''ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 5783, 5791. முஸ்லிம் 4233. திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா)
"தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), 'நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது" என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே" என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - புகாரி 3665)
பெருமைக்காக தரையில் இழுத்துச் செல்லும்படி ஆடை அணியக்கூடாது. என்றே நபி (ஸல்) அவர்கள் தடைசெய்கிறார்கள். தற்பெருமை எண்ணமின்றி தானாக ஆடை சரிந்து தரையில் இழுபடுமானால் அது குற்றமில்லை! இது குறித்து மேலதிகமாக ''முஸ்லிம் பெண் முகம் மறைத்தல்'' என்ற இழையில் ஆடை சம்பந்தமாக பதிவு செய்யவிருக்கும் விளக்கத்தைப் படியுங்கள்!
பெண்கள் பாதங்களை மறைத்திட வேண்டும்.
''யார் தமது ஆடையை பெருமைக்காக தரையில் படுமாறு அணிகிறாரோ அவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ''பெண்கள் தங்கள் கீழாடைகளை எப்படி அணிவது?'' என்று உம்முஸலாமா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு, ''ஒரு ஜான் இறக்கிக்கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அப்படியானால் அவர்கள் பாதம் வெளிப்படுமே'' என்று உம்முஸலமா (ரலி அவர்கள் கேட்டார்கள். ''அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம் அதைவிட அதிகமாகக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - திர்மிதீ, நஸயீ)பெண்கள் பொது இடங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தில் பாதங்களை மறைத்திட வேண்டும். ஆடை தரையில் படும்படி அணிந்தால் தான் பாதங்கள் வெளிப்படாது என்பதால் பெண்கள் தரையில் படும்படி ஆடை அணியலாம். காலுறை அணிந்தும் பாதங்களை மறைத்துக் கொள்ளலாம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
2010/2/6 hamee <hameet...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும்,
அரபு நாடுகளில் பெண்கள் தரைஐ கூட்டும் அளவிற்கு பர்தா அணிகிறார்கள்.
அவர்களிடம கேட்டால் நாம் கால்களை மறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
(நான் ஒரு ஹதீஸில் தரயில் இழுபடுமாறு உடை அணிவதை இறைவன் வெறுக்கிறான்
என்று படித்த ஞாபகம் தெளுவு படுத்தவும் ) தொழுகையிலும் கால்கள் மறைக்க
வேண்டுமா? socks போன்று நாம் ஏதாவது அணிந்து கொண்டு தான் தொழுக
வேண்டுமா? விளக்கம் தரவும்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் இப்னு ஹஸன் அவர்களுக்கு
இஸ்லாம் கூறும் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரம், பாரசீக ஆடைக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியவை என சில அறிஞர்கள் தவறாக எழுதியுள்ளதைக் கேள்விப்பட்டுள்ளேன். கி.மு 1200ம், ஆண்டு மற்றும் கி.பி முதல் நூற்றாண்டு பெண்களின் ஆடைக் கலாச்சாரம் எவ்வாறு இருந்தன என்பதையும் கேள்விப்பட்டுள்ளேன்.
எனினும், பெண்களுக்கான ஆடைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என இஸ்லாம் வரையறுத்த பின் அதற்கு முந்தைய பெண்களின் ஆடைகள் குறித்து விவாதிப்பது பயனற்றது. குர்ஆன், சுன்னா வட்டத்திற்குள் நின்று விளக்கம் பெறுவதே சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்டக் கருத்தாகும்.
பெண்கள் கால்களை மறைத்திடல் வேண்டும் என்பதற்குச் சான்றாக நாம் இந்த இழையில் பதிவு செய்த, நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில், ''பெண்கள் கீழாடையை எவ்வாறு அணிவது?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள். ''ஒரு சாண் இறக்கிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். மீண்டும், ''அப்படியானால் அவர்களின் பாதம் வெளிப்படுமே'' என்று உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கேட்கிறார்கள். ''அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
பெருமைக்காக தரையில் படுமாறு இழுத்துக்கொண்டு செல்லும் ஆடை அணிபவரைக் கண்டித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள். பெண்கள் ஏற்கெனவே பாதங்களை மறைக்க தரையில் படுமாறு ஆடை அணிந்திருந்ததால், உடனே பெண்களின் கீழாடை நிலை என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டு பெண்கள் தரையில் படுமாறு கீழாடையை அணியலாம் என அதற்கான விளக்கமும் பெறப்படுகிறது.