைவி "ஆட்டோரிக்ஷாக்காரன் சிங்க் மேலே ஏற்றிவிட்டு ஓடிவிட்டான். ஐயோ சிங்க் அநியாயமாய்ப் போய்விட்டானே எனக் கதறலானாள். (அச்சமயம் எங்களது மூன்று குழந்தைகளும் வெயிற்கால விடுமுறையை (summer holidays) சென்னையிலிருக்கும் அவர்களது தாய் வழித் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தார்கள்.
மிகப் பதற்றத்துடன் எழுந்த நான், உடனே ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே ஓடி வந்தேன். எங்களது சிங்க் இரத்தப் பெருக்குடன் கீழே விழுந்து கிடந்தான். சுற்றிலும் இருந்த மக்கள் ஒரே குரலில் அந்தப்பாவி இவ்வளவு அகலமான ரோட்டில் (இப்பொழுது மிகப் பிரப்லமாகிவிட்ட சின்மயனந்தா சாலை) விடிகாலையில் ஒன்றிரண்டு வாகங்களே ஒடிக்கொண்டிருக்கும் பொழூது கண்மண் தெரியாமல் ஓட்டிக்கொண்டு  இந்தக் குட்டியின் மேல் ஏற்றிவிட்டு ஓடிவிட்டான் சார். குட்டி பிழைப்பது சந்தேகம் தான். எடுக்கலாமென்று போனால் கடிக்க வருகிறது எனக் கூறலானார்கள்.

நான் சிங்கைப் பார்த்தவுடனே அதை நெருங்கி அவனைத் தூக்கிக்கைகளில் எடுத்துக் கொண்டு அவன் பொருக்க முடியாத வலியால் என்னைக் கடித்துக்கொண்டிருப்பதை லட்சியம் செய்யாமால் சாலையில் ஓடிக்கொண்டே தற்செயலாக அங்கு வந்த ஒரு காலி ஆட்டோரிக்ஷாவில் ஏறி நேரே பங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு முன்னேயிருந்த கால்நடைகள் மருத்துவமனைக்கு விரைந்தேன். எனக்கு முன்பே நன்கு பரிச்சயமான நாயர் என்ற பெய்ர் கொண்ட அந்த வெடெர்னரி டாக்டர் (veterinary doctor) உடனே குட்டியை அறுவைச் சிகிச்சை அறைக்கு எடுத்துவரச் சொல்லி கூட வந்தார். உடனே வலியைக் குறைப்பதறகாக சிங்கிற்கு ஊசிப் போட்டு விட்டு  இடது பின்காலை (left hindleg) உடைத்து விட்டு ஒடி விட்டான் அந்த ராஸ்கல். என்று கூறியவர், ஒரு பெண் மாதிரி கண்கலங்காதீர்கள். வலி பொறுக்காமல் குட்டி கடித்துக்கொண்டிருப்பதைக் கூட பொருத்துக் கொண்டு உடனே தூக்கிக் கொண்டு வந்ததினால் உங்களுது குட்டி பிழைத்து விடும் இல்லாவிடில் மிக இரத்தச்சேதம் ஆகி இறந்து போயிருக்கும் என்று சொல்லியவர் தன் உதவியாளர்களில் ஒருவரை அழைத்து என் இரண்டு கைகளிலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு தக்கபடி சிகிச்சை செய்யச்சொல்லி அவருடன் என்னை அனுப்பினார்.
எனது சிங்கின் பின்புறத்து இடது காலில் ஏற்பட்டிருந்த எலும்புப் பிளவுகளுக்கு (composite fracture) தையல்கள் (sutures) செய்து பீறகு  இரு பக்கமும் மரத்தகடுகள் (splinters) இட்டு  ஃப்ரென்ச் சாக்குப் பொடியான கலவையை (plaster of paris) வேண்டிய அள்விற்கு நன்கு பூசிய பின் எலெக்ட்ரிக் ட்ரையரால் (electric dryer) காய வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து நாயர் அவர்கள் என்னிடம் அவனை ஜாக்கிரதையாக் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் நன்கு கவனித்துக் கொண்டு குறைந்தது மூன்று வாரம் கழித்து மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு வருமாறுச் சொல்லியனுப்பினார். அந்தக் கால்நடை வைத்தியர் நாயர் அவர்களை நான் என்றும் மறவேன்.

