Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Anbudan aRimugam
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 1 - 25 of 1608 - Collapse all  -  Translate all to Translated (View all originals)   Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
A.R. ZAREENA  
View profile  
 More options Jun 27 2005, 5:06 pm
From: "A.R. ZAREENA" <rzare...@gmail.com>
Date: Mon, 27 Jun 2005 17:06:56 -0400
Local: Mon, Jun 27 2005 5:06 pm
Subject: Anbudan aRimugam

டும்..டும்.. டும்..டும்... டும்...
 இதனால் சகல அன்புடன் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... தாங்கள்
எல்லோரும், இந்த இழையில் ஒரு சிறு குறிப்போடு, தங்களை அறிமுகப்படுத்தி
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்....
 டும்... டும்... டும்... டும்...
 (நானும் பாத்துகிட்டே இருக்கேன்... நீ போடு, நான் போடுனு இரண்டு மாசமா..
ஆளாளுக்கா பேசிக்கிட்டு இருக்கிய???)
 என்னைய பத்தி அப்புறம் எழுதுறேன்.. ஹி ஹி ஹி... :-)


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Buhari A  
View profile  
 More options Jun 27 2005, 5:13 pm
From: Buhari A <buh...@gmail.com>
Date: Mon, 27 Jun 2005 17:13:12 -0400
Local: Mon, Jun 27 2005 5:13 pm
Subject: Re: [anbudan] Anbudan aRimugam
ஜரினா,

எல்லோரும் டும் டும் டும்மும் ஹிஹிஹியும் சொல்லப் போறாங்க.... முதல்ல
உங்க கழுத்துல மணியைக் கட்டுங்க

அன்புடன் புகாரி

On 6/27/05, A.R. ZAREENA <rzare...@gmail.com> wrote:

> டும்..டும்.. டும்..டும்... டும்...

> இதனால் சகல அன்புடன் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... தாங்கள்
> எல்லோரும், இந்த இழையில்  ஒரு சிறு குறிப்போடு, தங்களை அறிமுகப்படுத்தி
> கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்....

> டும்... டும்... டும்... டும்...

> (நானும் பாத்துகிட்டே இருக்கேன்... நீ போடு, நான் போடுனு இரண்டு மாசமா..
> ஆளாளுக்கா பேசிக்கிட்டு இருக்கிய???)

> என்னைய பத்தி அப்புறம் எழுதுறேன்.. ஹி ஹி ஹி... :-)

--
http://anbudanBuhari.com
http://anbudanBuhari.blogspot.com
http://groups-beta.google.com/group/anbudan

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
A.R. ZAREENA  
View profile  
 More options Jun 27 2005, 5:31 pm
From: "A.R. ZAREENA" <rzare...@gmail.com>
Date: Mon, 27 Jun 2005 17:31:45 -0400
Local: Mon, Jun 27 2005 5:31 pm
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

அவ்ளோ தானே.. கட்டிட்டா போச்சு....

*************************************************************************** ******************
*என்னைப்பற்றி:*
 கனடாவின் சிங்க குகையில் இருந்து ஒரு நெல்லை பட்டாம்பூச்சி...... (சேதுவும்,
சின்னாவும் மொறைக்காப்ல இருக்கு)...
 ஆமாங்க நான் இருக்கிற கேம்ப்ரிஜ்ல தான் "African Lion Safari" யும், "Wings of
Paradise- Butterfly conservative park" ம் இருக்கு... அதனால தான் அப்படி ஒரு
அறிமுகம்....
 வேற என்ன சொல்ல??? ம்ம்....
 பெயர்: அ. ரஹ்மத் ஜரினா
 சொந்த ஊர்: திருநெல்வேலி - பெருமாள்புரம்
 படிப்பது: இயந்திரவியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு
 (Phd - permanent head damage???)
 கல்யாணம்: ஆகிவிட்டது, 2 வருசம் ஆச்சு :-(
 இளநிலை படிப்பு: (B.E) ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பொறியியல் கல்லூரி
(பாளையங்கோட்டைல இருக்கத விட பெரிய மத்திய சிறைச்சாலை)
 முதுநிலை படிப்பு: (M.Eng - ஆராய்ச்சி வழி) : சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
(சொர்க்கம்)
 முத்தியநிலை: (வேற எப்படி சொல்ல???) - மெக்மாஸ்டர் பல்கலைகழகம், ஹமில்டன்,
கனடா (நந்தவனம்)
  (வேற என்னப்பா சொல்லனும்? சேது கொஞ்சம் உதவுங்களேன்)....
 சரி இப்பதைக்கு இவ்ளோ தான்.. வேற யாருக்காவது எதாவது சந்தேகம்னா சொல்லுங்க
பா....சரியா???
 _/\_
 ~ ஜரினா...

 On 6/27/05, Buhari A <buh...@gmail.com> wrote:

--
A.R.Zareena
Canada

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Viki...  
View profile  
 More options Jun 28 2005, 12:51 am
From: "Viki..." <mailtov...@gmail.com>
Date: Tue, 28 Jun 2005 10:21:17 +0530
Local: Tues, Jun 28 2005 12:51 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

என்னைப் பற்றி:

தமிழகத்தில் தலைநகரிலிருந்து மரியாதைக்கு பெயர் போன ஊர்காரன்...

பெற்றோர் இட்டப் பெயர்: பழம்நீ.விக்னேஷ்.

நான் இட்டுக் கொண்ட பெயர்: ப்ரியன்

நண்பர்கள் இப்படி அழைப்பர்: விக்கி , ரெப் ( ரெப்பரசண்டேடிவ் என்பதின் சுருக்கம்)

சொந்த ஊர்: கோவை - தோலம்பாளையம்.
                         (இப்போ இருக்கிறது - கோவை - வீரபாண்டிப் பிரிவு)

பிழைப்பு தரும் ஊர்: சென்னை.

படித்தது: இளநிலை படிப்பு - கணிப்பொறியியல் - பன்னாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி -
சத்தியமங்கலம் (ஆமாங்க நம்ம வீரப்பன் பக்கம் தானுங்க) - எனக்கு கல்வியையும் -
அநுபவங்களையும் தந்து - நல்ல பல நண்பர்களையும் கண்டுக்கொள்ள உதவிய கல்லூரி...முதல்வரின்
சூ போடுடா,இன் பண்ணுடா என்ற திட்டுகளின் அர்த்தம் இப்போது புரிகிறது...

வேலை: கணிப்பொறி வல்லுநராக மானிட்டரை முறைச்சுட்டு இருக்கேன்...

கலியாணம்: ஹா ஹா ஹா ஹா புரியலைங்களா?...இன்னும் இல்லீங்க...

கெட்டப் பழக்கம்: வாங்கும் சம்பளம் செலவிற்கு பத்தலைனாலும் கடன் வாங்கியாவது புத்தகம்
வாங்குறது...

பொழுது போக்கு: சாட்டிலைட் சேனல் விபரங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் - கொஞ்சம்
வித்தியாசம்தான் இல்லீங்களா?

வேற என சொல்ல??ம்.ம்.ம்.சரி ஏதாவது விடு பெற்றிருந்தால் கேளுங்க சொல்லுறேன்...


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Nila Raseegan  
View profile  
 More options Jun 28 2005, 1:49 am
From: Nila Raseegan <nilarasee...@gmail.com>
Date: Tue, 28 Jun 2005 11:19:29 +0530
Local: Tues, Jun 28 2005 1:49 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

*என்னைப் பற்றி...*
 கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி,மகாகவிஞன் பாரதி,வீரபாண்டிய
கட்டபொம்மன்,உமறுபுலவர்,புலித்தேவன்....என்று
 வீரத்தாலும் கவிதையாலும் தமிழகத்தை தலைநிமிர செய்த
வீர-கவிஞர்களை மண்ணுக்கு தந்த தூத்துக்குடி மாவட்டத்தில்(முன்பு நெல்லை
மாவட்டம்)
ஒரு அழகிய கிராமத்தில் நானும் ஒரு
உயிர்த்துளியாய் வந்து விழுந்தேன்.
 *பெயர்:-*நிலாரசிகன்(அன்புடனில் நிலன்,நிலவன்,நீல்ஸ்,நிலா மக்கா)
 *சொந்த ஊர்:-* நடுவைக்குறிச்சி(சத்தியமா யாரும் கேள்வி பட்டு இருக்க
மாட்டிய...!),தூத்துக்குடி மாவட்டம்.
 *படித்தது*: இளநிலை கணிப்பொறி அறிவியல்(B.sc <http://B.sc> comp sci)
காமராசர் கல்லூரி,தூத்துக்குடி, முதுகலை கணிப்பொறி அறிவியல்
(M.C.A),சத்தியபாமா பொறியியல் கல்லூரி(எல்லோருக்கும் அது
சென்டரல் ஜெயில்...எனக்கு நரக வேதனை தந்த சொர்க்கம்!)
 *இப்போது குப்பை கொட்டுமிடம்:* பாரதத்தின் தலைநகரில்.
  *திருமணம்:* இப்போதைக்கு இல்லீங்கோ!..(நிறைய ஜாதகம் வருதாம்..அம்மா
சொன்னாங்க...நான் முடியாதுன்னுட்டேன்ல...)
 *பிடித்த புத்தகங்கள்:-* பாரதியார் கவிதைகள்,வைரமுத்துவின் சிகரங்களை
நோக்கி,தண்ணீர் தேசம்,இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,மு.மேத்தாவின் நடந்த
நாடகங்கள்,கல்கியின் பொன்னியின் செல்வன்,(வந்திய தேவனை மறக்க முடியுமா?), கலீல்
ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்,
மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்,சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மை
சிறைப்படுத்துவது,அறிவுமதியின் நட்புக்காலம்,நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி
விற்பவன்,பாலகுமாரனின் மெளனமே காதலாக,நிலாரசிகனின்
நிலாக்காலங்கள்(ஹிஹி என் புக்தாங்கோ!)
 *அடிக்கடி புரட்டும் புத்தகங்கள்:* டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின்
"எண்ணங்கள்", கல்யாண்ஜி கவிதைகள்.
 *படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள்:* ரசிகவின் பானிபட் இதயங்கள்,(ஸாரி
நண்பா இன்னும் கொஞ்சம் படிக்கனும்...சீக்கிரம் அனுப்புகிறேன் விமர்சனம்)
தபுசங்கரின் தேவதைகளின் தேவதை.
  *பிடித்த பாடல்* : கண்ணே கலைமானே,எவனோ ஒருவன் யாசிக்கிறான்,
விடை கொடு எங்கள் நாடே,கண்ணா கறுமை நிறங்கண்ணா(கண்ணதாசன் வரிகள்தானே?)
 *அதிகம் பாதித்த கவிஞர்:* வைரமுத்து(எங்கோ இருந்தவனை கவிதைக்கரம் பிடித்து
எழுத வைத்த என் குரு.)
 *பொழுதுபோக்கு:* உணர்வுகளை எழுதுவது(கவித கவித !),பலகுரலில் பேசுவது(கல்லூரி
நாட்களில்)
 *பிடித்தது:* மழைக்குப்பின்னால் மரங்களிடியில் நடப்பது,புது புத்தகம் புதுசாய்
பூத்த பூக்களின் வாசனை,இரவின் தனிமையில் மெல்லிசை(ஜேசுதாஸ்!), ஜன்னல் வழியே
நிலவிடம் நலம்விசாரிப்பது..என் வீட்டு
நாய்க்குட்டி,ரயிலின் ஜன்னலோர இருக்கை....இது ஒரு பெரிய்ய்ய்ய்ய
லிஸ்ட்!(தனிமடலில்தான் அனுப்பனும்!)
   *பிடிக்காதது:* முகமூடி மனிதர்கள்,பொய் சொல்லிகள்.
 மேலும் அறிந்து கொள்ள தனிமடல் அனுப்பவும்...
 வரட்டுமா...டாடா....
  *அள்ளித்தர அன்புடன்,*
*நிலாரசிகன்.*

