![]() |
This email is free from viruses and malware because avast! Antivirus protection is active. |
--
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
You can visit this group at http://groups.google.com/group/azhagi
To post to this group, send email to azh...@googlegroups.com
To unsubscribe from this group, send email to azhagi+un...@googlegroups.com
For more options, visit http://groups.google.com/group/azhagi?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "அழகி (Azhagi)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to azhagi+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
25 ஏப்ரல், 2014
நான் உருவாக்கிய Word (வோர்ட்) ஆவணங்களை என் நண்பர்களுக்கு இணைப்பாக அனுப்பியபோது, இதே பிரச்சினையை நானும் எதிர்கொண்டேன். எனது நண்பர்கள் பெரும்பாலும் நான் அனுப்புவதை ஒரே ஒரு முறை படிப்பவர்கள் மட்டுமே. ஆவணங்களில் திருத்தங்களோ, மாற்றங்களோ செய்யவேண்டிய தேவை இல்லாதவர்கள்.
இச்சூழ்நிலையில் இப்பிரச்சினைக்கு நான் கீழ்க்கண்ட தீர்வைக் கண்டறிந்து பயன்படுத்திவருகிறேன்.
மின்னஞ்சல்களுடன் என் வோர்ட் ஆவணத்தை இணைப்பதற்கு முன் அதை ஒரு PDF ஆவணமாக மாற்றிவிடுகிறேன். இவ்வாறு மாற்றுவதில் பல நன்மைகளை நான் காணுகிறேன். முதலில், என் ஆவணத்தைப் படிப்பதற்காக நான் வாசகர்களுக்குக் கொடுக்கும் சிரமம் தவிர்க்கப் படுகிறது. அவர்கள் என் PDF ஆவணத்தை, உடனடியாக, நேரடியாகப் படிக்க முடியும்.
இரண்டவதாக, இது எனக்கும் சிரமமான பணியாக இல்லை. இதற்காக நான் CutePDF Writer என்ற வசதியைப் பயன்படுத்துகிறேன். இது கணினி உள்ளேயே இருக்கும் வசதி. கணினியின் புறத்தே உள்ள ஒரு பிரின்டெர் (Printer) கருவியின் மூலம் பிரதி எடுப்பதைப்போன்ற எளிதான வேலைதான். இதே போன்று PDF Creator போன்ற வேறு வசதிகளும், கணினிகளில் காணக்கிடைக்கின்றன.
மூன்றாவதாக, நான் இந்த வேலையை ஒரே ஒரு முறைதான் செய்ய வேண்டும், ஆனால் பல வாசகர்களின் கூடுதல் பணி தவிர்க்கப்படுகிறது.
கடைசியாக, PDF ஆவணத்தின் தோற்றம் வோர்ட் ஆவணத்தைவிட சிறப்பாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூற முடியாது.
ஜிமெயில் மின்னஞ்சல் பயன்பாடு பற்றிய இன்னொரு விஷயம்.
நானும் ஜிமெயில் தான் பயன்படுத்துகிறேன். அதில் செய்திகளை நான் நேரடியாகப் பதிவு செய்தில்லை. அதில் பயன்படுத்தப்படும் லதா எழுத்துரு எனககுப் பிடிக்காத விஷயம். (இதுவும் என் தனிப்பட்ட கருத்து!).
நான் அனுப்ப விரும்பும் செய்தியை முதலில் அழகியின் TSCu_SaiIndira எழுத்துரு பயன்படுத்தித் தயாரித்து, பிறகு Copy and Paste முறையில் ஜிமெயிலில் பதிவு செய்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தச் செய்தியும் அவ்வாறே அனுப்பப்படுகிறது.
நட்புடன்,
கி. அனந்தநாராயணன்