சகோதரர்களுக்கு,எனது இறுதி மடல்..............

2 views
Skip to first unread message

razin rahman

unread,
Feb 9, 2010, 3:38:48 AM2/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர்களுக்கு,நான் நேற்று அனுப்பிய ஒரு மெயிலுக்கு பெறகு,எந்த மெயிலும் எனக்கு குழுமத்தில் இருந்து வரலில்லை.எனது ஐடி,குழுமத்தில் இருந்து நீக்கபபட்டு விட்டதா?
அறிந்த ச்கோதரர்கள் இன்ஷா அல்லாஹ் எனக்கு அறிவிக்கவும்...

நான் அவ்வாறே உணர்கிறேன்.....

இறை பொருத்தம் நாடி,எனது சகோதரிகளின் மீதான,காவிகளின் இது போன்றதொரு தரமற்ற நடவடிக்கைகளை,அவர்கள்(நம் குலப் பெண்கள்) விளங்கி கொள்ள வேண்டுமே,என்ற ஆதங்கத்தில் தான் அதை அனுப்பி வைத்தேன்....

அது அனைவரையும் சென்று சேர்ந்து,அதன் மூலம் ஒருவர் பயன் அடைந்தாலும்,அது எனக்கு போதுமானது.
எனதுள்ளத்தை அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

அது தவிர,சுய விளம்பரத்துக்காகவோ,அல்லது இயக்க சார்பில் அவர்களது கொடியை தூக்கி பிடிக்கும் எண்ணத்திலோ,இதை ஒரு போதும்  செய்யவில்லை....நான் எந்த இயக்கத்தை சார்ந்தவனும் அல்ல.அதை படிப்பவர்களுக்கு அது விளங்கும்..

அதை விளக்கவே.முதலில்,அது ஒரு forward mail என்பதை தெரிவித்து,அது தவறெனில் மன்னிக்கவும் எனவும்,தெரிவித்து இருந்தேன்....

நான் ஏதோ குழப்பம் செய்ய முயன்றவனைப் போல குழுமத்தில் இருந்து வெளியேற்றப் பட்டு இருப்பது,எனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

சரி,அதற்காக,என்னை குழுமத்தை விட்டு நீக்கி இருக்கவேண்டாம்.குழும விவாதங்களில் பங்கு கொள்ள கூடாது என்றாவது சொல்லி இருக்கலாமே.

மார்க்கம் சம்பந்தமாக,நிறைய விஷயம் அறிந்த சகோதரர்கள்,விவாதிக்கிறார்கள்.அதை ஒரு பார்வையாளனாகவாவது இருந்து விளங்கிக் கொள்ளும்,கடைசி வாய்ப்பை நிர்வாகி நல்கி இருக்கலாம்....

ஹைர்... 

இக்குழுமத்தில் இணைந்த பின்னே,நான் குர் ஆன்,ஹதீஸ்களை,ஆராய துவங்கினேன்.இதிலிருந்தே,பல கேள்விகளுக்கு,விடை அறிந்தேன்..
அதற்கு தனிப்பட்ட முறையில் நிர்வாகி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்,,,

திரும்ப என்னை இணைத்துக் கொள்ளுங்கள்,என கேட்க எனது தன்மானம் என்னை தடுக்கிறது...

இத்தனை நாளும்,நான் இந்த குழுமத்தில் ஒரு உறுப்பினராக,இருந்து,மார்க்கம் சம்பந்தமாக பல விஷயங்களை அறிய உதவிய,குழும நிர்வாகி சகோ ஜி.என் அவர்களுக்கும்,எனது ஏனைய சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்தவனாக,

எனது பேச்சு நிர்வாகி அவர்களையும்,அல்லது மற்ற சகோதரர்களில் யாரையும் எந்த சூழ்நிலையிலும் புண்படுத்தி இருந்தால்,அல்லாஹ்வுக்காக என்னை மன்னியுங்கள்,என மன்னிப்பு கோரியவனாக.