இரவில் என் காலடியில் தான் கிடந்திருப்பான். இயற்கை அழைப்புகள் (nature calls) வரும் பழுதெல்லாம் ஈனக் குரலில் அழத்துடங்கி (whining) என்னை எழுப்பி விடுவான். நான் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியிலே தோட்டத்தில் விட்டு விட்டு பிறகு எடுத்துக் கொண்டு வந்து படுக்க வைப்பேன்.

தினமும் இரு வேளை நான் மிருதுவாக அவனைத்தூக்கிப் பிடித்துக்கொள்வேன் என் மனைவி அவனை பால் அருந்தவைப்பாள்.

எக்காலும் வீட்டினுள்ளே சிறிதளவு கூட அசுத்தம் செய்யாத சிங்கைப் போல் ஒரு நாயை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

பிறகு சுமார் 20 நாட்கள் கழித்து சிங்கத்தை நாயரிடம் எடுத்துச் சென்றோம். சிங்கத்தை அறுவைச் சிகிச்சை அறைக்குள் எடுத்துக் கொண்டு போய் அவன் காலிலிருந்து கெட்டியாக ஒட்டிக்கொண்டிருந்த கட்டை முறைப்படி மெதுவாக  அறுத்து விலக்கியெடுத்து விட்டு கொண்டு வந்து எங்களிடம் கொடுத்தார். அவனது நான்கு கால்களையும் பார்த்து பெரும் நிம்மதிய்டைந்தோம். நல்ல வேளை அவன் காலை இழக்கவில்லை. ஆனால் பின்புறத்து இடது கால் சற்று ஊனமாய்ப் போன படியால் நடப்பதற்கு சிறிது சிரமப் படுவான். ஆனால் போகப் போகப் பழக்கமாகிவிடும். கவலைப் படாதீர் எனக்கூறி என்னை அனுப்பி வைத்தார். அவருக்கும் கடவுளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சிங்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

அப்பொழுது தான், அடிப்பட்ட சிங்கத்தை சற்றும் நெருங்காதிருந்த எங்களது ஃபெம்மி அவனிடம் சென்று மோப்பம் செய்து அவனை நக்கி கொடுத்தது!

சென்னையிலிருந்து திரும்பி வந்தவுடனே எனது குழந்தைகள் முதலில் ஒவ்வொருவராக அவனை தூக்கியெடுத்து கொஞ்சத் துடங்கினார்கள்.

வீட்டிலுள்ளோர் எல்லோரிடமும் செல்லமாக வாலை குழைத்துக் கொண்டு ஒட்டிக்கொள்வான். அவனிடம் எல்லாரையும் விட மிகவும் அன்பு செலுத்த ஆரம்பித்தது என் மகன் ஒரே மகன் ஜவஹர் தான் (கிடைசியாகப் பிறந்தவன்).

ஆயினும், அடிபட்ட சிங்க் இரவில் என் காலடியிலேயே படுத்துக் கிடந்ததாலோ என்னவோ, என்னை விடாமல் நான் எங்கு சென்றாலும் பின்னால் நொண்டிக் காலுடன் ஓடோடி வந்துவிடுவான். வெளியே எங்கேயாவது போக வேண்டுமென்றால் அவனுக்குத் தெரியாமல் என் மனைவியுடன் அவனை வேரொரு அறையில் வைத்துவிட்டு பிறகு கிளம்பிச் செல்வேன்.

