The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
From: ப்ரியன் <mailtov...@gmail.com>
Date: Tue, 19 Jun 2007 07:39:38 +0530
Local: Mon, Jun 18 2007 10:09 pm
Subject: Re: [anbudan] Re: Kaathal Kathaigal
சுவாரசியமான இழை என்பதையும் தாண்டி என்னை \ எங்களை நானே \ நாங்களே
அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்விகள் அடங்கிய இழை என்பதால் நேர
சிரமத்திற்கு இடையிலும் என் பதில்கள் இங்கே...
1] உங்க கணவன்/மனைவியை முதன்முதலில் எப்போ, எப்படி, எந்த சூழ்நிலையில் பார்த்தீங்க? காதலி / காதலன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்தானே?ம்ம்ம்... உண்மையில் எப்போது எந்த தேதியில் பார்த்துக் கொண்டோம் என்பது நிச்சயமாய் நினைவில்லை...அலுவலகத்தில் எனக்கு முந்தைய பேட்ச் (Batch) ல் பயிற்சி முடித்துவிட்டு பிராஜெக்ட் (Project) ஒதுக்குவதற்காக மது காத்திருந்தாள்.நான் அப்போதுதான் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சி பிராஜெக்ட் (Training Project) செய்துக் கொண்டிருந்தேன்.இருவருக்கும் அலுவலக நேரம் காலை 7.00 முதல் மதியம் 2.00 வரை நானும் மதுவும் கொஞ்சமும் தாமதிக்காமல் 7.00 மணிக்கு வந்துவிடுவோம்.அதுவும் நான் சரியாக 6.45 க்கு எல்லாம் வந்துவிடுவேன் வந்ததும் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு அமர்ந்துவிடுவேன்(நினைத்தாலே இனிக்கும் பட பாடல்கள்).எனக்கு பின்னாலேயேதான் மதுவின் இருக்கை என்றாலும் எனக்கு மது வருவதும் போவதும் தெரியாது.பார்க்கவும் மாட்டேன்.பல நாட்கள் பேசிக் கொண்டதும் கூட இல்லை.அலுவலகத்தில் என் நண்பர் வட்டம் அப்போது ரொம்ப சிறிது என்னுடன் பயிற்சி வகுப்பு முடித்தவர்கள் தவிர யாருடனும் பேசியது கிடையாது.ஆனால் மது என் நண்பர்கள் சிலருடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருப்பாள். எனக்கு கல்லூரியில் இருந்தே வலை வடிவமைப்பில் கொஞ்சம் ஆர்வம் என்பதால் பயிற்சிக்கு தந்த ப்ராஜெக்ட்டை அழகாக வடிவமைத்தேன்.அதை என் நண்பன் அவளுக்கு காட்டிய நேரம் எச்.டி.எம்.எல் லில் ஒரு சந்தேகம் என என் நண்பனிடம் கேட்டிருக்கிறாள் அது அவனுக்கு தெரியாததால் என்னிடம் வந்தான் அவன், ஆனால் அவனால் என்ன சந்தேகம் என்பதை சரியாக விளக்க இயலவில்லை அதனால் அவன் மதுவை எனக்கு அறிமுகப்படுத்திவிட்டு அவளையே நேராக கேட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டான்.உண்மையில் எனக்கு அந்த சந்தேகத்திற்கான பதில் தெரியவில்லை என்றாலும் தேடி படித்து சரியாக விளக்கிவிட்டேன்.மதுவும் நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.அதுதான் நாங்கள் முதன் முதலாய் பேசிக் கொண்டது. அடுத்துப் பேச மறுபடியும் ஒரு மாதம் தேவைப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா?ஆனால் அதுதான் உண்மை.இந்த சமயத்தில் மதுவுக்கு ப்ராஜெக்ட் ஒதுக்கப்பட்டு நேரமும் இடமும் மாறி இருந்தது.இந்த முறையும் ஜாவா சந்தேகம்தான்.சென்ற முறைப் போல் இந்த முறை வாய் பேச்சுக்கூட இல்லை.அலுவலக சாட் வசதியில் எழுத்துவடிவில்தான்.உண்மையில் இந்த முறைதான் நாங்கள் பேசவே ஆரம்பித்தோம்.தினமும் காலை வந்தவுடன் காலை வணக்கம்.மதியம் உணவு ஆயிற்றா?அலுவலகம் விட்டு கிளம்புகையில் பார்க்கலாம் என்று எழுத்து வடிவில் பேசிப் பழகி இருந்தோம். இதனிடையில் எனக்கு ப்ராஜெக்ட் தர இருவரும் ஒரே தளத்தில் (இரண்டாவது தளத்தில்).எழுத்து வடிவில் பேச்சு தொடர்ந்த சமயத்தில் நான் கவிதை எழுதுவேன் என்பதை நண்பர்கள் மூலம் அறிந்திருந்தாள், மதுவும் நல்ல புத்தகம் வாசிப்பாள் அதனால் ஒரு நாள் நாளை உங்களிடம் இருக்கும் புத்தகங்கள் சில தர முடியுமா என்றாள்.அதை தொடர்ந்த அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி இருந்தோம்.