தமிழ்விசை அடுத்த வெளியீடு தொடர்பாக

27 views
Skip to first unread message

Gopalakrishnan (Gopi)

unread,
Oct 28, 2010, 2:18:44 AM10/28/10
to freetamil...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்விசை அடுத்த வெளியீட்டுக்கான நிரலாக்கம் துவங்கப்படவுள்ளது.

தற்போது அஞ்சல் முறையில் தமிழ் எண்கள் தட்டச்சிட வசதி வேண்டி ஒரே ஒரு வழு உள்ளது. மேலும் வசதிகளுக்கான தேவைகள் குறித்து உங்களின் கருத்துக்களை http://tamilkey.mozdev.org/bugs.html ல் வழுக்களாக பதிவு செய்யுங்கள்.

வழுக்களின் தன்மையை பொறுத்து அடுத்த வெளியீடு சிறு வெளியீடா (minor release) பெரு வெளியீடா (major release) என்பதை முடிவு செய்திடலாம்.

இனிமையுடன்,

கோபி

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 28, 2010, 6:09:18 AM10/28/10
to freetamil...@googlegroups.com
2010/10/28 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>:

கோபி மற்றும் நண்பர்களே

செம்மொழி மகாநாடு தொடங்குவதற்கு முன்னைய நாட்களில் ஒன்றில் தமிழக அரசினர்
G.O.M. 29 அரசாணை வெளியிட்டனர். அதைப் பதிவிறக்க :

http://tamilvu.org/coresite/download/Tamil_Unicode_G.O.zip

(அத் தொடுப்பு உள்ள இடம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தள
முகப்பில் http://tamilvu.org/ இடது பக்கத்தில் உருண்டோடும்
தகவல்களுக்கான தொடுப்புகளில் தெரியும் '"தமிழ் யூனிக்கோடு/தமிழ்
16-நுண்மி அனைத்துரு எழுத்துரு(TACE16) அரசாணை" எனவருவது. )

தமிழிற்கான ஒருங்குறி மற்றும் டேஸ் ஆகிய குறியேற்றங்கள்
பயன்படுத்தலுக்கான விதி / வழி முறைகள், எழுத்துருக்களுக்கான வழிமுறைகள்,
வரிசையாக்கல் விதிமுறைகள் ஆகியனவற்றின் உள்ளடக்கங்களுடன் மேலும் தமிழ்99
விசைமாற்றிக்கு விரிவாக்கமாக மேலதிக விசைமாற்றங்களும் (ஒருங்குறிக்கும்
டேசுக்கும்) , ஏற்கனவே இருந்த விசைமாற்றங்களில் ஓரிரு மாற்றங்களும்
உள்ளடக்கப்பட்டுள்ளன.

அடுத்து தமிழக அரசு மிகச் சமீபத்தில் 'TENDER DOCUMENT for Development
of Tamil Fonts and Tamil Keyboard driver for 16-bit encodings (Unicode
and TACE16)' [Tender Ref. TVA/SW/2010-11] எனும் கோரல்பத்திரம்
முன்வைத்துள்ளது. அதே தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தள முகப்பில்
உருண்டோடும் தகவற் தொடுப்புகளில் மேற்குறிப்பிட்ட பெயருடனான தொடுப்பை
சொடுக்கினால் வரும் பதிவிறக்கப் பக்கம் பின்வருமாறு:

http://tamilvu.org/coresite/download/Teder_Document_for_Tamil_fonts_and_kbd_driver.pdf

இக் கோரல் பத்திரம் எப்போது பிரசுரிக்கப்பட்டது என்பது பற்றி
அறிந்திலேன். இன்று மதிய இடைவேளையிலே கண்டறிந்தேன். (கோரலுக்கு பதில்
முன்வைப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 24 - மாலை 5:00 மணி
எனவுள்ளது).

கடந்த சில வாரங்கள் முன்னிருந்து நமது எ-கலப்பை 3.0 இன் ஒருங்குறி
விசைமாற்றிகளின் மேம்பாடுகளுக்காக நானும் பங்களித்து வருவது பற்றி பலர்
அறிந்திருக்கலாம். தமிழ் 99 இன் விரிவாக்கங்களை உள்ளடக்க அரசாணை G.O.M 29
ஐ உன்னிப்பாக வாசித்து அவற்றின் அடிப்படையில் விரிவாக்கங்களில் பல
உள்ளடக்கியுள்னேன் இதுவரை. ஆனால் அந்த அரசாணையில் உள்ள தமிழ் 99 க்கான
பட்டியலிலும் சில தெளிவின்மைகள் இருப்பதாகக் கருதுகிறேன். இன்று
பதிவிறக்கிய கோரல் பத்திரத்தை இதுவரை மேலாட்டமாகப் பார்த்ததில் மேலும்
சில தெளிவின்மைகள் புதிதாக ஏற்பட்டுள்ளன (இம்...) . மேலும் அரசாணையில்
உள்ளடக்கப்படாத தட்டச்சு (ரெமிங்கடன் வழி) விசைமாற்றிக்கான விதிமுறைகளும்
விரிவாக்கங்களுடன் கோரல் பத்திரத்தில் உள்ளடக்கப்படுள்ளன.

அறிமுகமான மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் அத்துடன் தெளிவின்மைகள்
மற்றும் அவர்கள் ஆவணங்களில் வழுக்கள் என நான் கருதும் விடயங்களைப்பற்றி
இன்று மாலை முதல் இம் மடலாற்றக் குழுமத்திற்கு எழுத எண்ணியுள்ளேன்.

தமிழ் விசை அடுத்த வெளியீடு மற்றும் சோதனை நிலையில் உள்ள எ-கலப்பபை-3.0
இன் இறுதியாக்கம் ஆகியன முன்னெடுக்க முன் பல பொதுவான விடயங்களைப் பற்றி
மீளாய்வு செய்வது நன்று எனக் கருதுகிறேன்.

மேலும் இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட SLS 1326:2008 (Tamil ICT
Standard) சீர்தரத்துக்கான ஆவணத்தின் (அதுவும் ஒருங்குறியே) பதிவிறக்கப்
பக்கம் பின்வருமாறு:
http://www.icta.lk/attachments/651_651_sls%201326.pdf . அதில் இலங்கை
அரசு அங்கீகரித்துள்ள ரெங்கநாதன் (Modified Renganathan) விசைமாற்றிக்கான
விதிமுறைகள் உள்ளன. அவ் விசைமாற்றியில் ஒரு சில விசைத் தொடர்களுக்கு
AltGr (வலது Alt ) விசைப் பயன்பாடு உள்ளன.(தமிழ் சின்னங்கள், இலக்கங்கள்
மற்றும் எண்கள்) கோபி தமிழ் விசையில் விசைமாற்றி ஒன்றில் AltGr
பயன்படுத்த இயலுமா?

~சேது

Gopalakrishnan (Gopi)

unread,
Nov 11, 2010, 4:03:59 AM11/11/10
to freetamil...@googlegroups.com
அன்பின் சேது,

வணக்கம்.

//அறிமுகமான மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் அத்துடன் தெளிவின்மைகள்

மற்றும் அவர்கள் ஆவணங்களில் வழுக்கள் என நான் கருதும் விடயங்களைப்பற்றி
இன்று மாலை முதல் இம் மடலாற்றக் குழுமத்திற்கு எழுத எண்ணியுள்ளேன்.//

எழுதுங்கள்.

//தமிழ் விசை அடுத்த வெளியீடு மற்றும் சோதனை நிலையில் உள்ள எ-கலப்பபை-3.0

இன் இறுதியாக்கம் ஆகியன  முன்னெடுக்க முன் பல பொதுவான விடயங்களைப் பற்றி
மீளாய்வு செய்வது நன்று எனக் கருதுகிறேன்.//

செய்வோம்.

//கோபி தமிழ் விசையில் விசைமாற்றி ஒன்றில் AltGr
பயன்படுத்த இயலுமா?//


இயலும். Alternate Grammar எனப்படும் [Alt Gr]  (வலது Alt) விசையை அழுத்தும் போது ஃபயர்ஃபாக்ஸ் 18 மற்றும் 17 ஆகிய விசைப்புள்ளிகளை (keyCode) அடுத்தடுத்து அனுப்புகிறது. இதைப் பிடித்து நமக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளலாம்.


இனிமையுடன்,

கோபி

2010/10/28 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.


Muguntharaj Subramanian

unread,
Nov 14, 2010, 7:38:26 PM11/14/10
to freetamil...@googlegroups.com
வணக்கம் கோபி,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

தமிழ் விசை அடுத்த பதிப்பிற்கான என் சிந்தனைகள்.

1. தமிழ் விசை  ஃபயர்பாக்ஸ் அடுத்த பதிப்பு கைபேசிகளில் செயல்படும் வகையில் வர இருக்கிறது. அதனால் நம் தமிழ்விசை அவற்றில் பயன்படும் வகையில் தயார் செய்வது மிக முக்கியம். இது கைபேசிகளில் தமிழ் உள்ளிடும் வசதியை எளிதாக கொண்டு வர உதவும்.

2. தமிழ்விசையில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/6593/ இல் உள்ளது போல் key suggestion வசதியை கொடுக்க முயற்சிக்கலாம்.

3. key suggestion கொடுக்க முடிந்தால் அதை மேலும் மேம்படுத்தி சொல்திருத்தியை இணைக்க முயற்சிக்கலாம்.

4. மேலும் தமி்ழ்விசையில் External keybord கோப்பை பயன்படுத்தும் வசதியை கொடுக்க முயற்சிக்கலாம். அவ்வாறு செய்தால் பயனர் அவர்களுக்கு தேவையான விசைப்பலகை மாற்றங்களை அவர்களாகவே செய்துகொள்ள முடியும். மேலும் மற்ற மொழிகளுக்கான விசைப்பலகைகளை இணைத்துக்கொடுக்க முடியும். எகலப்பையில் பயன்படுத்தும் விசைப்பலகைக் கோப்புகளை இத்துடன் பயன்படுத்த முடியும் (இது அவ்வளவு அவசியமில்லை, ஒரேமாதிரியான விசைப்பலகைகளை எ-கலப்பை, தமிழ் விசையில் பயன்படுத்த இது உதவும்)

அன்புடன்,
முகுந்த்

2010/11/11 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>



--
Blog: http://mugunth.blogspot.com
Follow me @ http://twitter.com/mugunth

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Nov 16, 2010, 3:53:16 AM11/16/10
to freetamil...@googlegroups.com
2010/11/11 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>:

> அன்பின் சேது,
>
> வணக்கம்.
>
> //அறிமுகமான மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் அத்துடன் தெளிவின்மைகள்
> மற்றும் அவர்கள் ஆவணங்களில் வழுக்கள் என நான் கருதும் விடயங்களைப்பற்றி
> இன்று மாலை முதல் இம் மடலாற்றக் குழுமத்திற்கு எழுத எண்ணியுள்ளேன்.//
>
> எழுதுங்கள்.
>

கோபி மற்றும் எல்லா நண்பர்களே,

வழுக்கள் மற்றும் வேறு பிரச்சினைகள் பற்றி
http://groups.google.com/group/freetamilcomputing/browse_frm/thread/c95cb1994ad1606c?pli=1
இழையில் இதுவரை 3 மடல்கள் இட்டுள்ளேன். வாசிக்கவும்


> //கோபி தமிழ் விசையில் விசைமாற்றி ஒன்றில் AltGr
> பயன்படுத்த இயலுமா?//
>
> இயலும். Alternate Grammar எனப்படும் [Alt Gr]  (வலது Alt) விசையை அழுத்தும்
> போது ஃபயர்ஃபாக்ஸ் 18 மற்றும் 17 ஆகிய விசைப்புள்ளிகளை (keyCode) அடுத்தடுத்து
> அனுப்புகிறது. இதைப் பிடித்து நமக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
>

நன்று. இலங்கை அரச சீர்தரத்திற்கு உட்படுத்தப்பட்ட ரெங்கநாதன் விசைமாற்றி
அமைப்பதில் உதவும்.

மேலும் சில விடயங்கள் பற்றி பின்னர் எழுதுவேன்

அன்புடன்
~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages