> அன்பின் புகாரி
> அருமை அருமை கவிதை அருமை
> இருப்பினும் தீர்ந்தே போகாத ஒன்று கிடையாது - பிரிவு மாறி நட்பாகலாம் - அல்லது
> துயரம் மறந்து போகலாம்
> யுகங்கள் கடந்து மறையும் தொலைதூர நடசத்திரங்களை விடவா - பிரிவுத் துயர்
> தீராமல் இருக்கும் -
> கவிஞனின் கற்பனை வளம் - இன்பிஃனிட்டி என்பதே - துயரத்திற்கு தீர்வே இல்லை
> என்பது.
> படைக்கப்பட்டவை எல்லாம் ஒரு நாள் அழியும்
> இதுதான் உண்மை
> நல்வாழ்த்துகள்
> [image:
> ?ui=2&view=att&th=124c77b8354f46ca&attid=0.1&disp=attd&realattid=ii_124c77b 8354f46ca&zw]
> -
> 2009/11/6 அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com>
> தீர்ந்தே போகாத ஒன்று<http://anbudanbuhari.blogspot.com/2009/11/blog-post_05.html>
>> <http://1.bp.blogspot.com/_Zh43ZidRqQQ/SvNtaLgf1eI/AAAAAAAACJQ/ONPsybx...>
>> சில நொடிகளில் உடைந்துபோனால்
>> அது மழைக்கால நீர்க்குமிழி
>> சில மணிகளில் கரைந்துபோனால்
>> அது பாலைவன மணல்மேடு
>> சில நாட்களில் உதிர்ந்துபோனால்
>> அது மொட்டவிழ்த்த மல்லிகை
>> சில மாதங்களில் வற்றிப்போனால்
>> அது வசந்தகால வாய்க்கால்
>> சில வருடங்களில் சிதைந்துபோனால்
>> அது வாலிபத்தின் வனப்பு
>> சில யுகங்களில் மறைந்துபோனால்
>> அது தொலைதூர நட்சத்திரம்
>> தீர்ந்தே போகாத ஒன்று உண்டெனில்
>> அது நீ தரும் பிரிவுத்துயர்
>> அன்புடன் புகாரி