இந்த வரம் தந்தருள்வையே!!

3 views
Skip to first unread message

separa

unread,
Apr 3, 2007, 12:45:03 AM4/3/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள இல்லத்துச் சகோதர, சகோதரிகளுக்கு (சகோதரி விசாலம் தவிர, நிழலாக
சில பெயர்கள் தெரிகிறபடியால், சகோதரிகளுக்கு எனக் குறிப்பிட்டேன்)
புத்தாண்டு நல்வாழ்த்தாக இந்தத் தொடர் சமர்ப்பிக்கப்படுகிறது.

அன்னைக்குப் பல பெயர்கள்; அபிராமி, மீனாட்சி, காமாட்சி, உமையாள் என.
அவளைப் பாடி வாழ்த்தும் இப்பாடல், என் மனதுக்குகந்த ஒன்று. பண்ணோடு பாடச்
சிறப்பாக இருக்கும்.

பிறவி வேண்டாம் எனப் பலர் கூறினாலும், இறைவனைப் பாடிப், பிறர் பாடவும்,
பலனடையவும் வழி செய்ய ஏற்றது மானுடப் பிறவி என்பதால், (நம்மால் இன்னும்
சிலரும் பலனடைய வாய்ப்பிருக்கையில், ஏன் வேண்டாம் எனச் சொல்ல வேண்டும்!!
என்ற எண்ணத்தில்,) அத்தகைய அறிவுடையவனாய் இன்னும் பல பிறவி பெறவே
ஆசைப்படுகிறேன்.

"மனை மாட்சி அது என் மனையாள் மாட்சி" போல, இவையனைத்தும் எனது
மனத்திருப்திக்காக எழுதப்பட்டு, என்னகத்தில் மட்டுமே இருந்த ஒன்று.

நண்பர் விஷியின் தூண்டுதலால், 25/11/2002 அன்று , நண்பர் ஜவஹர்லால்
அவர்களால், "ஹல்வாசிட்டி.காம் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பொழுது
உங்களுக்கும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன், அளிக்கிறேன்.

இந்த வரம் தந்தருள்வையே!!

1.எனையாளும் தாயே, என் இதயத்துக் குடி கொண்ட
எழிலார்ந்த கோலம்தனை!!
இனிதான தமிழிலே இசைத்திட மனமுவந்தேன்;
எனக்கிந்த வரமருள்வையே!!

2.மனிதனாய் எனை மாற்றும் (உன்) மகத்துவம் அறிந்த பின்னும்
மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லையே!!
மகிமைதனை பாடியுந்தன் மலர்ப்பதம் பணிந்திட்டேன்!
மனமெந்தன் வசமில்லையே!!

3.இன்ன விதமாக நன்மை எனக்கமைய வேண்டுமென
எந்நாளும் தொழவில்லையே!!
அன்னை உந்தன் அருளாலே அதுவுமிங்கு சிறப்பாக,
அமைந்ததுன் பெருங்கருணையே!!

4.நென்னலும், வருநாளும், நேரிட்ட பிறவியதும்,
நின்னருள் எனைக் காக்குமே!!
பொன்னரு மலராளே, புவனமுழுதுடையாளே
பொற்பதங்கள் பணிந்தெழுவமே!!

5.கன்னலது தமிழென்பார்; கற்றவர் பலர் பேசக்
கருத்தொன்றிப் பாடவும் வந்தேன்!!
இன்னமுது போலிங்கே எழில் திருக்கடையூரில்
எழுந்தருளும் அபிராமியே!!

6.அகமுடைய காரணத்தும் அன்னையுந்தன் திருநாமம்
அனுதினமும் பாடவும் வந்தேன்!!
மகவெந்தன் குறைதீர்த்து, வருநாளும் எனைக்காக்க,
மனமுவந்து வந்தருள்வையே!!

7.நானென்னும் அகந்தையது நன்மையைத் தராதென்ற
நல்லறிவு எனக்கூட்டினாய்!! மட
மானோடு மழுவேந்தும் மாதேவன் இடப்பாகம்
மகிழ்ந்தேற்ற எங்கள் உமையே!!

8.தேனன்ன பாடல்களில், திருஞானசம்பந்தன்
தினம் பாட மனமகிழ்ந்தனை! வளர்
தென்பாண்டி நாட்டிலுறை திருவளர்ச் செல்வியே,
செகம் போற்றும் மீனாட்சியே!!

