திருவெறும்பூர்: திருச்சி அருகே, 15 வயது சிறுமியை கடத்தி, எய்ட்ஸ் ஊசி போட
முயன்ற வழக்கில், மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். திருச்சி,
திருவெறும்பூர் அருகே உள்ள மேலகுமரேசபுரத்தை சேர்ந்த காசியம்மாள் மகள் சத்யா.
இவருக்கும், இவரது உறவினர் குமார மதிஸ் என்பவருக்கும், திருமணம் செய்ய
உறவினர்கள் பேசி வைத்தனர். குமார மதிசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த
திருவெறும்பூர் யூனியன் அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ராஜகுமாரிக்கும், தொடர்பு
இருந்தது. குமார மதிஸ்- சத்யா திருமணம் நடந்தால், தங்கள் காதலுக்கு இடையூறு
ஏற்படும் என்று கருதிய ராஜகுமாரி, பள்ளி மாணவி சத்யா மீது, எய்ட்ஸ் ஊசி போட்டு
கொல்ல முயற்சித்தார். அவருக்கு உடந்தையாக சரஸ்வதி, கண்மணி செயல்பட்டனர்.
புகாரின் பேரில், மேற்கண்ட மூவர் மீதும், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் கவுன்சிலர் ராஜகுமாரி, சரஸ்வதி இருவரும்
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கண்மணி, நேற்று, அவரது
வீட்டுக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார்,
கண்மணியை கைது செய்து, திருச்சி ஆறாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய
சிறையில் அடைத்தனர்
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13832
~காமேஷ்~
எங்கே கிடைக்குது இந்த எயிட்ஸ் ஊசி ?
இப்படி ஒரு கேஸா ?