விருப்பம் , குடும்பம் , கனவு , கவிதை , புத்தகம் என விரிந்த எங்கள் நட்பின் நீள அகலம் கவிதைக்கு படம் தேர்ந்தெடுத்தல், கவிதைக்கு திருத்தம் சொல்லுதல் என விரிந்தது.இந்த நிலையில்தான் என்னுடைய கவிதை ஒன்றை தட்ஸ்தமிழுக்கு மது அனுப்பச் சொல்ல அனுப்பிய அடுத்தநாள் வெளியானது.அதில் என்னைவிட சந்தோசம் கொண்டவள் அவள். நல்ல நண்பர்களாய் பழகி இருந்த எங்களுள் எது எந்த சமயத்தில் எப்படி காதல் விதையை ஊன்றிவிட்டுச் சென்றதென்று தெரியவில்லை.என் கல்லூரி நண்பியின் கல்யாணத்திற்கு நான் கோவை புறப்படும் முந்தைய நாள் மது அவளுடைய தோழியுடன் அலுவலகம் விட்டு செல்கிறாள், என்றுமில்லாமல் செல்லும் அவளையும் நடை நாதத்திற்கு ஏற்ப நடனமாடும் அவளின் நீண்ட கரு கூந்தலையும் பார்த்து நின்றிருக்கிறேன் மதுவும் திரும்பி புன்னகைத்துவிட்டு நகர்கிறாள்.ச்சே என்னடா நினைப்பிது நண்பியை காதலியைப் போல் பார்ப்பது என்று என் மேலேயே எரிச்சல் கொட்டிக் கொண்டுவிட்டு ஊருக்கு பயணமாகினேன். கோவையில் இறங்கியதும் வீடு , நண்பியின் கல்யாணத்தில் கல்லூரி நண்பர்கள் , நண்பிகள் அவர்களுடன் திரைப்படம் , கேலி கிண்டல் என எதிலும் மனம் ஒவ்வாமல் ஏதோ நான் தனித்துவிடப்பட்டதாய் ஒரு எண்ணம்.நண்பியை காதலியாய் பார்ப்பது தவறு என்று ஒரு எண்ணம் வந்து கொண்டே இருந்தாலும் , நீ எதிர்பார்க்கும் நீண்ட கூந்தல் , நீ எதிர்பார்க்கும் படிப்பு, நீ எதிர்பார்க்கும் அழகு என்று மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு தேவதை ஓயாமல் ஓதிக் கொண்டே இருந்தாள்.அந்த தேவதையின் ஓதலில் இரவெல்லாம் இரயில் விழித்து கடந்து அதிகாலையில் என் வாழ்வில் சூர்யோதயம் ஏற்படுத்திய அம்முடிவை எடுத்தேன். மார்ச் 15 , 2005 செவ்வாய் கிழமை என் வாழ்வின் மறக்க முடியா தருணங்களால் கோர்க்கப்பட்ட தினம் விக்கி : உங்க கிட்டே ஒரு முக்கியமான விடயம் சொல்லனும்? மது : சொல்லுங்க விக்கி : நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. மது : நிச்சயமாய் இல்லை. விக்கி : நீங்க தப்பா எடுத்துக்க மாட்டேன்னு சொல்லுங்க... மது : என்ன விடயம்?கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டேன் சொல்லுங்க... விக்கி : உங்களிடம் நட்பையும் தாண்டி அன்பு இருக்கு... மது : ம்ம்ம்...புரியுது... விக்கி : தப்பா? மது : தப்புன்னு நான் சொன்னேனா? நம்புங்கள் இதுவும் சாட் வழியே - எழுத்து வடிவில்தான். எனக்கும் மதுவுக்கும் ஒரே சமயத்தில்தான் காதல் உணர்வு உண்டாகி இருக்கிறது உண்மையில் இதுவரை எனக்கு ஆச்சரியம்தான் எது எங்கள் இருவரின் மனதையும் இணைத்து கட்டுவித்தது என்பது. 2] பார்த்ததும் உடனடியா மனதில் தோன்றியது என்ன? பார்த்த சமயத்தில் ஏதும் தோன்றவில்லை. 3] அதுக்கு அப்புறம் அடிக்கடி பேசினது உண்டா?..இல்லை ஊர் சுத்தினீங்களா?. வீட்டுக்கு தெரிந்தா தெரியாமலா? பேசினோம்...பேசுகிறோம்...பேசிக் கொண்டிருப்போம்... துணிமணி வாங்கச் செல்லுதல் , பழங்கள் வாங்க பழக்கடைக்கு செல்லுதல் , புத்தக நிலையங்களுக்கு செல்லுதல் , நூலகம் செல்லுதல் இதெல்லாம் ஊர் சுற்றும் பட்டியலில் இருந்தால் ஆம் ஊர் சுற்றி இருக்கிறோம்.இது தவிர ஒரே ஒருமுறை கடற்கரைக்கு அதுவும் மதுவின் அம்மா என்னைப் பார்க்க வேண்டுமென்றதால் - மாப்பிளை பார்க்க :) நாங்கள் காதலை உணர்ந்துக் கொண்ட ஒருவாரத்தில் எல்லாம் வீட்டுக்கு தெரியப்படுத்திவிட்டதால் வீட்டுக்கு தெரியாமல் வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 4] நீங்க வாங்கிக் கொடுத்த / அவங்க வாங்கிக் கொடுத்த முதல் பரிசு? சிகப்பு ஒற்றை ரோஜா / பர்ஸ் 5] இன்னும் வேறு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா? ம்ம்ம்...எல்லோரும் இதே மாதிரி விலாவாரியா கதை சொல்லுங்கப்பூ... You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
| ||||||||||||||