 On 6/28/05, Viki... <mailtov...@gmail.com> wrote:

...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Rama Subramanian  
View profile  
 More options Jun 28 2005, 1:56 am
From: "Rama Subramanian" <rasubraman...@firstam.com>
Date: Tue, 28 Jun 2005 11:26:04 +0530
Local: Tues, Jun 28 2005 1:56 am
Subject: RE: [anbudan] Re: Anbudan aRimugam
திரும்பிப் பார்கிறேன்:
(ரொம்ப ஓவரா இருக்குன்னு காதுல விழுது,ஆனா வேற எங்க இப்படி போட்டுக்க வாய்ப்பு கிடைக்கும் சொல்லுங்க,அதானுங்க! )

பெயர் : இராமசுப்ரமணியன்
(அன்புடனில் இன்னொருதரும் இதே பேரோட இருக்காரு.. கூடிய சீக்கிரம் உங்களுக்கும் தெரியவரும்)

நான் பிறந்து தமிழ் வளர்த்த மதுரையில்,

வளர்ந்தது தாமிரபரணி பாயும் நெல்லையில், டவுணு..டவுணு...டவுணு..திருநெல்வேலி டவுணு..
இன்று பொருள்தேடி பெங்களூரில்.

படித்தது:
சாபாநடேசர் தொடக்கப்பள்ளி,இராமநாதபுரம் (80-81)
T.E.L.C.நடுநிலைப்பள்ளி,சாத்தூர்(81-83)
T.E.L.C.நடுநிலைப்பள்ளி,பரமக்குடி(83-85)
சாப்டர் மேல்நிலைப்பள்ளி,நெல்லை(86 - 91)
ம.தி.தா. இந்துக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி,நெல்லை (91-93)
இளநிலை இயற்பியல் ம.தி.தா. இந்துக்கல்லூரி நெல்லை (93-96)
பிறகு கணிப்பொறி பயன்பாட்டில் முதுகலை R.V.S பொறியியல் கல்லூரி திண்டுக்கல். (96-99)

இந்தப் பள்ளி, கல்லூரியில் படித்த யாராவது இருக்கீங்களா!?, தெரிந்து கொண்டால் மகிழ்வேன்,

திருமணம் : இரண்டு வருடம் ஆகிவிட்டது, மனைவி,வரலெட்சுமி,மதுரையைச் சேர்ந்தவர்.

இதுக்கு மேல என்ன சொல்ல்றதுன்னு எனக்கும் தெரியலை அம்புட்டுதான் என்னைப்பற்றி

(மனசாட்சி : சரி சரி திரும்பிப்பாததெல்லாம் போதும் கழுத்து வழிக்க போகுது.)

அன்புடன்,
ராம், நெல்லை&பெங்களூர்.

...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Rama Subramanian  
View profile   Translate to Translated (View Original)
 More options Jun 28 2005, 2:34 am
From: "Rama Subramanian" <rasubraman...@firstam.com>
Date: Tue, 28 Jun 2005 12:04:40 +0530
Local: Tues, Jun 28 2005 2:34 am
Subject: RE: [anbudan] Re: Anbudan aRimugam

இதோ போட்டுவிட்டேன், செல் பேசியில் எடுத்தது! :D
ஏன்டா கேட்டோம்ன்னு இருக்குமே ஹிஹிஹி!!

அன்புடன்,
ராம், பெங்களூர்

...

read more »

  ????-?????????.jpg
4K Download

  ram-bangalore.jpg
4K Download

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Rathika V  
View profile  
(1 user)  More options Jun 28 2005, 3:45 am
From: Rathika V <rathi...@gmail.com>
Date: Tue, 28 Jun 2005 15:45:10 +0800
Local: Tues, Jun 28 2005 3:45 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam
சிங்கையில் இருந்து ஒரு சின்னக்குயில்... (எல்லாரும் ஏதேதோ சொல்றாங்க...
அதான் நானும்.. இப்படி ஒரு தலைப்பு கொடுத்துக்கிட்டேன்...)

பெயர்: வீ.ராதிகா
பிறந்த தேதி : 27 அக்டோபர் 1981
ஊர் : அருப்புக்கோட்டை (மதுரைப்பக்கம்...மதுரைக்காரங்களுக்கு
தெரியும்...ராம் தெரியுமா??...இல்லை-னு சொல்லி மானத்தை
வாங்கிராதீங்க....)

படிப்பு: B.E (கணிப்பொறியியல்),கலசலிங்கம்
கல்லூரி,திருவில்லிப்புத்தூர்.. (ஜரினா அக்கா...நம்ம ஆளு தான்...)
            M.Sc(Computer Integrated Manufacturing -- இதை தமிழில்
சொல்ல தெரியலை.. மன்னிச்சிக்கோங்க...!!!),நன்யாங் தொழில்நுட்ப
பல்கலைகழகம்,சிங்கப்பூர்

வேலை : கணிப்பொறியாளர்,சாப்ட்வேர் துறை... தான்.... (கழுதை கெட்ட
குட்டிச்சுவறு... வேற எங்க போறது... அதே web design,database) என்னைக்கி
விடியுமோ..யாருக்கு தெரியும்....???

கல்யாணம் : இந்த நிமிசம் வரை நடக்கலை... எப்போ வேணும்னாலும் நடக்கும்...
வீட்டில் பாத்துக்கிட்டே..டே...டே..டே... இருக்காங்க... (ரொம்ப்பபபபப
நாளா பாக்குறாங்க... இன்னும் யாரும் மாட்டலை...)

பிடித்த விசயம் : காதல்,நட்பு,புத்தகம்,இசை,கவிதை,"அன்புடன்",என்
குடும்பம் (அம்மா,அப்பா,2 அக்கா (கல்யாணம் ஆகிருச்சி),அவங்களோட
குழந்தைகள்)

பிடிக்காதது : கொஞ்சம் முன்கோபம்(இப்போ ரொம்பவே
குறைச்சிட்டேன்...நிஜம்... நம்புங்க....)

இன்னும் நிறைய பிடிச்சது,பிடிக்காதது இருக்கு... அதெல்லாம் எழுத நேரம்
இல்லை...முடிஞ்ச அப்புறம் எழுதுறேன்...

வேற எதுவும் தெரியணும்னா, தனிமடல்கள் வரவேற்கபடுகின்றன.....!!! என் யாஹூ
முகவரிக்கு : rathika...@yahoo.co.in

On 6/28/05, Rama Subramanian <rasubraman...@firstam.com> wrote:

...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Arasu  
View profile  
 More options Jun 28 2005, 5:35 am
From: "Arasu" <ar...@sella.it>
Date: Tue, 28 Jun 2005 02:35:08 -0700
Local: Tues, Jun 28 2005 5:35 am
Subject: Re: Anbudan aRimugam
பெயர் : வல்லத்தரசு
நண்பர்கள் அழைப்பது : அரசு
மனைவி பெயர் : அகிலா ( மாமா
பெண். ஒன்பது வருட ஒரு
                 ஒருதலைக் காதல்
ஊர்  : நாட்டுச்சாலை (
பட்டுக்கோட்டை, தஞ்சை )
படிப்பு : முதுகலை
பட்டப்படிப்பு ( கணினியில்)
மற்றும் சிங்கையில்
        கணினியில் ஒரு
பட்டயப்படிப்பு.
பணி  : தமிழகத்தின்
தலைநகரில்
கணினித்துறையில்.
பிடித்த புத்தகங்கள் : கவி
நூல்கள், கல்கியின்
பொன்னியின் செல்வன்
                   சிவகாமியின் சபதம்,
பார்த்திபன் கனவு.

சாண்டில்யனின் கடல் புறா (
மிகவும் கவர்ந்தது )
பிறந்த தேதி : 04-04-1976

அப்புறம் ???????????

அன்புடன்
அரசு


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
gnaniyar rasikow  
View profile  
 More options Jun 29 2005, 8:48 am
From: gnaniyar rasikow <rasi...@gmail.com>
Date: Wed, 29 Jun 2005 18:18:50 +0530
Local: Wed, Jun 29 2005 8:48 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

திருநெல்வேலிச்சீமையில் "எல - வால - போல" என்ற கம்பீரத்தமிழ் சூழலில் தாமிரபரணி
தண்ணீர் குடித்து வளர்ந்து படித்து இப்பொழுது சாதிக்கத்துடிப்பவனின் சுயசரிதம்.
டவுசர் போட்ட காலம் முதல் ஜீன்ஸ் போட்ட காலம் வரையிலும் திருநெல்வேலிதான்.

 பெயர் : ஞானியார்
புனைப்பெயர் : ரசிகவ்
 ( யாரும் தரலங்கோ நானாக வைச்சது -
அம்மா பெயர் : ரசினா
அப்பா பெயர் : கௌபத்துல்லா
- இரண்டிலும் பாதிதான் ரசிகவ் )

பிறந்த நாள் : 10 - 07 – 78

வயசு : கல்யாண வயசுங்கோ

படித்தது : ஹி ஹி ஹி

முடித்தது : எம் சி ஏ

சாதனை : பாஸ் ஆனது
பள்ளி படிப்பு : மிகவும் புகழ்பெற்ற திருநெல்வேலியில்
 உள்ள மேலப்பாளைத்தில் படித்தேன்.

கல்லூரி :
இளங்கலை படிப்பு (பி எஸ் ஸி கணிதம்) பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா
கல்லூரியில் படித்தேன்.
பின்னர் ஜான்ஸ் கல்லூரியில் முதுகலை படிப்பு எம் எஸ் எஸ்ஸி கணிதம் கிடைத்தது
இரண்டு மாதம் படித்தேன்.
பின் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றதால் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகம்
அவர்களது துரதிஷ்டம் எம் சி ஏ கொடுத்துவிட்டார்கள்.

வேலை :

பி எஸ் ஸி படிக்கும்போது தினமலர் - தினகரன் - தமிழ்முரசு – கதிரவன் என
பத்திரிக்கையில் சம்பளம் வாங்காத நிருபராக வேலை பார்த்தேன்.

பின் எம்சிஏ படிக்கும்போது பெட்ரோல் காசுக்காக ஏர்செல்லில் எக்ஸிகியுட்டிவாக
சேர்ந்தேன். வாழ்க்கை ஜாலியாக இருந்தது. பாக்கெட் காலியாக இருந்தது

இப்போது வாழ்க்கைக்காக துபாயில் பணி. பாக்கெட் நிரம்பியது. மனசில் வெறுமை.எதையோ
தொலைத்தது போன்ற உணர்வு.

விருப்பமான படிப்பு : ஜர்னலிசம்

கவிதை :

கவிதை திறமையை வளர்த்தது சதக்கல்லூரிதான். நண்பனுடைய ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல்
- நிராகரிக்கப்பட்ட காதலை கண்டு கொதித்தெழுந்து எழுத ஆரம்பித்தேன்.

எனக்கு கவிதை எழுத கற்றுக்கொடுத்த நண்பனுடைய காதலிக்கும் வைரமுத்துவுக்கும்
நன்றி.

முதல் கவிதை :

அன்புநகர் தேவைதையே
அன்னிமாய் எண்ணிவிடாதே!
குற்றால சீசனெல்லாம் உன்
கூந்தலிலே குடியிருக்க
தென்காசியில் நானிருந்து
தேவதையே என்ன பயன்?

(தென்காசியில் இருந்து திருநெல்வேலி படிக்கவந்த ஒரு நண்பனுடைய காதலுக்காக
எழுதியது.அதான் அவன் காதல் ஊத்திக்கிச்சுபா..)

கடைசியாய் எழுதிகொண்டிருக்கும் கவிதைகள் :

தயவுசெய்து
யாராவது என்னை
காதலியுங்களேன்
அடுத்த கவிதைப்புத்தகம்
வெளியிடவேண்டும்

காதலித்துப்பார்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்

என்
சிம்கார்டுக்கு
ஜீவன் கொடுப்பதே
உன் அழைப்புகள்தானடி
திருப்புமுனை : பானிபட் இதயங்கள் கவிதைப்புத்தகம்
 வெளியிட்டது
சதக் கல்லூரியின் பேருந்து நிலைய
 திருப்புமுனை
 திருமணம் : கொஞ்ச நாள் கஷ்டபடாம இருக்க
 விடுங்கப்பா
 ( பொறுப்பு இன்னும் வரலங்கோ )

பொழுதுபோக்கு : பைக்கில் சுற்றுதல் - கவிதை
 எழுதுதல் - புத்தகம் படித்தல்

மறக்கமுடியாதது : மறந்து விட்டது

கவிதை என்பது : எவனுக்குத் தெரியும்?

காதல் என்பது : கவிதை

வருமானம் : நட்பு

பிடித்த உணவு : பூரி

கெட்ட பழக்கம் : எப்போதும் டீ குடிப்பது –
வீட்டுல டீ –
வெளியபோனா டீ –
ஜஸ்கீரீம் சாப்பிட்டால் கூட
 சாப்பிட்ட பிறகு டீ

போதை : அன்புடன்
பலம் : கனடா – சிங்கப்பபூர் - துபாய் - இந்தியா என்
 உலகலாவிய நட்பு
 பலவீனம் : விட்டுக்கொடுப்பது – கண்மூடித்தனமாய்
 இரக்கப்படுவது

நம்பிக்கை : நண்பர்கள்

காதல் அனுபவம் : ம்ம்ம்ம்ம்…
மறக்கமுடியாதது :
 உலக தமிழ் மாநாட்டில் பேசியது
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு விருந்து சென்றது
மைக்கேல் ஜாக்ஸன் கையால் பரிசுபெற்றது
உலக அழகி ஜஸ்வர்யா வீட்டிலிருந்து மாப்பிள்ளை
 பார்க்க வந்தது

பில்கேட்ஸ் வேலைக்கு அழைத்தும் செல்ல மறுத்தது
( இப்படியெல்லாம் பொய் சொல்ல நினைத்தது )

படித்ததில் பிடித்தது : அவள் விழிகள்
நன்றி சொல்ல நினைப்பது : இறைவனுக்கு
 (கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் - அரியர்ஸ்
அடுத்தடுத்து வைப்பதற்கு அஞ்சுதே என் உள்ளம் )

தொடர்புக்கு : gnaniya...@rediffmail.com
 துபாய் " - 0097150 4231109

தற்போது – 9894316598

இணையம் : www.nilavunanban.blogspot.com<http://www.nilavunanban.blogspot.com>

நான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று நீங்கள் சொல்லவேண்டும். ஆனால் என்னால்
தைரியமாக சொல்லமுடியும்!நான் வில்லனல்ல! நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் -
கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும்
மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி!
  இதயம் நெகிழ்வுடன்

* ரசிகவ் ஞானியார்*

 On 6/29/05, Buhari A <buh...@gmail.com> wrote:

...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
A.Mohamad Mubaarak  
View profile  
 More options Jun 29 2005, 9:20 am
From: "A.Mohamad Mubaarak" <hmu...@gmail.com>
Date: Wed, 29 Jun 2005 16:20:55 +0300
Local: Wed, Jun 29 2005 9:20 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

நேற்று முபாரக் எழுத்துக்கள் என்ற இழையில் இட்ட அறிமுகம்தான் இது (மீண்டும்
இடுவதற்கு மன்னிக்கவும்)
**
*அன்பிற்குரிய அன்புடன் குழுமத்தினர் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும்
உண்டாவதாக!*

முதலில் மெல்லிய அறிமுகத்தோடு தொடங்குவோம்!

*பெயர்:* முகம்மது முபாரக்
*

வயது:
*31 (அட இன்றுதான் என் பிறந்த நாள் - ஜுன் 28) சித்திரை நட்சத்திரம் - மீன
லக்கனம் - கன்னி ராசி

*பிறந்த ஊர்:* நாகூர் (அம்மாவின் ஊர்)

அப்பாவின் *சொந்த* *ஊர்: *அரசநகரிப்பட்டினம் , மீமிசல் அருகே, புதுக்கோட்டை
மாவட்டம் (கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்த ஊர்), 300 வீடுகளும் 500
குடும்பங்களும்
வசிக்கும் கிராமம், பனைமரக்காடுகளும், பால்மாடுகளும், தும்பிகளும் ,
ஆவாரஞ்செடிகளும், காதலியின் அழகோடு கடற்கரையும், ஊரின் முகப்பில்
குளமும், குளத்தின்
மையத்தில் அத்தி மரமும், குளத்துக்கருகிலேயே கோயிலும், பள்ளிக்கூடமும்,
பள்ளிவாசலும், வயல்வெளிகளும், நான் காதலிப்பதற்காகவே ஒரு தேவதையையும், திருமணம்
செய்து கொள்வதற்காக இன்னொரு தேவதையையும் வைத்திருந்ததும், பதிமூன்று வயதுவரை
என்னைப் பாதுகாத்து வைத்திருந்ததும் அந்த ஊர்தான் )

*நிர்பந்தமான படிப்பு: *8 ஆவது வரை (அரசநகரி ), 9-10 அம்மையப்பன் (திருவாரூர்
அருகே), டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் - நாகப்பட்டினம்*

விருப்பமான படிப்பு: *ஹோமியோபதி, அக்குபஞ்சர் (பாரம்பரிய சீன வைத்தியம் ), மலர்
மருத்துவம்*

திருப்புமுனை: *எல்லா படிப்புச் சான்றிதழ்களும், கடவுச்சீட்டும் (பாஸ்போர்ட்)
2004 ல் ஒரு பேருந்துப் பயணத்தில் திருடப்பட்டது (ஒரு சில காதல் கடிதங்கள்
போனதுதான் ரொம்ப வருத்தம் )

*திருமணம்: *தாத்தாவின் பிடிவாதத்தால் 19 வயது நிறையும் முன்பே (மணமகளை
3ஆவதாக காதலித்துக்
கொண்டிருந்ததால், ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை )

*வேலை*: 2 வருடம் மளிகைக் கடையில், ஒன்பது வருடமாய் ரியாத், சவூதி
அரேபியாவில்(7 மாதம்
வேலையில்லாமல், 7 வருடம் Lucent Technologies - Digitized Maps Engr, ஒன்றரை
வருடமாய் Wyeth Pharmaceuticals - Office Admin)

*சம்பாத்தியம்: *மாயமான் வேட்டை*

உபரி நேரத்தில்: *வைத்தியம் பார்த்தல் (ஹோமியோ, அக்குபஞ்சர்), சமையல், எழுத்தே
எழுந்து வந்து எழுதச்சொல்லும்போது எழுதுவது*

பிடித்தது: *நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது, ஒவ்வொரு நாளும் எப்படியாவது
புத்தகங்கள் வாசிப்பது , புதிய கல்விஞானங்களைக் கற்றுக்கொள்வது (தற்போது
கற்றுக் கொண்டிருப்பது ஜோதிடக்கலை)

*பிடிக்காதது: *நண்பர்கள் கடிதம் எழுதாமல் இருப்பது (தாமதிப்பது), ஒரேமாதிரியான
வாழ்க்கை , சினிமாவில் கற்பழிப்பு காட்சிகள்.

*விரும்புவது*: ஒவ்வொரு நாளும் யாரேனும் என்னை நேசிப்பதாய்ச் சொல்வது, யாரிடமாவது
நேசத்தைச் சொல்வது , குறைந்தபட்ச உண்மைத் தன்மை, நேர்மையோடு வாழ்தல்,
எக்காரணத்துக்காகவும்
யாரையும் புண்படுத்தாமல் வாழ்வது *

விரும்பாதது: *சுயநலத்துக்காக உலகை வெறித்தனமாக நேசிப்பது, குறுகிய குறிக்கோள்,
அடுத்த வீட்டுக்காரனின் பசிக்கு உணவளிக்காமல் பாலஸ்தீனத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்து பேசுவது *

லட்சியம்:*காலத்தின் தேவைக்குத் தகுந்தமாதிரி உள்ளத்தால் மாறிக்கொண்டே இருப்பது,
மனிதகுலத்திற்கு பயனளிக்கும் நல்ல மரமாய் இருப்பது , என்னைப் பற்றி யார்
சிந்தித்தாலும் அவர்களின் உள்ளத்தில் நண்பனாய் முதலிடத்தில் தோன்றுவது.

*ஆசை:* சொந்தமாய் ஒரு நூலகம், மலையடிவாரத்தில் நீரோடும் நதிக்கரையில் ஒரு
குடில் , இயற்கையான உணவு, பயணச்சுமை இல்லாமல் ரயிலில் ஊர்சுற்றிவர*

விபரீத ஆசை: *தோழிக்கு முத்தம்*, *தோழனோடு* *விண்வெளியில் ஒரு மாதம், நடுக்கடலில்
ஒரு மாதம், இன்னொரு திருமணம் மற்றும் இந்தியப்பிரதமராவது !

*கவலை:* எத்தனையோ நல்ல புத்தகங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது, எப்போது
படிப்பது ?

*பிடித்த அணுகுமுறை: 1) *எல்லோர் மீதும் அன்பு, எவரிடத்தும் வெறுப்பில்லை
! 2) எந்தக்
கருத்தையும், சித்தாந்தத்தையும், முன்முடிவுகளின்றி ஆராய்ந்து அனுபவமாய் ஏற்றுக்
கொள்ளுதல்*

பிடித்த கவிதை: *இதுவரையிலும் எழுதவில்லை*

பலம்: *வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொள்வது, நட்புள்ளம், நம்பிக்கை மீது
நம்பிக்கை , என் எழுத்து எல்லோருக்கும் பிடிக்கும் என்ற பிரமை (மாயை)

*பலவீனம்: *சோம்பல், காரியத்தை தள்ளிப்போடுதல், புகைபிடித்தல் , தனிமையின்
ஆதிக்கம்*

பொழுதுபோக்கு: கற்பனை, *புத்தகம், புத்தகம், புத்தகம் , கடிதம் எழுதுதல், கவிதை
கருக்கொள்ள காத்திருப்பது, வார்த்தைக்காடுகளுக்குள் அலைவது*

நண்பர்கள்: *கடவுள் முதல் தற்போது சேதுக்கரசி வரை*

வாழ்க்கை என்பது:*வாழாதிருப்பது (தனக்கென மட்டும்)
...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Sethukkarasi  
View profile  
 More options Jun 30 2005, 2:07 pm
From: Sethukkarasi <sethukkar...@gmail.com>
Date: Thu, 30 Jun 2005 14:07:06 -0400
Local: Thurs, Jun 30 2005 2:07 pm
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

ஜோ... விக்கி ரிச்டெக்ஸ்டில் அனுப்பியதாலோ என்னவோ புகைப்படங்கள் அன்புடன்
வலைத்தளத்தில் வரவில்லை போலும். விக்கியின் இரண்டு புகைப்படங்களையும்
இங்கே இணைக்கிறேன்.

> (எந்த புகைப்படத்தில் நல்லா இருக்கேனோ அதை விக்கினு நினைச்சுகோங்க)

சூப்பராக 2 விக்கிகள் தெரிகிறார்கள்! (பக்கத்தில் ஒரு பெண்ணும் தெரிகிறாள்)

சேதுக்கரசி

On 6/29/05, Viki... <mailtov...@gmail.com> wrote:

  Viki1.jpg
8K Download

  Viki2.jpg
19K Download

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Sethukkarasi  
View profile  
(1 user)  More options Jul 1 2005, 11:26 am
From: Sethukkarasi <sethukkar...@gmail.com>
Date: Fri, 1 Jul 2005 11:26:12 -0400
Local: Fri, Jul 1 2005 11:26 am
Subject: Re: [anbudan] Anbudan aRimugam
பெயர்: சேதுக்கரசி

* சொந்த ஊர்: காரைக்குடி அருகில் ஒரு கிராமம்
* பிறந்தது: ஈரோடு
* வளர்ந்தது: விக்கி சொன்ன மாதிரி, மரியாதைக்குப் பேர் போன ஊர்...
கோயமுத்தூருங்க (5 வயதிலிருந்து)
* வசிப்பது: அமெரிக்காவில் பாஸ்டன் அருகில்
(முதல் சில வருடங்கள் பிலடெல்பியா,
சில மாதங்கள் ஆல்பகர்க்கி, நியு மெக்சிகோ மாநிலம்)

* பிறந்தநாள்: ஜூலை 15 (வருடம்: மூச்!)

* படித்தது: (எல்லாம் கோவையில்)

10வது வரை - புனித சூசையப்பர் பள்ளி
(செயிண்ட் ஜோசப் கான்வெண்ட்)

11-12வது - மணி உயர்நிலைப் பள்ளி

இரண்டே வருடங்கள் தான் அங்கே படித்திருந்தாலும் மணிப்பள்ளி அனுபவத்தைப்
பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அதற்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைய என்னை உருவாக்கியதில் மணிப்பள்ளிக்கும் ஆங்கில மற்றும் கணக்கு
ஆசிரியர்களுக்கும் பெரும்பங்குண்டு, தன்னம்பிக்கை ஊட்டி போட்டிகளில்
பங்கேற்க வைத்து வெற்றியென்றால் என்னவென்று காட்டிய பள்ளி, வீட்டில்
வாயடிப்பது ஒருபுறமிருக்க (ஹிஹி) வீட்டுக்கு வெளியே துடுக்கு என்றால்
என்னவென்று சொல்லிக்கொடுத்த சூழல் (அங்கே கற்றுக்கொண்ட துடுக்கை அந்தப்
பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடமே இரண்டு முறை காண்பித்தும் விட்டேன் ஹிஹி)
மேலும் தமிழ் மீது ஆசையை வளர்த்த தமிழாசிரியர் கிடைக்கச் செய்த அருமையான
பள்ளி

இளங்கலை - வணிகவியல்
முதுகலை - கணினி பயன்பாட்டியல்
அவினாசிலிங்கம் கல்லூரியில் ஆக மொத்தம் 6 வருடங்கள்

கோவை மத்திய சிறைச்சாலைக்கு அடுத்தபடி (விடுதிவாழ் மக்களுக்கு) ஆனால்
வணிகவியல் மற்றும் கணித்துறை ஆசிரியைகள் ரொம்பவே பரவாயில்லை அதனால்
தப்பித்தேன்!

