Go to Google Groups Home    அன்புடன்
Re: [anbudan] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

Poongulali <poongulali.selvamu...@gmail.com>

என் சின்ன மகன் இது போல் தான் எங்காவது அடிப்பட்டு கொண்டு வருவான்.ஒரு
முறை பள்ளியில் விழுந்து இடது கண் கிட்ட காயம் ,தையல் தேவைப்பட்டது ....இதில்
எனக்கு வலிக்கவில்லை என்று பெருமை வேறு ..சும்மா சொல்லிக் கொள்வான் .இப்போது
இரண்டு நாட்களுக்கு முன் முடியோடு சேர்த்து முகத்திலும் காயம் ,,யாரோ
விளையாடும் போது மிதித்து விட்டார்களாம் ...
பிள்ளைகள் அடிபடும் போது பார்க்க சங்கடம் தான் சாந்தி ,ஆனால் குழந்தைகள்
 தானே  விரைவில் சரியாகி விடும் ,வருந்தாதீர்கள்

2009/7/4 APPANAH KUALA LUMPUR <appana...@gmail.com>

> இருபத்து வருடங்களுக்கு முன்
> ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்யும்
> பொது எனக்கு வரவில்லை .
> குட்டிகரணம் போட்டேன்.
> thank you Mr Indran MPLP
> தொங்கும் ஏணியில் ஏறிவிட்டேன்
> இறங்க தெரியவில்லை
> பத்து  அடி உயரம்
> கயிறை விட்டால் நான்  பிரியாணி
> கீழே ஆசிரியர் மாணவர்கள்
> இறங்கும் வழி   சொல்ல
> புரியாமல் பாதுகாப்பாக இறங்கிவிட்டேன்
> வீட்டில் குட்டிக் கரணம கண்ணாடி அலமாரி
> உடைத்து வாங்கி கட்டிக் கொண்டேன் .

> 4 ஜூலை, 2009 3:27 pm அன்று, jmms <jmmsan...@gmail.com> எழுதியது:

> குழந்தையின் சேட்டையும் அடிபடுதலும்.

>> சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!- தினமும் 100 முறையாவது சொல்லியாகணும்...

>> காலங்காத்தாலே ஷாபிங் போய்விட்டு அடுத்த 3 நாள் விடுமுறை என்பதால் வெளியூர்
>> போகலாம் , காரை செர்வீஸ் பண்ணவிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பாடு
>> கொடுத்துவிட்டு மீண்டும் சென்று காரை எடுத்து வரலாம் னு பெரியவனை அங்கே
>> விட்டுவிட்டு சின்னவரை கூட்டி வீடு வந்தேன்..

>> கிரில்லில் சிக்கனை புரட்டிக்கொண்டிருந்த சமயம், தடால் னு சத்தம்.. தொடர்ந்து
>> வீல் என்ற அழுகை...

>> சோபாவில்  ஏறியவன் சோபாவோடு சாய்ந்து கீழே விழுந்து நாடி பிளந்து ரத்தம்
>> கொட்டுது.. உடனே ஐஸ் பேக் வைத்து டாக்ஸியை அழைத்து மருத்துவமனை ஓடினேன்...
>> சட்டையெல்லாம் ரத்தம்..

>> இதில் அந்த இடத்தில் ஐஸ் பேக் வைக்க விடாமல் ஒரே அழுகையும் பிடிவாதமும்...

>> எமெர்ஜென்ஸி சென்றதும் தயாராய் டீம் ( 10 பேருக்கும் மேல் ) அவனை படுக்க
>> தூக்கி செல்ல, அவனோ என் கையை விடாமல் பற்றிக்கொள்ள... அவன் காயத்தை துடைக்க,
>> அங்கு ஊசி போட... கையை காலை துணி வைத்து இருக சுற்ற...அப்பப்பா

>> எனக்கே மயக்கம் வந்துடும் போல.ரத்தத்தை பார்த்து. என்னை ஒரு நர்ஸ் ஆறுதல்
>> படுத்தி அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து  உட்கார சொல்ல...குழந்தையி ஒவ்வோரு
>> அழுகையும் நம்மை மீறி கண்ணீர் பொங்குதே.. அடக்க நினைத்தாலும் அடங்குதா
>> என்ன..?..

>> அப்ப கொஞ்சம் வெளில வேணா இருங்க ன்னு சொன்னா அம்மா அம்மா னு பிள்ளை
>> கத்துறான்.. அவனிடம் பேசிக்கொண்டே இருந்தேன் திரைக்கு பின்னால்..

>> இப்படி என்றாவது நடக்கும் என தெரிந்ததுதான்.. பள்ளியில் ஜிம்னாஸ்டிக்
>> கட்டாயம்,.. அதை படித்துவிட்டு வீட்டில் தரையில் நடப்பதே இல்லை.. மேசை அடுத்து
>> சோபா அடுத்து ஊஞ்சல் அடுத்து சருக்கு.. படுக்கையறைக்குள் வந்தாலும் ஒரே
>> குட்டிக்கரணம் தான்.. விளிம்பில் விழுந்து பலமுறை என்னை அலற வைத்துள்ளான்...

>> எப்பத்தான் பயம் வருமோ.. எப்படித்தான் பிள்ளை வளர்த்தார்களோ என் மாமியாரும் (
>> 8) அன்னையும்.. ( 6 ).   ( அவர்களைப்போல்  பெற்றோருக்கு சமர்ப்பணம் இந்த
>> பதிவு..)

>> கணவனுக்கு அழைத்தால் மீட்டிங்காம்.. ( போன் ஆஃப் )நண்பரிடம் சொல்ல
>> சொல்லிவிட்டு, மருத்துவமனையிலேயே காத்திருக்க ஓடி வந்தார்..அதற்குள் தூங்கி
>> விட்டான் குழந்தை..

>> திரும்ப வீட்டுக்கு வந்து லஞ்சமாக அவன் விரும்பிய சாக்லேட் சிப்ஸ் ( நார்மல்
>> நாள்களில் தடா செய்யப்பட்டவை இவையெல்லம் ) கண்ட பானங்கள் வாங்கி கொடுத்து ஒரு
>> வழியா தூங்குறார் ...

>> இத இப்ப கண்டிப்பா பதிவு  போட்டாகணுமான்னு கேட்டா, " அதுக்காக இந்தியாவுக்கு
>> போன் போட்டு சொந்தங்களை கலங்கடிக்க முடியாதேன்னு  தான் இங்க கொட்டிட்டேன்.. "
>> மனசு லேசாச்சுல்ல..

>> All Growing pains... உங்க அனுபவம் இருந்தா பகிருங்க..

>> நாளைக்கு போட்ட ட்ரிப் கேன்சலாகுமா ஆகாதான்னு பெரியவன் வந்து அப்பப்ப பாவமா
>> பார்த்துட்டு போறான்.. :)

>> பெரியவனை வளர்க்கும்போது இவ்வளவு சேட்டையில்லை..

>> இப்ப அந்த பேண்டேஜை எப்ப பிரிக்கலாம்னு கேட்டு ஒரே தொந்தரவு..அது ஆகும் ஒரு
>> வாரம்.. தண்ணி படாம பாத்துக்கணும்...

>> வீட்டுக்கு வந்துமே இம்புட்டு சொல்லியும் மேசை மேல் ஏறி அவன் ஜூஸை
>> எடுக்கிறான்.. ஒரு நிமிஷம் கூட உட்காரமுடியாது அவனால்..என்னத்த சொல்ல..????..

>> சாதாரணமாகவே போர் பற்றிய வலி நீங்கவில்லை.. இப்படியான வலி வேதனை, ரத்தம்,
>> அதன் நியாபகத்தை அதிகப்படுத்தி ஆறுதல் தருது நம் வேதனை ஒன்றும் பெரிதல்ல
>> என்றே...

>> --
>> சாந்தி
>> தன்னைப்போல் பிறரையும் நேசி..
>> http://punnagaithesam.blogspot.com/ =============================