கர்நாடகத்தில் அம்மாச்ந்த்ரா எனும் இடத்தில் கெய்சர் என்ஜினீயர்ஸ் (full name: Kaiser Engineers Overseas Corporation) எனப்படும் ஒரு அமெரிக்கக் கம்பனியின் உதவியுடன் கட்டப்பட்டு, தற்காலத்திற்காக அந்த கம்ப்னியாலேயே நடத்தப் பட்டு வ்ரும் மைசூர் சிம்ண்ட்ஸ் (Mysore Cements) என்ற் சிமண்ட் தொழிற்சாலையின் பங்களூர் ஆபீசில் பர்ச்சேஸ் ஆபீசராக (Purchase Officer) பணி புரிந்து வந்தேன். அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல ஜீப் வரும்பொழுதெல்லாம் எனக்கு முன்னே சிங்க் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுவான். பாவம் என் மனைவி!. ஒவ்வொரு நாளும் அவனை விடாப் பிடியாக வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு போன பின்பு தான் நான் கிளம்புவேன்.

ஒரு நாள் பழுது பார்ப்பதற்காக ஜீப் நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததினால் ரேஸ்கோர்ஸ் ரோடில் (Racecourse Road) நாலாவது மாடியிலிருந்த எனது அலுவலகத்திற்கு (இந்திரா நகரிலிருந்து சுமார் 13/14 கிலோமீடர் தூரம்) அன்றைக்கு நான் ஒரு ஆடோரிக்ஷாவில் செல்ல நேர்ந்தது.

நானே கற்றுக்கொண்டு கடை பிடித்து வரும் கொள்கைகளில் முக்கியமானதொன்று நேரம் தவறாமை(punctuality).  அலுவலக்ம் ஆரம்பிக்கும் நேரம் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்ததால், ஆட்டோவிலிருந்து இறங்கிய அக்கணமே அவசரமாக உள்ளே சென்று படியேறத் துடங்கிய் என்னைப் பின்னாலிருந்து ஒருவர் சார் சார்  உங்கள் பின்னே பாருங்கள் என்று கூவியதைக்கேட்டுத் திரும்பிப் பார்த்தால் என்ன ஆச்சரியம் ! சிங்க் என் பின்னே நொண்டிக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தான்!.

என்ன செய்வது? படியேறி எனது அறையில் எனது பையை வைத்து விட்டு,
சிங்கனை கூட அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்குச் சென்று அவனை விட்டு விட்டு அதே ஆட்டோவில் அலுவ்லகம் திரும்பினேன்.

என்னருமை சிங்கத்தைப் பற்றிய சம்பவங்களை விவிரிக்க பல பக்கங்கள் தேவைப்படும, இப்பொழுதே சரியாக தமிழில், அதுவும் சுருக்கமாக, எழுதுமாற்றலற்ற நான் அன்பர்கள் எல்லோருக்கும் சலிப்புத் தட்டும் படி பல பக்கங்கள் எழுதி விட்டேனே எனும் குற்ற மனப்பான்மையுடன், ஆயுள்வரை என்னால் மறக்கமுடியாத ஒரு சம்பவத்தை மட்டும் விவரித்து விட்டு முடித்துக் கொள்கிறேன்.

என்னைப் பற்றைய் ஒரு விஷயம் அன்பர்களுக்கு முன்பே தெரியுமென நினைக்கிறேன். எல்லோரும் என்னைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளும்படி தமிழில் எழுத முடியாத காரணத்தினால் ஆங்கிலத்திலேயே எழுதிவிடுகிறேன். (I was an alcoholic. As a former member of AA -Alcoholics Anonymous - let me categorically state that an alcoholic can never be dubbed as a drunkard. In my case, I seldom missed my office owing to excessive drinking, never went to office after imbibing alcohol. Of course soon after I left office in the evening, I would rush to the Golf Club, sit and gab with co-drinker-friends till closing hours, then go to a bar and finally end up in a cheap pub, before leaving for home. All holidays were, invariably spent in clubs, bars and pubs. None of the alcoholics including me belonging to the club would ever use swearwords or obscene language. Because by God's Grace, I had inherited a deep love for Music, I would sing whatever filmsongs that came to my mind or was asked for by my friends-mostly Hindi, sometimes English, and sometimes, surprisingly, even devotional songs! people may not believe it. but as one who is wedded to truth let me tell this. On a few occassions on my visits to the pubs,I had met the Immortal flautist Mali, with his friend one Mr. Ganapathi)