9.வானோர்கள் குறை தீர்த்து வரமருளும் தாயே உனை
வணங்கியே நாளும் தொழவே!!
ஈனப்பிறவி என்பார் ஏற்றம் பெற்றுய்ய இங்கு,
இசைந்ததுன் புகழ் பாடவே!!
தொடரும்..............
அன்புடன் செபரா

separa

unread,
Apr 23, 2007, 3:58:12 AM4/23/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள இல்லத்து அன்பர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்தின், இனிய தொடர்ச்சி

இந்த வரம் தந்தருள்வையே!! (தொடர்ச்சி - பாகம் 2)

10. உள்ளதும் இலையென்பார்; உனையென்றும் அறியாதார்; (என்)
உள்ளமதில் வாழும் உமையே!! அன்பின்
கள்ளமிலா மனத்தவராய் கற்ற தமிழ் அறிவு கொண்டு,
கருணைதனைப் பாடவும் வந்தேன்!!

11. வெள்ளமென நின்னருளை வேண்டியிங்கு பணிந்தவர்க்கு
வேண்டுவது வேண்டியபடி! நித்தம்
எள்ளளவு குறையுமின்றி எவரென்ற பேதமின்றி,
இதயம் உவந்தருளவே!!

12. துதித்தேன் உன் மனமகிழத் தொண்டனிவன் அடி பணிந்தேன்!
துணையெனவே நாளும் வருவாய்!! நாளும்
உதித்த செஞ்சூரியனாய் உலகாள வந்த சிவன்
உளமுவந்த காமாட்சியே!!

13. அடியார்தம் குறை தீர்க்கும் அன்னையே உந்தனிரு
அடிமலர் நாளும் மறவேன்!! பிடித்த
பிடிவிடேன் என்பவர்க்கும் பெருங்கருணைத் திறத்தாலே
பேரின்ப வாழ்வருள்வையே!!

14. வானோர்கள் குலம் காத்து, வரமருளும் மாதேவி
வணங்கியுனைப் பாடி வருவேன்!! இங்கு
நானென்றும் உன்னடிமை (என்) நலம் காக்கும்
செயலதுவும் நாயகியுன் பொறுப்பல்லவோ!!


15. அபிராமி, சிவகாமி அருள்தரும் மீனாட்சி என
அன்னையுனைப் பாடி வருவேன்!! புவியில்
ஏழையெனைக் காத்திடவே இசைந்தது எதுவெனினும்,
இறைவியுன் புகழ் பாடுவேன்!!

16. அது வேண்டும்! இது வேண்டும் என்றே என் மனமதுவும்
அவதிப்படாதிங்கிரு! அன்னையவள்
அடிமலர் பணிந்திடவே அது ஒரு பேறாக
அவளென்றும் காத்தருள்வளே!!

17. நாவலரும், பாவலரும் நான்மறை தேர்ந்தவரும்
நாயகியுன் புகழ் பாடுவார்!! நாளும்
ஏவல் செயும் உனதடிமை எனக்கிந்தத் திறன் வளர
இசைந்திங்கு (இவ்) வரமருள்வையே!!

18. மானென்ன விழியாள்; மயிலென்ன நடை பயிலும்
தேனன்ன மொழியாள் என் தாய்! பிறப்பால்
ஈனப் பிறவியது, இதுவென்று சொல்லாதே
எனையிங்கு காத்தருள்வளே!!

AKR

unread,
Apr 23, 2007, 7:23:01 AM4/23/07
to il...@googlegroups.com
வெள்ளமென நின்னருளை வேண்டியிங்கு பணிந்தவர்க்கு
வேண்டுவது வேண்டும் வண்ணம் வேண்டுமளவே நித்தம்
எள்ளளவும் குறைவின்றி எவரென்ற பேதமின்றி

இதயம் உவந்தருளவே!!

என்றிருக்கலாம்

அது வேண்டும்! இது வேண்டும் என்றே என் மனமதுவும்

> அவதிப்படாதிங்கு அருள்புரியும் அன்னையவள்


> அடிமலர் பணிந்திடவே அது ஒரு பேறாக
> அவளென்றும் காத்தருள்வளே!!

என்றிருக்கலாம்

ஆகிரா

separa

unread,
Apr 23, 2007, 11:15:08 PM4/23/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள ஆகிரா
நன்றி. பதங்கள் சேருவது போலத் தோன்றவில்லை. எனினும், யாராவது ஒருவர்
இதைப் படிக்கிறார் என்று புரிகிறது.மகிழ்ச்சி.