மார்க்கத்தை அறிய அல்லாஹ் எனக்கு அருளிய ஒரு வாய்ப்பை இழந்து கைசேதப் பட்டவனாக,அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தெளிவான மார்க்க ஞானத்தையும்,அதன் படி ஒழுக,நிறைவான அறிவையும் தர எண்ணி துஆ செய்தவனாக.....

இக்குழுமத்தில் இருந்து விடை பெறுகிறேன்.....

அஸ்ஸலாமு அலைக்கும்................

மார்க்கத்தை விளங்கிகொள்ள மேலும் சிறப்பான வாய்ப்புகளை அல்லாஹ் எனக்கு நல்க,சகோதரர்கள் எனக்காக துஆ செய்யவும்...


மார்க்க அறிவை தேடியவனாக...
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com

அபூ அதீக் ஷம்சுதீன்

unread,
Feb 9, 2010, 4:11:20 AM2/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
 
 
திரும்ப என்னை இணைத்துக் கொள்ளுங்கள்,என கேட்க எனது தன்மானம் என்னை தடுக்கிறது...\\ரஜின் அப்துல் ரஹ்மான்
 
சகோதரர் ரஜின் அப்துல் ரஹ்மான் அவர்களே மார்கத்தை தெரிந்துக்கொள்வதும், மார்கத்தை பிறருக்கு எத்தி வைப்பதும் விருப்பு வெருப்புகளுக்கு அப்பார்பட்ட வல்லோன் நமக்கு அருளிய கடமையாகும்.
 
தொடருங்கள் உங்கள் தேடல்களை பரந்திருக்கும் இம்மையில்.
 
நீங்கள் அறிந்த சத்தியத்தை எங்களுக்கும் அறியத்தாருங்கள்
 
எங்கள் ரசூல் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடனான ஜன்னத்துல் பிர்தெளஸில் மருமையை அடைவதே நமது லச்சியமாக இருக்கனும்.
 
தொழுகையைக் கொண்டு நம்மை REFRESH பன்னுவோம்

சுட்டெரிக்கும் மறுமையை அர்ஷின் நிழலில் SUCCESS கானுவோம்.


இனிய சகோதரனாக.......
அபூ அதீக் ஷம்சுதீன்
(அப்துல்காதர் இப்னு ஷம்சுதீன்  )
அல் - கோபார்
சவூதி அரேபியாவிலிருந்து...  

============================================================
 (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல
நெறி தவறியோர் வழியுமல்ல (1:5, 1:6, 1:7)
============================================================
"  எங்கள் இறைவனே!
நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின்
எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்துவிடாதே!
இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு
(ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! " (3:8)
============================================================

muslim

unread,
Feb 9, 2010, 4:58:56 AM2/9/10
to fro...@googlegroups.com

வ அலைக்கும் ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர் razin rahman அவர்களுக்கு,

தேவையற்ற கற்பனையைக் களையுங்கள். உங்களை குழுமத்தில் இல்லையென்றால் உங்கள் மின்னஞ்சல் குழும வழியாக எனக்கு வராது. உங்களைக் குழுமத்திலிருந்து நீக்கியிருந்தால், நிர்வாகி பெரிய எழுத்தில் அதை அறிவித்து விடுவார். 

 
2010/2/9 razin rahman <razin...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

syed abu thahir

unread,
Feb 9, 2010, 5:15:12 AM2/9/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பனே
நாங்கள் உன்னுடன். சத்தியத்தை நிலை நாட்டும் பணியில். வல்லோன் அல்லாஹ் SWT நம்மை கைவிட மாட்டான்.

2010/2/9 muslim <tomu...@gmail.com>



--
syed

நமக்குள் இஸ்லாம்

unread,
Feb 9, 2010, 12:05:10 PM2/9/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
razin rahman <razin...@gmail.com> சகோதரர் ரஜின் அவர்கள் குழுமத்திலிருந்து நீக்கப்படவில்லை.  அவர் வீணாக குழம்பியுள்ளார்.   குழுமத்திலிருந்து எவர் நீக்கப்பட்டாலும் அது பகிரங்கமாக அறிவிக்கப்படும்.


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  
Reply all
Reply to author
Forward
0 new messages