 ஓரிரவு நேரம் கழித்து வீட்டிற்குச் சென்றபொழுது போதையிலிருந்த என்னை, எதிர்பாராமல் அன்று வந்திருந்த என் மாமனார் பார்த்துவிட்டு அவர் பேசிய வசைமொழிகளைத் தாளாமல், என்னறைக்குச் சென்று என் பெட்டியில் இருந்த் ஒரு 500/600 ரூபாய்களை (1973ல் அத்துகைக்கு இப்போதைவிட பன்மடங்கு மதிப்பு) எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து அப்பொழுது பங்களூரில் இருந்த ஆபெரா தியேடருக்கு (Opera Theatre) அருகாமையில் இருக்கும் மால்கம்ஸ் ரோடிலிருந்த (Malcom's Road) சாராயக் கடைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன். அலசூர் வரை வந்த ஆட்டோக்காரர் பின்னே திரும்பிப் பார்த்து விட்டு, சார், உங்களை தொடர்ந்து கொண்டே ஒரு நாய் வருகிறதே ஏனென்று புரியவில்லையே என்றார். நான் வண்டியை நிறுத்தச் சொல்லித் திரும்பிப் பார்ப்பதற்குள், வண்டியினுள் ஏறி உட்கார்ந்து விட்டான் எனது சிங்க்!. என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை.
உருது பேசும் அந்த ஆட்டோக்காரார் ஆயிரத்தில் ஒருவர் போலும். அவரது பாஷையில் பரவாயில்லை உட்கார வைத்துக் கொள்ளுங்கள் சார். மனிதர்களை விட நன்றியுள்ள் மிருகங்கள் எவ்வள்வோ மேல் என்றார். பொழுது போவதே தெரியாமல் மதுபானக் கடையில் வழக்கத்தைவிட அதிகமாக மது அருந்திவிட்டு வீடு திரும்பியவனான நான் ஆபரா அருகில் வரும்பொழுது என்னையறியாமலேயே மயக்கமாய் விழுந்து விட்டேன் (passed out). நடைபாதையில் கிடந்த நான் கண்விழித்து ஆகாயத்தை நோக்கலானேன். அது விடிகால வேளை என்று புரிந்து கொண்டு மிக அதிர்ச்சியுற்றேன். சட்டென்றெழுந்து ஓடிப்போய் "ஆபெரா வளையத்தில்" (Opera Circle. It is all gone now) நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு தயவு செய்து உடனே இந்திரா நகருக்கு வண்டியைச் செலுத்து என்று சொல்வதற்குள், திடீரென சிங்க் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தவுடன் தான் ஐயோ அவனை மறந்தே விட்டேனே என்ற குற்ற உணர்வுடன் மிக வருந்தி, இந்த நாய் என்னுடையது தான் என்னுடன் வருவதற்கு தயவு செய்து அனுமதித்துவிடு என்று வண்டியோட்டியிடன் சொன்னேன். அதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பதைக் கேளுங்கள்.

என்ன சார் கண்மண் தெரியாது குடித்துவிட்டு வந்து வழியில் விழுந்துவிட்டு உங்களுக்கு காவலாக இரவு முழுதும் உங்களிடமிருந்த உங்களருமை நாயைக் கூட மறந்து விட்டீர்களே. ஓருவரைக் கூட உங்களை நெருங்க விடவில்லை சார்.
ஒரு மாதிரி அழுகைக் குரலெழுப்பிக் கொண்டு (whining) உங்களை சுற்றிச் சுற்றி வரும். உங்களை யாராவது நெருங்க யத்தனித்தால் உடனே அவர்மீது பாயத் துடங்கும். இந்த மாதிரி அருமையான நாயை இதுவரை நான் பார்த்ததேயில்லை, அதைப்பற்றிக் கேள்விப் பட்டதுமில்லை சார். என்று சொல்லிக் கொண்டே என்னையும் சிங்கனையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இதைப் படிப்பவர்கள், என் உள்ளக்கிடைக்கையையெல்லாம் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.

இதை எழுதும் பொழுது ஏற்பட்ட உண்ற்சிப்பெருக்கில் என்னால்  மேலே எழுத
முடியவில்லை.
1985, டிசம்பர் மாதம் 23ம் தேதி சிங்க் எங்களைப் பிரிந்து வான்புகுந்தான்.
இப்படிக்கு கண்ணீரால் குளமான கண்களுடன்

சீனு மாமா என்று திருவாளர்கள் வ்ஷு அவர்களாலும் ஆகிரா அவர்களாலும் அழைக்கப் படும் ஸ்ரீனிவாசன்.
N.B.:எமது சிங்கின் படத்தை இத்துடன் இணைத்துள்ளேன் (ஒரு நவராத்திரியில் நான் எடுத்தது)

Kalabhairav.jpg
SaviourSingh.jpg

vishalam raman

unread,
Aug 5, 2007, 4:44:59 AM8/5/07
to il...@googlegroups.com
அன்பு  ஸ்ரீனிவாஸ்  மனம் திறந்து பகிர்ந்தது  மிக்வும் பிடித்திருந்தது ,வைரவன்பட்டி என்ற இடத்திலும்
பைரவருடன்  கால பைரவர் என்ற சிவன் இருக்கிரார்
பிள்ளையார்பட்டியின்  அருகில்  இருக்கிறது.
சிங்கின் பாசம்  அன்பும்  என் கண்களில்   நீரை  வரவழைத்தது,.எல்லா மிருகங்களிடமும்  என்க்கு  மிக
அன்பு உண்டு  அதிலும்   நாய் மேல் மிக  அதிகம் 
நான்  அதன் சமாதி மேல்  நட்ட  வேப்ப மரம்  பெரிதாக
வளர்ந்து இருக்கிறது ,மனிதருக்கு செய்வது  போல்
வாயில் அரிசி  போட்டு எல்லாவிதமான  மரியாதையுடன் அடக்கம்    செய்யப்பட்டது  என்  சிவா 
 
அன்புடன் விசாலம்


 

AKR

unread,
Aug 5, 2007, 6:12:56 AM8/5/07
to il...@googlegroups.com
அன்புள்ள சீனு மாமா,
 
எனக்கு 1983ஆம் வருடம் திருமணமானாலும் 1992ஆம் ஆண்டில்தான் மகன் பிறந்தான். அதற்குமுன் பூனைகளையும் நாய்களையுமே நான் குழந்தைகளாக வளர்த்துக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
 
 என் மகன் பிறப்பதற்கு முன்பு எனக்கு லில்லி எனும் பிரவுன் பொமரேனியன் வகை நாய்க்குட்டியை என் நண்பர் ஒருவர் அளித்தார். அவள் என்னுடன் படுக்கையில்தான் படுப்பாள். மகன் பிறந்தவுடன் வாசலில் கட்டிவைத்துவிட்டேன். 17 வருட காலம் எங்களது குழந்தைகளில் ஒன்றாக வாழ்ந்த லில்லி 10 ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். அதன் பின்னர் நான் நாய் பூனை வளர்ப்பதில்லை ஏனெனில் பிரிவுத் துயரம் தாங்க முடியவதில்லை.
 
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
 
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த
ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை
 
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன்
படுக்கையிலே முள்ளை வைத்துப் பார்த்து மகிழ்ந்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்குக் காவலிருந்தான்
 
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் அதைப்
பிள்ளைக்கு மேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார் அதன்
உள்ளத்திலே வீடு கட்டித் தானுமிருந்தார் தானுமிருந்தார்
 
சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை ஒரு
துணையில்லாமல் வருவதெல்லாம் பாரமுமில்லை
நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா தம்பி
நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா
 
ஆகிரா



வேந்தன் அரசு

unread,
Aug 5, 2007, 10:57:41 AM8/5/07
to il...@googlegroups.com
சீனு இந்த மாதிரி கதைகளை இனிமேல் எழுதாதீர்கள்
 
கண்கள் கலங்குகின்றன்


 
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Venkatram Shrinivas

unread,
Aug 5, 2007, 5:02:14 PM8/5/07
to il...@googlegroups.com
[மனதிற்கு  வேதனையைக் கொடுக்கும்படியான மடல்களை இனி எழுதமாட்டேன்.  அப்படிப்பட்ட மடல்களில் இது தான் கிடைசி என்று திரு வேந்தனுக்கு அறிவித்து விட்டுத் தொடர்கிறேன்]
 