Tailpiece: இதைப் படித்தபின், கொல்லனும், புலவரும் கதை என் நினைவிற்கு
வந்தால் அதற்கு நானென்ன செய்ய முடியும்


அன்புடன்
செபரா

> > அன்புடன் செபரா- Hide quoted text -
>
> - Show quoted text -

RAMA

unread,
Apr 23, 2007, 11:47:44 PM4/23/07
to il...@googlegroups.com
On 4/3/07, separa <sepa...@gmail.com> wrote:
அன்புள்ள இல்லத்துச் சகோதர, சகோதரிகளுக்கு (சகோதரி விசாலம் தவிர, நிழலாக
சில பெயர்கள் தெரிகிறபடியால், சகோதரிகளுக்கு எனக் குறிப்பிட்டேன்)
புத்தாண்டு நல்வாழ்த்தாக இந்தத் தொடர் சமர்ப்பிக்கப்படுகிறது.

அன்னைக்குப் பல பெயர்கள்; அபிராமி, மீனாட்சி, காமாட்சி, உமையாள் என.
அவளைப் பாடி வாழ்த்தும் இப்பாடல், என் மனதுக்குகந்த ஒன்று. பண்ணோடு பாடச்
சிறப்பாக இருக்கும்.

பிறவி வேண்டாம் எனப் பலர் கூறினாலும், இறைவனைப் பாடிப், பிறர் பாடவும்,
பலனடையவும் வழி செய்ய ஏற்றது மானுடப் பிறவி என்பதால்,
 
ஐயா தங்கள் பாடல் இனிமை.
 
பிறவி வேண்டாம் என்பது மீண்டும் இம்மண்ணில் பிறக்க வேண்டாம்.
 
இறைவனை இந்த பிறவியிலேயே உணர்ந்து உய்ய வேண்டும் ... மீண்டும் மண்ணில் கிடந்து உழன்று பயிற்சிகள் செய்து.. அய்யோடா சாமி நினைக்கவே பயம் வருகிறது  ...
 
அதற்காகத்தான் அப்படி பெரியோர் சொன்னார்கள் என்று நம்புகிறேன்.



--
Regards,
RAMA
"Life is growth. If we stop growing, technically and spiritually, We are as good as dead!"
Join: http://groups.google.com/group/nambikkai
visit: http://jmapsrama.blogspot.com/

AKR

unread,
Apr 24, 2007, 12:10:48 AM4/24/07
to il...@googlegroups.com
செல்வன் புதல்வன் திருவேங்கடவன் ஜெகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்னபேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டிப் பகைவர்முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணிகொண்டே

என்பதுபோலுள்ளது.

AKR

unread,
Apr 24, 2007, 12:14:56 AM4/24/07
to il...@googlegroups.com
ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம் தரும் கருணையாம்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்..

vishalam raman

unread,
Apr 24, 2007, 12:21:24 AM4/24/07
to il...@googlegroups.com
இன்னவிதமாக நன்மை என்க்கமைய வேண்டுமென
எந்நாளும் தொழவில்லையே ,,,,,,,unconditional love  ஒன்றும் எதிர்ப்பார்க்காமல் அம்பாளின் அருளை மட்டும் வேண்டுவது ,,,,,,,மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது
அம்பாள் என்றால் நான் மிகப் பரவசமாகிவிடுகிறேன்
நன்றி  அன்புடன் விசாலம்

 

vishalam raman

unread,
Apr 24, 2007, 12:25:02 AM4/24/07
to il...@googlegroups.com
எந்தப் பகுதி சிறந்தது என்று தேடுவதற்கு இடமே இல்லை
எல்லா பகுதிகளுமே பக்தி ரசம் ததும்புகிறது மனதிற்கு
படிக்கப் படிக்க அமைதி உண்டாகிறது ,,அன்புடன் விசாலம்

 

separa

unread,
Apr 24, 2007, 4:26:22 AM4/24/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள திரு +ராமா, வணக்கம் பல

ஸாஸ்த்ரம் ஸாரீர மீமாம்ஸா தேவஸ்து பரமேஸ்வர:
ஆசார்ய: ஸங்கராசார்ய:ஸ்ந்து மே ஜன்ம ஜன்மநி:!!

இது ருக்வேதீய மந்யு ஸூக்தத்தில் சொல்லப்பட்ட பாடல் - தெய்வத்தின் குரல்
முதல் பகுதியில் வந்தது.

புனர்ஜென்மம் இல்லாமல் பரமாத்மாவில் கலந்துவிட வேண்டும் எனப் பொதுவாக,
எல்லோராலும் பிரார்த்திக்கப்படுகிறது. ஆனால் ஸ்ரீ சங்கர பகவத் பாதாள்
(எனக்கு) ஒவ்வொரு ஜன்மாவிலும் ஆசாரியாரக அமைவார் என்றால், எத்தனை
பிறவியும் எடுக்கலாம் எங்கிறது இச்சுலோகம்

இது நடராஜரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றால் "மனிதப் பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே" என அப்பர் ஸ்வாமிகள் சொல்வது போலில்லையா?

