டோபல் தேர்வை எளிதில் வெல்வதற்கான ஆலோசனைகள் | Kalvimalar - News

7 views
Skip to first unread message

Rasheed Ahamed.A

unread,
Sep 11, 2012, 2:49:37 PM9/11/12
to ecef...@googlegroups.com

டோபல் தேர்வை எளிதில் வெல்வதற்கான ஆலோசனைகள்-



டோபல் தேர்வை எழுதும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதை எளிதாக எதிர்கொண்டு, வெற்றிபெறும் வழிமுறைகளையும் அறிந்துகொள்ளுதல் புத்திசாலித்தனம்.

வெளிநாட்டில் படிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருப்பவர்கள் எண்ணற்றவர்கள். வெளிநாட்டில் படிக்கும் பொருட்டு, தங்களின் ஆங்கில அறிவை அவர்கள் தேர்வின் மூலம் நிரூபிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், ஆங்கில மொழியறிவை நிரூபிக்க நடத்தப்படும் தேர்வுகளில் டோபல்(TOEFL iBT) தேர்வு முக்கியமானதாகும்.

இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை, 130 நாடுகளிலுள்ள 8500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. நீங்கள், ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா அல்லது அமெரிக்காவில் கற்க விரும்பினால், டோபல் தேர்வுடன், ஒரு ஆங்கில மொழி மதிப்பீட்டை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், ஏறக்குறைய அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. டோபல் தேர்வை ஒருவர், ஒரே நாளில் எழுதி முடிக்கவும் முடியும்.

டோபல் தேர்வானது, படித்தல், எழுதுதல், கவனித்தல் மற்றும் பேசுதல் என்ற 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அத்தேர்வை வெல்வதற்கான சில உபயோகமான ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,

உங்களுக்கு பிடித்தமான தலைப்பில் அதிகம் கற்றல் மற்றும் கற்றதை நண்பர்களுடன் கலந்துரையாடல்

Podcasts மற்றும் பதிவுசெய்யப்பட்ட விளக்கவுரையை கவனித்தல் மற்றும் உங்களுக்கு பிடித்தமான சுற்றுலா தளத்தைப் பற்றிய கட்டுரையைப் படித்தல் போன்றவை முக்கியமான அம்சங்கள். வழங்கப்பட்டுள்ள பிரதான ஐடியா, முக்கிய பாயிண்டுகள் மற்றும் மேம்பாட்டு ஐடியாக்கள் எவை என்று வரையறுக்க வேண்டும். நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை, உங்களின் நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர் ஆகியோரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தை நன்றாக பேசி பயிற்சி செய்வதற்கான ஒரு நபரை தேர்வுசெய்தல்

இதுபோன்ற நபர், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தால் நன்று. அப்படி ஒரு நபருடன் நேரடியாக பழக முடியாத பட்சத்தில், ஆன்லைன் வீடியோ சாட் மூலமாக, அப்படிப்பட்ட ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அடிக்கடி ஆங்கில மொழியை பேசிப் பழகும்போதுதான், அம்மொழியில் உங்களுக்கு நிபுணத்துவம் கிடைக்கிறது.

Vocabulary அட்டைகள்

உங்களுக்கென தனி Vocabulary அட்டைகளை உருவாக்கிக்கொண்டு, நீங்கள் செல்லுமிடங்களுக்கு அவற்றையும் கொண்டு செல்லவும். இது ஒரு சிறந்த பயிற்சி முறையாகும். நீங்கள் பயணம் செய்கையிலும், வேறு வேலைகள் இல்லாத நேரத்தில், பொழுதுபோக்கிக் கொண்டிருக்கையிலும், இந்த அட்டைகளை பயன்படுத்தி, உங்களின் வார்த்தை வள அறிவை மேம்படுத்தலாம்.

ரீடிங் ஆலோசனைகள்

படிக்கும் பத்தியை திருத்தவும் மற்றும் மறுஉருவாக்கம் செய்யவும். உங்களது எண்ணங்களை வகைப்படுத்துவதற்கு உதவும் வகையில் Outline -களைப் பயன்படுத்தவும். உங்களின் புரிந்துணர்வுத் திறனை அதிகப்படுத்தும் பொருட்டு, ரீடிங் பயிற்சியை மேற்கொள்ளவும். கணினி திரையில் படித்தல் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு பழகிக் கொள்ளவும். ஏனெனில், இத்தகைய செயல்முறைகள், டோபல் தேர்வு முறையிலும் பின்பற்றப்படுகின்றன.

பேசுதல்

ஒரு சிறிய கட்டுரையை, செய்தித்தாள் அல்லது பத்திரிகைகளிலிருந்து சத்தமாகப் படிக்கவும். அதுதொடர்பான, ஒரு நிமிட வாய்வழி சுருக்கத்தை வழங்கவும். கட்டுரைத் தொடர்பான உங்களின் கருத்தை வழங்கவும். அந்தக் கட்டுரையின் கருத்தாக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? பிரச்சினை கலந்துரையாடப்பட்டால், தீர்வை குறிப்பிடவும். உச்சரிப்பு பயிற்சியை மேற்கொள்ளவும். ஒவ்வொரு syllable -யும் வெளிப்படுத்தி, மெதுவாகப் பேசவும்.

எழுதுதல்

உங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கவும். அதைப் பற்றிய ஒரு சுருக்கக் கட்டுரையை எழுதவும். நீங்கள் மனதில் அந்நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை விளக்கவும் மற்றும் அந்நிகழ்ச்சியானது, கடந்த நிகழ்ச்சியைவிட எவ்வாறு வேறுபட்டிருந்தது மற்றும் ஒத்துள்ளது என்பதை தெரிவிக்கவும். நீங்கள் எழுதிய கட்டுரையை, வாய்ப்பிருந்தால், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினருக்கும் வழங்கலாம்.

இலவச வசதிகள்

* இத்தேர்வுக்கு தயாராகும் செயல்பாட்டில், கிடைக்கக்கூடிய பலவித இலவச அம்சங்களையும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

www.TOEFLGoAnywhere.org என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில், மாதிரி கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், http://www.ets.org/toefl/ibt/prepare/sample_questions மற்றும் http://www.toeflgoanywhere.org/user/toefl-journey போன்ற இணைப்புகள் உங்களுக்கு துணைபுரியும். மேலும், www.youtube.com/user/TOEFLtv/featured என்ற தளமும் உங்களுக்கு பலவிதங்களில் துணைபுரியும்.

இவைத்தவிர, டோபல் வாடிக்கையாளர் உதவி மையம் என்ற அமைப்பும் நடைமுறையில் உள்ளது. இந்த மையத்திற்கு இந்தியாவிலிருந்தே, திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, இலவசமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண் 000-800-100-3780. மேலும்,  TOEFLsupp...@ets.org என்ற e-mail முகவரியிலும் உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.

தேர்வு தேதியை திட்டமிடுதல்

தேர்வு மையத்தில் உங்களுக்கு, செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை, தண்ணீர் மற்றும் சில நொறுக்குத் தீனிகளும் தேவைப்படும். உங்களுக்கு தேவையான பொருட்களை முதல்நாளே ஒரு பையில் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். தேர்வுக்கு முந்தைய நாள் இரவு நன்றாக ஓய்வெடுக்கவும். தேர்வு நாளன்று காலை உணவு சாப்பிடுவதை தவிர்க்கக்கூடாது. பிரச்சினையற்ற உடையணிந்து செல்ல வேண்டும்.

திட்டமிட்டு செயல்பட்டால், வெற்றி உங்களுக்கே!

Reply all
Reply to author
Forward
0 new messages