சென்னை:* மெரினாவில் கிரிக்கெட் விளையாட வருவோரை தடுக்க ஆயுதப்படை போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.* விளையாட வருபவர்களை வீடியோ எடுக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை மெரினா கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
அழகிய புல்தரைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே அழகாக இருக்கும்
மெரினாவில், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்,
வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர். இதனால் வாக்கிங் செல்பவர்களுக்கு
இடையூறு ஏற்பட்டது. அதோடு மெரினாவில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல
முடியாத நிலையும் ஏற்பட்டது.
கடந்த வாரம் கிரிக்கெட் விளையாட வந்தவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அவர்கள்
சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மெரினாவில் கிரிக்கெட் விளையாட
சென்னை போலீசார் தடை விதித்துள் ளனர். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை மழை
காரணமாக கிரிக்கெட் விளையாட யாரும் வரவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை. மழை
பெய்யாமல் இருந்தால், காலையில் கிரிக்கெட் விளையாட வாலிபர்கள் வருவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கமிஷனர்
மவுரியா, உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் ஆகியோரது தலைமையில் ஆயுதம் ஏந்திய
போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் வீடியோ கேமராவுடன்
காத்திருக்கின்றனர். கிரிக்கெட் விளையாடுகிறவர்களை வீடியோ எடுக்கவும், அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
http://www.dinakaran.com/daily/nagaram/city602.asp
~காமேஷ்~
இப்படியெல்லாம் தடுத்தா எப்படி இந்திய அணியில் சென்னை சச்சின்கள் உருவாவார்கள்.