*பிறவி வேண்டாம் எனப் பலர் கூறினாலும்*, இறைவனைப் பாடிப், பிறர்


பாடவும்,
> பலனடையவும் வழி செய்ய ஏற்றது மானுடப் பிறவி என்பதால்,

இதைத்தானே இந்தக் காலத்து நாயகனும் " நாலு பேருக்கு நல்லது செய்ய
முடியும்னா, எது செஞ்சாலும் சரி" என்று சொல்கிறார்.

இப்படி அந்தக் காலத்தும் சரி, இந்தக் காலத்தும் சரி, பெரியோர்கள்
சொன்னதையே நானும் சொல்கிறேன்.


அன்புடன்
செபரா

On Apr 24, 8:47 am, RAMA <positiver...@gmail.com> wrote:


> On 4/3/07, separa <separ...@gmail.com> wrote:
>
>
>
> > அன்புள்ள இல்லத்துச் சகோதர, சகோதரிகளுக்கு (சகோதரி விசாலம் தவிர, நிழலாக
> > சில பெயர்கள் தெரிகிறபடியால், சகோதரிகளுக்கு எனக் குறிப்பிட்டேன்)
> > புத்தாண்டு நல்வாழ்த்தாக இந்தத் தொடர் சமர்ப்பிக்கப்படுகிறது.
>
> > அன்னைக்குப் பல பெயர்கள்; அபிராமி, மீனாட்சி, காமாட்சி, உமையாள் என.
> > அவளைப் பாடி வாழ்த்தும் இப்பாடல், என் மனதுக்குகந்த ஒன்று. பண்ணோடு பாடச்
> > சிறப்பாக இருக்கும்.
>

> > *பிறவி வேண்டாம் எனப் பலர் கூறினாலும்*, இறைவனைப் பாடிப், பிறர் பாடவும்,

> visit:http://jmapsrama.blogspot.com/- Hide quoted text -

separa

unread,
Apr 24, 2007, 4:48:10 AM4/24/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள சகோதரி,
இந்தப் பாடல் வந்த விதமே ஒரு சிறப்பு. ஆதி சங்கரரின் "சக்திப் பாமாலை"
யினைத் தமிழ்ப் படுத்த வேண்டுமென முயற்சியிலீடுபட்டபொழுது, தற்செயலாக
வந்த வரிகள் இவை. இலக்கண விதிகளான தளை, அடி, தொடை, சீர், உவமான,
உவமேயங்கள் என்று எதுவுமே பார்க்காது வந்த வரிகள் என்பதாலேயே ஒரு பெரும்
சிறப்பு. கவிதை ஓட்டமும், இயல்பாக இருக்கிறது. நான் ஆண்டவனை வேண்டி
உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

இன்ன விதமாக நன்மை எனக்கமைய வேண்டுமென
எந்நாளும் தொழவில்லையே!!
அன்னை உந்தன் அருளாலே அதுவுமிங்கு சிறப்பாக,

அமைந்ததுன் பெருங்கருணையே!!

அது வேண்டும்! இது வேண்டும் என்றே என் மனமதுவும்
அவதிப்படாதிங்கிரு! அன்னையவள்
அடிமலர் பணிந்திடவே அது ஒரு பேறாக
அவளென்றும் காத்தருள்வளே!!

மேற்சொன்ன வகையில், எது எனக்குக் கொடுக்க வேண்டுமென ஆண்டவனாகிய நீ
நினைக்கிறாயோ அதனை நீயாகவே எனக்குக் கொடுக்கப் போகிறாய் நான் ஏன்
உன்னிடம் வேண்டவேண்டும் என நான் ஆண்டவனிடம் கூறுவதனைக் கூட, அகங்காரம்,
திமிர் என்றெல்லாம் எனது நண்பர்கள் வாதாடியிருக்கிறார்கள். இது இயல்பான
எனது மனநிலையினைப் பிரதிபலிக்கிறது. அவ்வளவே. முழுப் பாடல்
தொகுதியினையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

அதனாலேயே நண்பர் ஆகிராவின் பரிந்துரைகளைக் கூட ஏற்க மறுத்துவிட்டேன்.


அன்புடன்
செபரா

On Apr 24, 9:25 am, "vishalam raman" <rvisha...@gmail.com> wrote:
> எந்தப் பகுதி சிறந்தது என்று தேடுவதற்கு இடமே இல்லை
> எல்லா பகுதிகளுமே பக்தி ரசம் ததும்புகிறது மனதிற்கு
> படிக்கப் படிக்க அமைதி உண்டாகிறது ,,அன்புடன் விசாலம்
>

> > அன்புடன் செபரா- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages