குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), "மறுமை / கியாமத் நாள் சிந்தனை" சிறப்பு நிகழ்ச்சி!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக வாரந்தோறும் தமிழ் மொழியில் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பேருரையுடன் மாதந்தோறும் குவைத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு தலைப்புகளில் மார்க்க, சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றது.
அந்த வகையில் இம்மாத (மே) நிகழ்ச்சியாக மறுமை / கியாமத் நாள் குறித்த சிந்தனை மக்களிடம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 17.05.2012 வியாழக்கிழமை இரவு 8:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல், மிஜ்யத் அல் ஹிலால் உதைபீ (உருதூ ஃகுத்பா) பள்ளிவாசலில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
சங்கத்தின் தலைவர் மவ்லவீ
எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, இளைஞர் அணி செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா எம்.எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ மற்றும் ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர் குழுவின் மூத்த உறுப்பினர் மவ்லவீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் மண்ணறை வாழ்க்கை, மறுமை நாளின் நிகழ்வுகள், சுவனம், நரகம் போன்ற தலைப்புகளில் அவையோர் உள்ளங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.
பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தலைவரின் துஆ/பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேநீரும், இறுதியில் இரவு உணவும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
நன்றி! வஸ்ஸலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
செய்தி:
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
-----------------------------
வாரந்தோறும் K-Tic தமிழ் பள்ளிவாசலில்....
ஜும்ஆத் தொழுகைக்கு முன் காலை 10 மணி முதல்...
1. திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு: திருக்குர்ஆனை முறையாக ஓதுவதற்கும், மனனம் செய்வதற்கும் ஆண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் இலவசமாக நடத்தப்படும் வாராந்திர திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு இது.
2. மார்க்க விளக்க வகுப்பு: வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், வாழ்வியல் நடைமுறைகள், பிரார்த்தனை(துஆக்)கள் மற்றும் இறைநினைவு(திக்ரு)கள் ஆகியவற்றை தெளிவான முறையில் கற்றுக் கொடுக்கும் கல்வியகம் இது.
ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு...
1. சிறப்பு சொற்பாழிவுகள்... வாரந்தோறும் சங்கத்தின் உலமா பெருமக்கள் சமயம், சமூக கட்டமைப்பு, சமுதாய முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி.
2. மார்க்க விளக்க நிகழ்ச்சி: வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், வாழ்வியல் நடைமுறைகள், பிரார்த்தனை(துஆக்)கள் மற்றும் இறைநினைவு(திக்ரு)கள் ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவான முறையில் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி இது.
3. வாரந்தோறும் வசந்தம்... ஒவ்வொரு வாரமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்குள் சரியான பதிலை நேரிடையாகவோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். வாரந்தோறும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்(நபிமொழி)கள் உள்ளே புதைந்து கிடைக்கும் துஆக்கள், திக்ருகள், வரலாற்று நாயகர்கள் போன்றவற்றை பொதுமக்கள் தாங்களாகவே தோண்டியெடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கும்.
4. வேலைவாய்ப்பு தகவல்கள் அறிவிப்பு... வேலை தேடுவோருக்கும், வேலை அளிப்பவருக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் ஓர் இணைப்புப் பாலம்.
5. மரணச் செய்தி அறிவிப்பு.. குவைத்தில் மரணத்தைத் தழுவும் நம் சமுதாய சகோதர, சகோதரிகள் குறித்த அறிவிப்பு
6. மரணமடைந்தவர்கள், நோயாளிகள், கடனாளிகள், அல்லல்படுவோர் போன்றோருக்கான சிறப்பு துஆ மஜ்லிஸ்.
வெள்ளிக்கிழமைகளின் பொன்னான நேரங்களை சமுதாய மக்கள் பயனடையும் முறையில் செலவழிக்க நமது சங்கம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றது இன்ஷா அல்லாஹ்...
-------------------
K-Tic தமிழ் பள்ளிவாசலில்... ஸுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் / ஆலிம் பெருமக்களின் சொற்பாழிவு DVDக்கள், திருக்குர்ஆன் அரபி மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு DVDக்கள், அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவீ (ரஹ்) அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், இனிய திசைகள், நர்கிஸ், சிந்தனைச் சரம், சமநிலைச் சமுதாயம், சமூக நீதி முரசு மாத இதழ்கள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய நூல்கள் கிடைக்கும்.