பெண்கள் நடு விரலில் மோதிரம் அணியலாமா ? இதற்கு இஸ்லாத்தில் ஏதும் தடை
உள்ளதா விளக்கவும்!
அஸ்ஸலாமு அலைக்கும்,
பெண்கள் நடு விரலில் மோதிரம் அணியலாமா ? இதற்கு இஸ்லாத்தில் ஏதும் தடை
உள்ளதா விளக்கவும்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அலி (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில், இந்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்'' என்று கூறி, நடு விரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர் அபூபுர்தா (ரஹ்) அறிவிக்கிறார். (நூல் - முஸ்லிம், 4256)
************************
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي وَاذْكُرْ بِالْهِدَايَةِ هِدَايَةَ الطَّرِيقِ وَاذْكُرْ بِالسَّدَادِ تَسْدِيدَكَ السَّهْمَ قَالَ وَنَهَانِي أَنْ أَضَعَ الْخَاتَمَ فِي هَذِهِ أَوْ فِي هَذِهِ لِلسَّبَّابَةِ وَالْوُسْطَى شَكَّ عَاصِمٌ وَنَهَانِي عَنْ الْقَسِّيَّةِ وَالْمِيثَرَةِ
பெண்களுக்கு ஆபரணங்களின் அலங்காரம் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்). (அல்குர்ஆன் 43:18)
பெண்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுபவர்கள் என இறைமறை வசனம் கூறுவதால் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, கைவிரல்கள், இடுப்பு, கால், கால் விரல்கள் என பெண்களின் விருப்பத்திற்கு அழகுப்படுத்தும் பொன்னலாங்காரம் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆட்காட்டி விரலிலும் நடுவிரலிலும் மோதிரம் அணிவது பெண்களுக்கு அலங்காரமாகும் என்பதால் அதைத் தடைசெய்ய வலுவான ஆதாரம் ஏதும் இல்லை.
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொள்ளலாம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)