சிங்கத்தையும் என்னையும்பற்றி எழுதிய வெகு நீளமான கதையை எப்பொழுதும் போல் பொருமையுடன் படித்தது மட்டுமல்லாமல் என் உள்ளுணர்வுகளுக்கு ஆதரவான பதில் மடலகளை எழுதிய திருமதி விசாலம் அவர்களுக்கும், கடவுளருளால் எனது நெருங்கிய நண்பர்களும் ஊக்கமளிப்பவுர்களுமாகிவிட்ட திருவாளர்கள் விஷு, ஆகிரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி விசாலம் திரு ஆகிரா இருவரும் என்னைப் போலவே செல்லப் பிராணிகளை தன் சொந்தக் குழந்தைகள் போல் வளர்த்தவர்கள் என்றறிந்ததில் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

அன்றிரவு சிங்கம் மட்டும் என்னுடன் இல்லாதிருந்தால் நான் கண்டிப்பாக பிழைத்திருக்க மாட்டேன் என்பதற்கு ஆதாரத்தை உணர்த்தும் நோக்கத்துடன் கீழ்கண்ட சம்பவத்தை விவரிக்க விரும்புகிறேன். நான் விழுந்து கிடந்த இரவிற்கு சுமார் இரண்டு வாரத்திற்கு முன் என்னுடன் மது அருந்தும் சிநேகிதர்களில் ஒருவரான அருள் தாஸ் என்பவர் எங்களுக்கெல்லாம் தாங்கொணா துக்கதில் ஆழ்த்தும்படி எப்படி தன் உயிரை இழந்தர் என்பதைக் கூற விரும்புகிறேன்.

ஒரு பிரம்மச்சாரியாகவே வாழத் தீர்மானத்துடனிருந்த தாஸ் சர்வே ஆஃப் இண்டியாவில் (Survey Of India) இருந்தவர். எப்பொழுதும் மிடுக்காக கோட் ஸூட் டை என்று அணிந்து வருவார். நான் சொல்லப் போகும் சம்பவம் நடந்த இரவு குளிருக்காக ஒரு விலையுயர்ந்த ஜெர்ஸியையும் உள்ளே அணிந்திருந்தார். நாங்கள் எல்லோரும் முன்பு சொன்ன மால்கம்ஸ் தெருவில் வெகு நேரம் எங்களுடன் இருந்து விட்டுச் சென்றவர் வழியில், அவரது வேறு சில நண்பர்களின் வற்புறுத்தலுக்கிண்ங்கி புதுச்சேரி எனவழைக்கபடும் இடத்தில் இருந்து மதுபானக் கடைக்குச் சென்றிருக்கிறார். என்னைப் போலவெ அவ்ரும் பெரிய சிலவாளி. எப்பொழுதும் பிறர் பணத்தில் குடித்துக் காலததை கழிப்பவர்கள் தான் மதுபானகடைகளில், எங்களைஅதிகமாகச் சுற்றிக்கொள்வார்கள்.அன்றிரவு அவரை அவரை அழைத்துச் சென்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் தான் என்று பின்பு தெரியவந்தது.

வேண்டியவரை தாஸ் அவர்களின் செலவில் குடித்துவிட்டு அவரை 'அம்போ' என்று விட்டு விட்டுச் சென்று விட்டனர். பிறகு நள்ளிரவில், தன் நிலையறியாமல் தடுமாறிக்கொண்டே வெளியே வந்தவர் வழியில் மயக்கமாய் வ்ழுந்து விட்டார். பிறகு என்ன நடந்ததெனக் கேட்டறிந்த எனக்கு அதை விவரிப்பதற்கே மனது கஷ்டப் படுகிறது. அங்கு வந்து அவரைப் பார்த்த ம்கா பாதகர்கள், அவ்ரிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அவரது மோதிரம், கைக்கடியாரம், (மேலும் சொல்லப்போவது மிக மன்வேதனையைக் கொடுக்கிறது), அவரது விலையுயர்ந்த கோட், ஜெர்ஸி, காலணி (boots) எல்லா வற்றையும் கழட்டியெடுத்துக் கொண்டு. ஒருவருக்கும் மனதால் கூட தீங்கு நினைக்காத எனது நண்பர் தாஸை வெற்றுடம்புடன் டிசம்பர் மாதக் குளிர் விறைக் கிடத்தி விட்டு ஓடிவிட்டனர்.
விடி காலையில் அங்கு வந்தவர்கள் தாஸின் விறைத்துக் கிடந்த சடலைப் பார்த்தார்கள். பிறகு நடந்ததைப் பற்றியெல்லாம் எழுதத் தேவையில்லை. நடந்த விவரமெல்லாம் மறு நாள் தான் எனக்குத் தெரியவந்தது.

இதைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள், அன்றிரவு. சிங்க் மட்டும் கூட இருந்திராமல் போயிருந்தால், இந்த மடலை எழுத சீனு என்ற மனிதன் இருந்திருக்கவே மாட்டானென்று.

என் நண்பர் அருள் தாஸின் ஆத்மா என்றென்றும் சாந்தி அடைந்திருக்கட்டும் என கட்வுளை வேண்டிக் கொண்டு விடைபெறுவது

சீனு (ஸ்ரீனிவாஸ்)

(I wish to inform all my friends that by God's Grace and as a result of my second daughter Jayashri's persistent efforts, a few days before Independence day on August 1985, I came out of NIMHANS, as a totally de-addicted man)




(Seenu)

GEETHA SAMBASIVAM

unread,
Aug 6, 2007, 8:26:22 AM8/6/07
to il...@googlegroups.com
மனதைத் தொடும் நிகழ்ச்சி. படிக்கவே கண்ணில் நீர் நிறைந்து விட்டது. உங்களுடைய வெளிப்படையான பேச்சும் மனதைக் கவர்ந்தது. பகிர்தலுக்கு நன்றி.

ராஜா அண்ணாமலை

unread,
Aug 6, 2007, 10:00:08 AM8/6/07
to il...@googlegroups.com
I came out of NIMHANS, as a totally de-addicted man
தந்தை மகள் பாசம் எதையும் வெல்லும் என்பதற்க்கு சான்று
வாழ்க அவர்களின் அன்பு
அன்பே சிவம்!

வேந்தன் அரசு

unread,
Aug 6, 2007, 10:28:35 PM8/6/07
to il...@googlegroups.com
On 8/5/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:
[மனதிற்கு  வேதனையைக் கொடுக்கும்படியான மடல்களை இனி எழுதமாட்டேன்.  அப்படிப்பட்ட மடல்களில் இது தான் கிடைசி என்று திரு வேந்தனுக்கு அறிவித்து விட்டுத் தொடர்கிறேன்]
 
ஐயோ சீனு,
 
அவ்வளவு சோகமா இருக்கு என்று வலியுறுத்த அப்படி எழுதிட்டேன்
 

Siva Sankar

unread,
Aug 15, 2007, 4:17:25 AM8/15/07
to il...@googlegroups.com
நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன் ஐயா
அவ்வளவு சோகமாக மனதைப்பிழிந்தது, அன்பின் சீனு ஐயா, உண்மை ஒன்று சொல்கின்றேன், இந்த இல்லத்தில், நான் விரும்பி ரசித்து படிக்கும் எழுத்துக்களில் முதன்மையானது உங்களுடையது, அன்பின் ஆகிரா ஐயா மற்றும் அனைவரது எழுத்துக்களையும் அதன் பின்னரே படிப்பேன், மற்றவர்கள் அனைவரது மடல்களையும் படிக்கின்றேன், எனவே யாரும் கோபம் கொள்ளவோ வருத்தம் கொள்ளவோ வேண்டாம், அதனால் சொல்கின்றேன், சீனு ஐயா, இன்னும் எழுதுங்கள், எழுத்து ஒரு கலை, உங்களுக்கு மிக மிக அருமையாக வருகின்றது அது, வாழ்க வளமுடன்
சிவா....பெங்களூர் விவேக் நகரில் இருந்து...
--
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages