ஆப்பிள் ஐபேடில் தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தித் தட்டச்சுச் செய்ய
வசதி இல்லை.
செல்லினத்தின் உதவியால் ஒலி அடிப்படையில் தட்டச்சுச்செய்யலாம்.
தமிழ் 99 தட்டச்சுக்கு உதவும் இ.கலப்பை ஒரு திறவூற்றுமென்பொருள். இந்த
மென்பொருளை ஆப்பிள் தொழில்நுட்பத்துக்குத் தக மாற்றித் தமிழ் 99 இல்
தட்டச்சிடும் வசதியை ஆப்பிளிலில் உருவாக்க இயலுமா?
அல்லது வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி ஆப்பிளில் தமிழ் 99 விசைப்பலகையில்
தட்டச்சுச்செய்ய இயலுமா?
இதற்கான முயற்சியைக் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள்முன்னெடுக்க
வேண்டும். தமிழுக்கு அது மிகப்பெரிய ஆக்கமாக இருக்கும்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muela...@gmail.com
நலமா?
ஐபேடில் மென்பொருள் மூலம் தட்டச்சுவதை விட ஆப்பிளே தமிழ் விசைப்பலகை
கொடுத்தால் நன்றாக இன்னும் வசதியாக இருக்கும். ஏனெனில் செல்லினமோ
IndicNotesஓ எதை பயன்படுத்தினாலும், அதில் தட்டச்சு செய்து, பின் அந்த
உரையை வேறிடத்தில் ஒட்ட வேண்டி இருக்கும். தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு
இது உகந்ததல்ல. நம்முன் இருக்கும் ஒரு வழி ஆப்பிளுக்கு தொடர்ந்து மடல்
அனுப்புவது தான். நான் இதை செய்துக்கொண்டிருக்கிறேன். வேறு வழி
தெரியவில்லை.
சித்தார்த்.
2012/5/7 Mu.ilangovan ??.????????? <muela...@gmail.com>:
> --
> You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
> To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
> For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.
>
அப்படியா? Mac கணினி மற்றும் மடிக்கணினிகளில் முரசுவின் தமிழ்99, அஞ்சல்
மற்றும் தட்டச்சு வகை ஒன்று என 3 தமிழ் விசைமாற்றங்கள் உள்ளகமாக இருக்கக்
கண்டிருக்கிறேன்.
செல்லினம், IndicNotes மற்றும் iDeviceApps இன் TamilKeyboard ஆகியன
எல்லாவற்றையும் படியெடுத்து ஒட்டும் வழியாகத்தான் பயன்படுத்த இயலுமா?
(twitter மற்றும் facebook ஆகியன ஒவ்வொன்றினது இடைமுகப்பிலும் இவை
நேரடியாக பயன்படுத்தலாம் போலவும் அவர்கள் குறிப்பிட்டுளனர்).
ஐபேடு-2 இன் இயல்பு விசைப்பலகக்கு மாற்றம் ஏற்படுத்தி தமிழ் விசைமாற்றி
ஒன்றை ஏற்படுத்தி உள்ளதாக சிங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட பின்வரும்
நிகழ்ப்படங்களில் காணலாம்:
http://www.youtube.com/watch?v=tscFY8nQydI&feature=relmfu
http://www.youtube.com/watch?v=1tXjLU10r24&feature=relmfu
அவர்கள் "The keyboard layout is a highly modified T99 scheme." எனக்
குறிப்பிட்டாலும் தமிழ்99 அடிப்படையிலிருந்து அது மாற்றி
அமைக்கப்பட்டாதாக ஏற்க இயலாது. தளக்கோலத்தில் ஒத்திசைவு இனமாகும் மெய்கள்
ஒன்றுக்கொன்று அடுத்தடுத்து இருப்பதைத் தவிர தமிழ்99 உடன் ஒத்த
அடிப்படைகள் வேறு ஒன்றும் கிடையாது. மேலும் உயிர்மெய்க்கு உள்ளிடும்
விசைச் சரங்கள் எல்லா இடங்களிலும் (இன்சுகிரிப்ட்டு போல) அகர மெய்
அடுத்து உயிரொலிக் குறி ஆகையால் உள்ளிடப்படுவதும் தமிழ்99 (மற்றும்
தமிழக அரசின் தட்டச்சு (Typewriter)) இலிருந்து வேறுபடுவதாகும்.
அவர்களது மாற்றியமைப்பானது லினக்சு தளங்களில் உள்ள xkb போல
இயங்குதளத்தின் இயல்பு விசைப்பலகையில் விசைத் தளக்கோலத்தில் மட்டும்
(one-to-one mapping என நாம் பொதுவாக்க் குறிப்பிடும்) மாற்றம்
செய்வதாகும். அதை ஒருங்குறி எழுதி எனவும் குறிப்படுவது உண்டு.
தமிழ்99, அஞ்சல் வகை எழுத்துப்பெயர்ப்பு அல்லது ஒலிப்புப்பெயர்ப்பு
மற்றும் தட்டச்சு (typewriter) வகைகள் (தமிழக அரசின் ரெமிங்கடன்,
இலங்கையின் ரெங்கநாதன்) போன்ற பெறும்பான்மையான எல்லா வகைக்களுக்கும்
விசைத்தளக்கோல மாற்றம் மட்டுமல்லாது விசைச்சரங்களின் (Key sequences
mapping) மாற்றமும் தேவை ஆதலால் உள்ளிடும் முறைமைப் பொறி அல்லது திருத்தி
(IME) மென்பெருளாக்கம் அவசியமாகிறது. Mac கணினியில் எல்லாவிடங்களிலும்
பயன்படுத்தப்படும் முரசுவின் விசைமாற்றிகளும் iPad, iPhone களில் சில
பயன்பாடுகளில் மட்டும் இயங்கும் செல்லினம் போன்றவைகளும் அவ்வாறு IME
வழியாக இயங்குபவையே.
எப்படி நாம் விண்டோசு இயங்குத் தளங்களுக்கு தமிழா எ-கலப்பை விசைமாற்றிகளை
கட்டின்மையுடனான உரிமத்துடன் வழங்குகிறோமோ அவ்வாறே Mac, iPad, iPhone
வகைகளுக்கும் உருவாக்கி வழங்க முற்படலாம். ஆனால் அவற்றை உருவாக்கத்
தேவையான வல்லுமை உள்ளோர் நமது தமிழா குழுமத்தில் இணைந்து உள்ளனரா ?
// நம்முன் இருக்கும் ஒரு வழி ஆப்பிளுக்கு தொடர்ந்து மடல்
> அனுப்புவது தான். நான் இதை செய்துக்கொண்டிருக்கிறேன். வேறு வழி
> தெரியவில்லை.
>
> சித்தார்த்.//
ஆம், அவ்வாறு நிறுவனத்தினரிடம் வேண்டுகோள் விட வேண்டியது ஆப்பிள் பயனர்கள்தான்.
~சேது.
2012/5/7 Siddharth Venkatesan <neota...@gmail.com>:
FTC குழுமம் ஆப்பிள் நிறுவனத்திடம் அப்படியான கோரிக்கை வைப்பது
குழுமத்தின் நோக்கங்களுக்குத் தொடர்பில்லாது எனில் சரி என
ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் இங்கு இளங்கோவன் FTC குழுமமே கோரிக்கை வைக்க வேண்டுமென குறிப்பாகச்
சொல்லவில்லை எனதான் எனக்குத் தெரிகிறது. ஒரு பயனரால் செய்யக்கூடியது
என்னவென சித்தார்த் எடுத்துரைத்தை அவர் ஆமோதித்திருக்கிறார். அவை
கருத்துப் பரிமாற்றமே.
எது எப்படியோ, கட்டற்ற விசைமாற்றிகள் மற்றும் அவற்றிற்கான உள்ளிடல்
முறைமைப் பொறி ஆகியனவற்றை ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்கும் தமிழா
குழுமம் உருவாக்க முன்வருவதற்கு கோட்பாடுகளிலிருந்து தடைகள் இல்லைதானே?
இத் தேவையை சுட்டிக்காட்டியமைக்கு இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.
கா. சேது