சிறைச்சாலையிலிருந்து விடுபட்டு இடையில் 20 நாட்கள் மட்டும் முதுகலை
வணிகவியல் படிக்கப்போய் பூ.சா.கோ. கலை அறிவியல் (பி.எஸ்.ஜி.) கல்லூரியில்
லூட்டியடித்த நாட்களை நினைவுகூர்கிறேன் :-)

* வேலை:

அமெரிக்கா வந்ததும் 6 வருடங்கள் கணித்துறையில் பணியாற்றிவிட்டுத் தற்போது
வேலையிலிருந்து நீண்ட விடுப்பில் மகளுடன் ஜாலியாக(?) வீட்டில்

* கவிதை:

(ரசிகவ் அவருடைய அறிமுகத்துல எழுதிக்கிட்டாரேன்னு நானும் ஹிஹி)

சிலசமயம் புரியவில்லையென்றாலும் வாசிக்க ஆரம்பித்து 5-6
வருடங்களிருக்கலாம். இடையில் நீண்ட விடுப்புக்குப் பின் கவிதையென்று
ஒன்று இருப்பது ஞாபகம் வந்தது (அதற்கும் என் மின்னஞ்சல் நண்பர்
ஒருவருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்) ஒரு உண்மை தெரியுமா...

வாசிக்க ஓடோடி வந்தேன்
வசமாய் மாட்டிக்கொண்டேன்

(இப்ப நான் போறேன்னாலும் நீங்கல்லாம் வுடமாட்டீங்க)

முதல் கவிதை 2001ல் எழுதியது
2வது சில நாட்களுக்கு முன்பு என்னத்தையோ பத்தி
அடுத்தது வருது வருது விலகு விலகு
இனியென்ன... அம்புட்டுத்தான்

பொழுதுபோக்கு:

சமையல் (அப்டின்னு சொல்லிக்க ஆசைதான் ஹிஹி)

சிறுவயதில் அஞ்சல் ஸ்டாம்புகளும் பலவிதமான coin காசுகளும் சேமித்தேன்.
ஸ்டாம்புகளை விட்டு வெகுநாட்களாயிற்று, காசுகள் மட்டும் ஓரளவு பத்திரமாக
இருக்கின்றன.

இந்தியாவில் இருந்தவரை கொஞ்சம் புத்தகங்கள் வாசித்ததுண்டு. இங்கே வந்து
அவ்வளவாக இல்லை.

12ம் வகுப்பில் தினசரி இந்து க்ராஸ்வர்ட் பைத்தியம் பிடித்து அலைந்தேன்.
பப்ளிக் பரீட்சை நெருங்க நெருங்க செய்தித்தாளை என் கண்ணில் காட்டாமல்
ஒளித்துவைக்க ஆரம்பித்தார்கள், அவ்வளவு ஆர்வம் அப்போது.

தொலைக்காட்சியில் பிடித்த சீரியல் ப்ஃரெண்ட்ஸ் Friends, நியு யார்க்
நகர்வாழ் 6 நண்பர்களைப் பற்றி, எல்லாம் 25-30களில் ஒத்த வயதில் 3 ஆண்கள்,
3 பெண்கள், அதில் ஒரு சகோதர-சகோதரி.

இணைய நட்பு. இதைப் பொழுதுபோக்கு என்று சொன்னால் தப்பு, ஒரு வரப்பிரசாதம்
என்றே சொல்லவேண்டும். 1996ல் என் "புலிக்குழம்பு சமையல் குறிப்பு"
ஞாபகமிருக்கிறதா? அந்த நண்பர் வேணு முதல் இன்று முபாரக் வரை நல்ல இணைய
நட்பில் திளை(த்திரு)க்கிறேன்.

காரில் நெடுந்தூரம் சுற்றுவது. தெரிந்த பாதைகளிலேயே எப்போதும் போகாமல்
தெரியாத பாதைகளையும் எட்டிப் பார்த்து சுத்திக் கித்தி திசைகளின் அறிவைப்
பயன்படுத்தி எப்படியோ வீடு வந்து சேர்வது. அதில் ஒரு பயங்கர த்ரில்
எனக்கு. அப்படி அனுபவங்களில் சிலசமயம் பக் பக்கென்றிருக்கும். கேஸ்
தீரும் தருணத்தில் எங்கேயோ ஊர் தெரியாத இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பேன்.
கேஸ் நிலையத்தைப் பார்த்ததும் கடவுளைப் பார்த்த மாதிரியிருக்கும்.
சமீபத்தில் தான் பத்திரமாக இருக்கவேண்டுமென்ற safety காரணத்திற்காக
இந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முற்பட்டிருக்கிறேன்.

தற்போதைய ஆசை:

நிறைய்ய்ய்யத் தமிழ் சினிமா பார்க்கவேண்டும்... சமீபத்தில்
விட்டுப்போனதெல்லாம், பழைய ...

read more »


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
sankarS  
View profile  
 More options Jul 2 2005, 7:05 am
From: "sankarS" <sankar.sapthari...@gmail.com>
Date: Sat, 02 Jul 2005 04:05:43 -0700
Local: Sat, Jul 2 2005 7:05 am
Subject: Re: Anbudan aRimugam
சின்ன நீண்ட அறிமுகம்

பெயர் : ச.சங்கர்

பிறந்து ,வளர்ந்து படித்து
ஆளானது :
ஸ்ரீவில்லிபுத்தூர்;ராஜபாளயம்;விருதுநகர்

பிறகு குடிபெயர்ந்தது:
சென்னை (அப்போ மெட்ராஸ்)

தற்பொழுது வாசம்: புது
டெல்லி

வேலை : வாகன உதிரி பாகங்கள்
செய்யும் பன்னாட்டு
நிறுவனத்தில் மேலாளர்

இலக்கியம் சார்ந்த
வாசிப்பு : முன்பெல்லாம்
மிக மிக அதிகம்,இப்போது
மிகக் குறைவு

ஆர்வம்
:கதை,கட்டுரை,சிறுகதை,கவிதை
-எந்த தெரிந்த மொழியிலும்

தமிழில் பிடித்த
எழுத்தாளர்கள் : எழுதும்
அத்தனை பேரும்

பிடித்த படைப்புகள் :
பிரிதொரு சமயத்தில்
விரிவாய்

எழுதத் தொடங்கியது : மிக
சமீபத்தில்
என் வலைப் பதிவு :
http://ssankar.blogspot.com/

கவிதைக்கும் எனக்கும்
கொஞ்சம் தூரம் அதிகம்
-குறிப்பாக
புதுக்கவிதைகள்.

கவிதைக்கான என்
இலக்கணம்-படித்தவுடன்
புரிய வேண்டும்,
வார்தைகள் மனதில் படிய
வேண்டும்
சில நாள் கழித்து
யோசித்தாலும் வார்த்தைகள்
அல்லது
படித்ததின் நினைவு வந்து
விழ வேண்டும்

உதாரணம் 1:
காக்கைகள் கூடித்தின்னும்
யாரிடம் இந்தப் பொய்கள்
பயத்தினில் பதறும் காக்கை -
கூச்சலை அழைப்பு என்பீர்
அழைத்திடும் காக்கையேதும்
அடுத்ததை விடுவதுண்டா
அது அது தன் வாய் கொள்ளளவு
தின்றதும் பறந்து போகும்
முற்றத்தில் காக்கை
கூட்டம் முகம் காட்டிக்
கரையுதங்கே
மனிதனும் காக்கை ஜாதி
இரட்டைக்கண் ஒற்றை விழி

(நன்றி -பாலகுமாரன்  -
பச்சைவயல் மனது )

உதாரணம் 2 :

தாக்கினால் புழுக்கள்
கூடத் தரைவிட்டுத்
துள்ளும்
பருந்து தூக்கிடும் குஞ்சு
காக்கத் துடித்தெழும் கோழி
மூர்க்கமாய்த் தாக்கும்
போது முயல் கூட எதிர்த்து
நிற்க்கும்
சாக்கடைப் புழுக்களா நாம்
சரித்திரச் சக்கரங்கள்
........................................................................... ......(இது
ரொம்ப பெரிய கவிதை)
(நன்றி - இன்குலாப்)

20வருடங்களுக்கு முன்னால்
படித்தது.
மேல் உள்ள கவிதைகளில்
சொற்பிழை,வரி மாற்றம்
இருந்தால் என் குற்றம்
மட்டுமே

இவைகளைப் போல் இன்னும்
நிறைய கைவசம் உண்டு.

சமீபத்தில் ரசித்தது
ஆசாத் எழுதிய
-"இருந்திருக்கலாம்"
மற்றும்
ஞானியாரின் "தூக்கம் விற்ற
காசு" ம்
சில நாட்களுக்கு முன்
அன்புடனில் படித்தது.

அன்புடனை எனக்கு அறிமுகப்
படுத்திய மஞ்சூர் ராஜா
சுந்தருக்கு நன்றி.

மற்ற அன்புடன் தோழர் /
தோழியருக்கு hai & hello.(தமிழ்ல
என்ன சொல்ரது?)

வர்ட்டா.....

அன்புடன்....ச.சங்கர்


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
இராஜ.தியாகராஜன்  
View profile  
 More options Jul 3 2005, 10:36 am
From: "இராஜ.தியாகராஜன்" <tyaga...@gmail.com>
Date: Sun, 03 Jul 2005 07:36:17 -0700
Local: Sun, Jul 3 2005 10:36 am
Subject: Re: Anbudan aRimugam
அன்புள்ள அன்புடன் குழும
தமிழன்பர்க்கும்,
கவிஞர் புகாரி
அவர்கட்கும்,
இராஜ.தியாகராஜனின்
வணக்கம்.

எனது புனைப்பெயரும் இராஜ.
தியாகராஜன்.
தென்னிந்தியாவின்
கடைசியிலுள்ள சிறு
மாநிலமான புதுச்சேரியில்
வசிக்கிறேன். பணி:
புதுச்சேரி அரசு. படித்தது
முதுகலை பொருளாதாரம்.
காதல்: தமிழிலக்கியத்தில்,
தமிழ்மொழி ஆராய்ச்சியில்,
கணித் தமிழில்.
தமிழைக் கண்டபடி
கழுத்தறுப்பதால்,
கிழமையிதழ்களில் அதிகம்
எழுதுவதில்லை. எனது
எழுத்துக்கள் இணையத்தில்
மட்டுமே. என்னைப்
பொறுத்தவரை தமிழை இன்றைய
காலகட்டத்தில் பெருமளவில்
எண்ணியல் வடிவில்,
வரிவடிவில், மின்னிதழ்
வடிவில், களைகட்டும் படி
கட்டிக் காப்பது இணையம்
மட்டுமே. நானும் என்
பங்குக்கு, புதுச்சேரி
என்ற மின்னிதழை வாரமற்ற
தமிழ்ச்சேவையாக
நடத்திவருகின்றேன். இழை:
http://www.pudhucherry.com
நான் எழுதுவது
பெரும்பான்மையாக
மரபுப்பாக்கள் மட்டுமே.
ஆனால் பிறர் எழுதும் எல்லா
நல்ல பாக்களுக்கும்
இரசிகன்; அது
புதுப்பாக்களோ, நவீன
பாக்களோ, துளிப்பாக்களோ,
மரபுப்பாக்களோ; வடிவம்
தடையல்ல.

எந்த வடிவாயினும் ஒரு
கரைவேண்டும்,
நதியைப்போல.கரையில்லாத
நதியோர் அழிவு வடிவம்;
உயிர் தளிர்க்க முடியாது.
தளிர்ப்பு வேண்டுமெனில்,
கட்டுப்பாடு வேண்டும்.
வளர்ச்சி வேண்டுமெனில் ஒரு
ஒழுங்கு முறை வேண்டும்.
மொழி காலங்கடந்து நிற்க
வேண்டுமெனில், இலக்கண
வரைமுறை, இலக்கிய ஆழம்
இவைகள் மக்களின் மனங்களில்
பதியவேண்டும்.  நம்
தமிழுக்கு இவை
இருந்ததனாலேயே, பௌத்தம்,
சமணம், களப்பிரம், சைவம்,
வைணவம், இசுலாமியம்,
கிறித்துவம் (பிரஞ்சு,
ஆங்கிலம்), இந்த
பாதிப்புகளைத் தாண்டி
இன்றும் நிமிர்ந்து
நிற்கிறது. அந்ததந்த
மதங்கள் தமிழை வளர்க்க
எடுத்த முயற்சிகளை மட்டுமே
உறிஞ்சிக் கொண்டு, அவர்கள்
தமிழை அகற்றி வேறு மொழிகளை
பதிக்க செய்தவைகளை
நாசுக்காக புறந்தள்ளி;
அப்பப்பா, எப்படிப்பட்ட
அற்புதம்.  வெறும்
செம்மொழிப் பட்டம் மட்டுமா
தகும்?  உலகின் எந்த மொழி
இப்படிக் காலமெல்லாம்
மோதியடிக்கும் கடலலை போல
எதிர்ப்புகளை
சந்தித்திருக்கும்?

நான் படித்தது,
தமிழகத்தில் கடலூர்
கலைக்கல்லுரியில்.
கல்லூரி நாட்களில்,
பட்டுக்கோட்டை, சிற்பி
பாலசுப்ரமணியம்,
கல்யாண்ஜி, தமிழன்பன்,
மேத்தா, பேரா. பழமலய்
ஆகியோரது படைப்புகளில்
ஆர்வம்.  பின்னர் பாரதி.,
பாரதிதாசன், என்று இறங்கி,
கம்பன், புகழேந்தி,
காளமேகம் என்று
முன்னேறியபோதில், மரபுத்
தமிழ் என்னைக்
கட்டிபோட்டது; இறுக்கி
இழுத்துக் கொண்டது.
ஆயினும், தமிழைவிட ஒரு
வீணத்த விளையாட்டு
(வேறென்ன;
கிரிக்கெட்டுதாங்க: புதுவை
மாநிலத்துக்கு 13 வருடம்
விளையாடினேன்) என்னை வேறு
துறைகளில் என்னை நுழைய
விடவில்லை.  (பெர்னாட்ஷா
மிகச்சரியாய் சொன்னார்;
என்னவென்று கேட்கிறீர்களா?
தனிமடலில் கேளுங்கள்
சொல்கிறேன்; இங்கே
பொதுவில் சொன்னால் என்னை
அக்குவேறு ஆணிவேறாக
பிரித்து பிரி கட்டி
விடுவார்கள் நிறைய பேர்!)
இன்று இணையத்தில்,
கவிமாமணி இலந்தை இராமசாமி,
பேரா. பசுபதி, பேரா. அனந்த்,
இலக்கிய வித்தகர்
ஹரிகிருஷ்ணன், கவிஞர்
புகாரி ஆகியோரது
பணிகளை/படைப்புகளைப்
பார்த்த பின்னர்,
விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டி விட்டு,
முழுநேர தமிழ்ப்பணியில்
குதித்துவிட்டேன்.

நான் எழுதும் குழுமங்கள்:
அன்புடன், சந்தவசந்தம்,
மரபிலக்கியம், மரத்தடி,
உயிரெழுத்து, தமிழுலகம்,
பொன்னியின் செல்வன், ராயர்
காபி கிளப், புதுச்சேரி,
அகத்தியம், அரட்டையரங்கம்,

நான் எழுதும் இதழ்கள்:
மரத்தடி, புதுச்சேரி,
நிலாச்சாரல், தமிழோவியம்,
வார்ப்புகள்,
முத்தமிழ்மன்றம்,
திருக்குறள்,

புதுச்சேரி மின்னிதழ்ப்
பணி நெருக்கம் காரணமாக, சில
குழுமங்களில் கடந்த சில
மாதங்களாக எழுதவே
இயலவில்லை. மிகவும்
வருத்தமாகவே இருக்கிறது.
ஆயினும், எனது எழுத்து
பிறரை சென்றடைய உழைப்பதை
விட, எனைச் சுற்றி
இருக்கும் புதுவை இளம்
பாவலர்களின் எழுத்துகள்
உலகெங்கும் சென்றடைய
பாடுபடுவது மனதிற்கு
நிறைவாகவே இருக்கின்றது.
அந்தப் பாவலர்களில் சிலர்
உலகப் புகழ் பெறுவார்கள்
என்று மனதார நம்பவும்
செய்கின்றேன்.

"தோணியாய் மின்வலையிற்
றீந்தமிழர் நற்றமிழை
தானிருக்கு மண்ணிற் றகவா
யிருந்துகொண்டே
ஏணியென தன்னியல்பா யேத்து
மெழிலென்றும்
காணுதல் நெஞ்சுக் கிதம்!"

தமிழ் மீதான காதலால், சற்று
அதிகமாகவே இழையை
நீட்டிவிட்டேன்.
நீங்களும் இந்த தவறை
தமிழுக்காகவே
பொறுத்தருள்க. எனது
புகைப்படத்தின் இழை:
http://www.pudhucherry.com/pics/tyag.jpg (or)
http://www.pudhucherry.com/pages/self.html

அன்புடன்
இராஜ. தியாகராஜன்.


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Jayamaruthi RAMA  
View profile  
 More options Jul 5 2005, 11:56 pm
From: "Jayamaruthi RAMA" <positiver...@gmail.com>
Date: Tue, 05 Jul 2005 20:56:11 -0700
Local: Tues, Jul 5 2005 11:56 pm
Subject: Re: Anbudan aRimugam
(எல்லாரும் அவங்க அவங்க
அறிமுகத்தை தந்து
கலக்கிட்டீங்க.
இன்றைக்கு நான் தருகிறேன்.
முன்ன மாதிரி இப்போ எனக்கு
அதிக நேரம் குழுமத்தில்
செலவு பண்ண முடியவில்லை.
வேலைப்பளுதாங்கோ..)

இயற்பெயர்: நம்ம பெங்களூர்
ராம் சொன்னதுங்கோ!

புனைப்பெயர்: பாஸிடிவ்
ராமா

அன்புடனுக்காக: ஜெயமாருதி
ராமா

பிறந்தநாள்: நாள் மாதம்
வருஷம் எல்லாமே 7ங்கோ!(அதான்
நீங்களெல்லாம் வாழ்த்து
சொல்லி என்னை அசர
வைத்துட்டீங்களே)

பிறந்தது  : நாஞ்சில் நாடு
(நாகர்கோவில்)

வளர்ந்தது :
திருச்செந்தூர் - உடன்குடி
(பள்ளிப் பருவமும் அங்கேயே)

கல்லூரி     :
திருவண்ணாமலை(அருணை
பொறியியல் கல்லூரி)

பொழப்புக்கு : சென்னை

அன்னை: திருமதி. ஆறுமுக ஜோதி

எந்தை: புலவர் கா.
பரமார்த்தலிங்கம்
M.A.,B.Ed.,(ஆசிரியர்)

குருநாதர்: ஸ்ரீமத்
மருதிதாஸ சுவாமிகள்.

தம்பி: கோவை மருத்துவக்
கல்லூரியில் பயில்கிறான்.

திருமணம்: இப்ப தி.பி
தாங்கோ!

மனைவி: இறைவன் எனக்கு
கொடுத்த வரம்.

வேலை: பிரபல நிறுவனத்தில்
Training& Development பிரிவில்.

பிடித்தது: அன்புடன்,
சித்தம், நம்பிக்கை
குழுமத்தில் நேரத்தை
செலவிடுவது,

ஆச்சரியப்படுவது:
வலையுளாவியின் பயனால்
எனக்கு இத்துணை நண்பர்களா!

என்னையே மறப்பது:
ஆன்மீகத்தில், எனது ஆளுமை
பயிற்சி வகுப்புகளில்.

(இன்னும் எழுத ஆசை இதோ வந்து
விட்டது முக்கிய அழைப்பு
என் M.Dயிடம் இருந்து.


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Syed Ali  
View profile  
 More options Jul 15 2005, 7:01 am
From: Syed Ali <jsyed...@gmail.com>
Date: Fri, 15 Jul 2005 16:31:43 +0530
Local: Fri, Jul 15 2005 7:01 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam

அன்புடன் அறிமுகம் இழை தொடங்கி ரொம்ப நாள் ஆச்சு! ஆனா எனக்கு இப்போ தாங்க என்னை
அறிமுகப்படுத்த நேரம் கிடைத்தது. மன்னிச்சுக்கோங்க…

பெயர்: ஜே.செய்யதலி (A.N.J.Syed Ali)

செல்லப் பெயர்கள்: தென்காசியான், ANJ

பிறந்த தேதி: 13.03.1979

சொந்த ஊர்: தென்காசி (குளு குளு குற்றாலத்திலிருந்து 5கிமி)

தற்போது வசிப்பது: தண்ணி இல்லாத காடு! (அதாங்க சென்னையில்). அட சென்னை
வா(நே)சிகள் மன்னிச்சுடுங்கப்பா தென்காசி சாரல்லயும் குற்றால தூரல்லயும்
வளர்ந்துட்டதால தான் இப்பிடி ஒரு மனநிலை…

படித்தது: பள்ளி வாழ்க்கை முழுவதும் தென்காசியில். கல்லூரி நெல்லை
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பி.எஸ்.சி கணிதவியல் (அதாங்க ஞானியாரின் வகுப்புத்
தோழன் தான்ங்க! 1996-1999)

கல்லூரி காலச் சாதனை: ஞானியார் கவிஞனாகியதில் சிறு பங்கு உண்டு எனக்கு! (லே
ஞானி சரி தானே…)

படித்து கொண்டிருப்பது: MFT - Master of Foriegn Trade (தமிழ்ல தெரியலப்பா…)

வேலை மற்றும் தொழில்: இணையதள வடிவமைப்பாளர் (Web Designer)

இணையதள முகவரிகள்: www.4creativeweb.com <http://www.4creativeweb.com> &
www.geocities.com/jsyedali99 <http://www.geocities.com/jsyedali99>

காதல் பற்றி: காதல் திரைப்படத்தில் ஒரு பாடலில் சொல்லப்பட்டது போல் உலகத்தில்
உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்லப்பெயர் வைத்தால் - காதல்!

தற்போது பிடித்த பாடல்: நினைத்து நினைத்துப் பார்த்தேன்…(7பு ரெயின்போ காலனி)

பிடித்தது: தனிமை தாங்க ரொம்ப பிடிக்கும்

வேற எதுவும் சொல்லனும்னா கேளுங்க… சொல்றேன்!

regards
J.Syed Ali
www.4creativeweb.com <http://www.4creativeweb.com>
www.geocities.com/jsyedali99 <http://www.geocities.com/jsyedali99>

On 7/6/05, Jayamaruthi RAMA <positiver...@gmail.com> wrote:


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
sankar  
View profile  
 More options Jul 22 2005, 8:54 pm
From: "sankar" <sanka...@gmail.com>
Date: Sat, 23 Jul 2005 00:54:53 -0000
Local: Fri, Jul 22 2005 8:54 pm
Subject: Re: Anbudan aRimugam
அன்புடன் குழுவிற்க்கு,
எனது அறிமுகத்தை இந்த
மடலில் அனுப்புகிறேன்...

பெயர்: சங்கரன்
சோமசுந்தரம்.
பிறந்த ஊர்,வளர்நத ஊர்:
அல்வா நகரம்...,தாமிரபரனி
தவழும்..நெல்லுக்கு
வேலியிட்ட, பெருமைமிகு
மாநகரம்...திருநெல்வேலி(மஹாராஜ
நகர்)
படித்தது: B.E(தகவல்
தொழில்நுட்பம்.)
படித்துக் கொண்டிருப்பது: MS
in MIS (Management Information Systems) தமிழில்
என்ன?? தெரிந்தவர்கள் தயவு
செய்து சொல்லவும்
பள்ளி - புஷ்பலதா
மேல்நிலைப் பள்ளி,
சிவந்திப்பட்டி ரோடு,
தியகராஜநகர். ( யு.கே.ஜி
முதல் 12 வரை...)

கல்லூரி: ஸ்ரீ
ராமக்கிருஷ்ணா பொறியியல்
கல்லூரி, கோயம்புத்தூர். ( SREC)
( 99 -2003) ...(ஏலே.! வில்
இருந்து...ஏனுங்க வரை..)

முதுகலை: டெம்பில்
பல்கழைக்கழகம்,பிலடெல்பியா,அமெரிக்கா......(2004-
தற்சமயம் வரை)

உடன்பிறந்தவர்கள்: ஒரு
இளைய சகோதரன் ( அவர் கூட
நல்லா எழுதுவார்)

பிறந்த தேதி: ஜூன் 7 1982.

நண்பர்கள் என்னை
கூப்பிடுவது:
அடேய்..குண்டுப் பன்னி,
குண்டா டேய், சங்கரா...
(எனது யாஹூ I.D(தமிழில்??)
kunda...@yahoo.com)

எனக்கு நானே வைத்த பெயர்:
தமிழ்ப்பிரியன்.

ஆசை: நிறைய
கத்துக்கனும்ன்னு
ஆசை...உலகம்
சுத்தனும்ன்னும் ஆசை...
தற்போது தெரிந்த மொழிகள்:
தமிழ், ஆங்கிலம்
தவிற...தெலுங்கு,
ஹிந்தி,மலயாளம்
புரியும்..கொஞ்சம் தான்
பேசுவேன்...ஸ்பானிஷ்
கொஞ்சம் வாசிப்பேன்...
(ஒரு நாள் இல்ல ஒரு நாள்
எல்லாத்தயும் நல்லா தமிழ்
மாதிரி பேசனும்....கஷ்டமான
ஒரு இலக்கு)

பிடித்த கணீப்பொறி
விளையாட்டுக்கள்:
minesweeper,nfs5,mafia,maxpayne...(மன்னிக்கவும்..தமிழில்
எழுதாமைக்கு)...

இது இப்போதைக்கு
போதும்ன்னு நினைக்கிறேன்...

-தமிழ்ப்பிரியன்(அ) சங்கர்.


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Prasath  
View profile  
 More options Jul 23 2005, 2:30 am
From: "Prasath" <vrvpras...@gmail.com>
Date: Sat, 23 Jul 2005 06:30:02 -0000
Local: Sat, Jul 23 2005 2:30 am
Subject: Re: Anbudan aRimugam
பெயார்                      : விமல்பிரசாத்

பிறந்த தேதி         : 11.02.1984
(தைத்திங்கள் 28ம் நாள் ?)

பிறந்த ஊர்            :  சேயாறு (எ)
திருவோதூர் (எ) செய்யாறு -
திருவண்ணாமலை மா.
                          (திருஞனசம்பந்தரின்
பாடலின் மூலம் ஆண்பனை
பெண்பனையாகிய இடம்)

தற்பொழுது வசிப்பது    :
சிறந்த பொழுதுபோக்கு நகரம்
(சென்னை)

படிப்பு                   : இளங்கலை
அறிவியல் (கணினி அறிவியல்) -
ஆங்கிலவழி .
                          இடம் : செய்யாறு. (1 முதல் -
கல்லூரி வரை)

படித்துக்கொண்டிருப்பது      :
முதுகலை கணினி பயன்பாடு (M.C.A)
                         சென்னை பல்கலைக்கழகம் -
அஞ்சல் வழி .

வேலை                    : Programmer, Web Designer, Graphic Designer
                         (தமிழில் ? - இணய பக்க
வடிவமைப்பாளர்- ???)

அடுத்து ? - கேளுங்க செல்ரன்
............


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
SanJaY......சஞ்சய் காந்தி.....GanDhi  
View profile  
 More options Aug 17 2005, 1:37 am
From: "SanJaY......சஞ்சய் காந்தி.....GanDhi" <tamilatam...@gmail.com>
Date: Tue, 16 Aug 2005 22:37:52 -0700
Local: Wed, Aug 17 2005 1:37 am
Subject: Re: Anbudan aRimugam
வணக்கம் நண்பர்களே..

அதியமான் மண்ணின் மைந்தன்.(
Dharmapuri)
பெயர் : சஞ்சய் காந்தி.
பிறந்தது
தம்பிசெட்டிபட்டியில்
பிரபல TV பெட்டி தயாரிப்பு
நிறுவனதின் விற்பனை பிரதி
நிதி.
அலுவலகம் : ஈரோடு.
பணி இடம்: தருமபுரி,
கிரிஷ்னகிரி , நாமக்கல் ,
ஈரோடு மாவட்டங்கள் .
 பிறந்த தேதி : 07-09- ?


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கணேஷ்-குவைத்.  
View profile  
 More options Sep 28 2005, 3:26 am
From: "கணேஷ்-குவைத்." <enngan...@gmail.com>
Date: Wed, 28 Sep 2005 07:26:30 -0000
Local: Wed, Sep 28 2005 3:26 am
Subject: Re: Anbudan aRimugam
அன்புடையீர்,
நான் ந.கணேஷ்,வயது
27,திருமணம்
ஆகவில்லை[http://www.shaadi.com/partner_search/matrimonial_search/profile.php?p...]

அப்புரம் என்ன மென்பொருள்
பொறியாளர்,டியார் யுனைடெட்

கம்ப்பனி,குவைத்.சொந்த ஊர்
வந்து கோயமுத்தூர்ல
ஒலிம்பஸ். படிச்சது
முதுகலை கணிப்பொறி
அறிவியல்(MCA)-IGNOU,
இளநிலை கணிப்பொறி
அறிவியல்(BSc)-VLB,கோவை,
சர்வஜன மேல்நிலை
பள்ளி,கோவை.
மிகபிடித்தது என்னுடைய
அம்மா.பிடித்தது
நண்பர்கள்,கொஞ்சம்
பிடித்தது சகோ,பிடிக்காதது

காதல்...

நட்புடன்,
அன்புடன்க்காக கணேஷ்


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
ஜெஸிலா  
View profile  
 More options Sep 29 2005, 12:43 am
From: "ஜெஸிலா" <sjaze...@gmail.com>
Date: Thu, 29 Sep 2005 04:43:14 -0000
Local: Thurs, Sep 29 2005 12:43 am
Subject: Re: Anbudan aRimugam
என்னைப் பற்றி

"உன்னப்பத்தி யாருக்
கேட்டா. வந்துட்டா.." (என்று
பலர் முனுமுனுப்பது காதில்
தெளிவாக கேட்கிறது).

அறிமுகமே இல்லாமல்
திடீரென்று குதித்து பல
இழைகளில் மூக்கை
நுழைத்திருக்கிறேன். இதுவே
பெரிய அறிமுகம் தான் ;)

குப்பியை திறந்தவுடன் நல்ல
வாசனை திரவமாக இருந்தால்
நாசியையும், மனதையும்
சென்றடையும்
முகரத்தேவையில்லை.
'அன்புடனும்' அப்படித்தான்,
என்னை இங்கு இழுத்து வந்து
கட்டிப்போட்டுவிட்டது
என்று சொன்னால்
மிகையாகாது.

தேநீர், குழம்பி, தூக்கம்,
புகை, மது என்று எதற்கும்
அடிமைப்படாத நான்
இணையத்தில் என்னை
தொலைத்தது மட்டுமல்லாமல்
என் நேரத்தையும்
தொலைக்கிறேன். அதற்காக இது
என் பொழுதுபோக்கு என்று
நினைக்க வேண்டாம், இது என்
உயிர்மூச்சு. பெரும்பாலும்
என் கணவருடன் வாக்குவாதம்
வருவதற்கும் இந்த இணையமே
காரணம் ;-)

சரி, அறுக்காமல் சுருங்க
சொல்கிறேன் என்னைப் பற்றி.

பெயர்: ஜெஸிலா பானு
(திருமணத்திற்கு பின்
கணவர் பெயரை இணைத்துக்
கொண்டேன்.- ஜெஸிலா ரியாஸ்)

பிறந்த தேதி: மகாத்மா
காந்திஜீ பிறந்த மாதம்.
வாரத்தில் எத்தனை நாட்களோ
அதனைக் கூட்டுத்தொகையாக
கொண்டது அந்த தேதி
(பத்துக்கும் இருபதற்கும்
இடைப்பட்டது). வருடத்தை
குழப்ப வேண்டாமே, நான் என்ன
நடிகையா மறைப்பதற்கு 1977.

பிறந்தது, வளர்ந்தது,
படித்தது எல்லாமே
சென்னையில்.
பத்திரிக்கையாளர்கள்
குடியிருப்பு,
கொட்டிவாக்கத்தில்
குடியேறும் முன்பு
இராயப்பேட்டை பீட்டர்ஸ்
காலனியில்தான் இருந்தோம்.

சென்னையில் கதிரவன்
பத்திரிகையில்
வேலைப்பார்த்துக்
கொண்டிருந்தேன்.
கொட்டிவாக்கத்திற்கு
மாறியவுடன் தரமணியில் உள்ள
எம்.எஸ். சுவாமிநாதன்
ஆராய்ச்சி நிறுவனத்தில்
வேலைப்பார்த்துக்
கொண்டிருக்கும் போது 1997
இறுதியில் துபாய்க்கு
வந்துவிட்டேன். துபாய்
எனக்கு மிகவும் பிடித்த
இடமாகி போகவே அப்படியே
தங்கிவிட்டேன்.

திருமணம்: 2000 ஜூலை மாதம்
நடந்தது. கணவர் பெயர்
ரியாஸ் அகமது (அவருக்கு
உடன்குடி)

குழந்தை: ஒரு மகள் ஒன்றரை
வயது. ஃபாதின் ஜுமானா.

பிடித்தது: இயற்கை, இணையம்,
புத்தகம், சுற்றம், நட்பு,
எல்லாமே.

பிடிக்காதது:
புறம்பேசுதல், பொய்
பேசுதல், தலைக்கனம், பெருமை,
பொறாமை.

நம்புவது: இறைவனை

நம்பாதது: என்னை ;-)

நேசிப்பது: தமிழ் மொழி

இரசிப்பது: அழகான நல்ல
பாகுபாடுடைய கவிதைகளை

ஆர்வம்: கவிதை, கதை, ஓவியம்,
நல்ல படைப்புக்கள்.

உயிர்: இணையம், புத்தகம்,
தொலைக்காட்சி, தொலைப்பேசி
(இது நான்கும் இருந்தாலே
வாழ்க்கையை சந்தோஷமாக
தள்ளிவிடுவேன் ;) )

தற்போது ஒரு தனியார்
நிறுவனத்தில் துபாயில்
பணியாற்றி வருகிறேன்.

ஒரு வருடம் வின் டி.வி.யில்
வளைகுடா நேரத்தில்
டெலிகுவிஸின் குவிஸ்
மாஸ்டராக
இருந்திருக்கிறேன்.
மற்றப்படி
சொல்லிக்கொள்ளும்
அளவுக்கு எதுவும் இல்லை.

என்றும் அன்புடன்
ஜெஸிலா ரியாஸ்


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Buhari A  
View profile  
 More options Sep 29 2005, 2:42 pm
From: Buhari A <buh...@gmail.com>
Date: Thu, 29 Sep 2005 14:42:37 -0400
Local: Thurs, Sep 29 2005 2:42 pm
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam
அன்புள்ள ஜெஸிலா,

> "உன்னப்பத்தி யாருக்
> கேட்டா. வந்துட்டா.." (என்று
> பலர் முனுமுனுப்பது காதில்
> தெளிவாக கேட்கிறது).

மருத்துவமனை அருகே என்றால் உடனே சேர்ந்துவிடுங்கள். தூரமென்றால், இப்போதே
கால் நடையாய்ப் புறப்பட்டுவிடுங்கள் :)

> அறிமுகமே இல்லாமல்
> திடீரென்று குதித்து பல
> இழைகளில் மூக்கை
> நுழைத்திருக்கிறேன். இதுவே
> பெரிய அறிமுகம் தான் ;)

அன்புடனின் அனைத்து இழைகளிலும் சுறுசுறுப்பாய் மூக்கை நுழைப்பவர்களையே
அன்புடன் வரவேற்கிறது.

மூக்கு நறுக்கும் கத்தரிக்கோல்களுடன் சில மடல்கள் விழக்கூடும்.
இருப்பினும் அவை உண்மையான கத்தரிக்கோல்கள் அல்ல சுவாரஸ்யம் தேடும் தூண்டு
கோல்கள் என்றே கொள்க.

> குப்பியை திறந்தவுடன் நல்ல
> வாசனை திரவமாக இருந்தால்
> நாசியையும், மனதையும்
> சென்றடையும்
> முகரத்தேவையில்லை.
> 'அன்புடனும்' அப்படித்தான்,
> என்னை இங்கு இழுத்து வந்து
> கட்டிப்போட்டுவிட்டது
> என்று சொன்னால்
> மிகையாகாது.

அன்புடன் நாணமுடன் கொஞ்சம் நெளிகிறது. நன்றி சொல்கிறது. உங்களால் அது
மேலும் பலரையும் இழுக்கும் குழுவாய் அமையும் என்று நம்புகிறது.

> தேநீர், குழம்பி, தூக்கம்,
> புகை, மது என்று எதற்கும்
> அடிமைப்படாத நான்
> இணையத்தில் என்னை
> தொலைத்தது மட்டுமல்லாமல்
> என் நேரத்தையும்
> தொலைக்கிறேன். அதற்காக இது
> என் பொழுதுபோக்கு என்று
> நினைக்க வேண்டாம், இது என்
> உயிர்மூச்சு.

இதில் அன்புடன் அன்பர்கள் அனைவரும் ஒத்துப் போவார்கள் என்று
நம்புகின்றேன். வேண்டுமானால் தேனீர், குழம்பிய காப்பி, தூக்கம், மது,
புகை, பகை இதிலெல்லாம் அடிமைப்பட்டபின் அன்புடனுக்குள் வாருங்கள்.
எல்லாம் மறப்பீர்கள் எதையும் துறப்பீர்கள் என்பது உறுதி.

பாருங்களேன் நாளை மறுநாள் புத்தக வெளியீட்டை வைத்துக்கொண்டு, இங்கே மடல்
எழுத வந்துவிட்டேன்.

பெரும்பாலும்

> என் கணவருடன் வாக்குவாதம்
> வருவதற்கும் இந்த இணையமே
> காரணம் ;-)

அப்போ உயிர்மூச்சுதான் :) அன்புடன் கற்றுத்தரும் வாக்குவாதங்களில் எப்படி
வெல்வது என்று. உங்கள் கணவருக்கு மேலும் பிரச்சினை காத்திருக்கிறது :)

அவரையும் சேர்த்துவிட்டுவிடுங்கள். விவாதம் நிகரானவர்களோடு நடத்தும்
நிறைவு கிடைக்கும் :)

தோழி ஜரினா ஒரு வார்த்தை சொன்னால், ராஜேஷை நிலைக்கண்ணாடியிலும் தெரிவதில்லை :)

வாழ்க அன்புடன் :)

> பிறந்த தேதி: மகாத்மா
> காந்திஜீ பிறந்த மாதம்.
> வாரத்தில் எத்தனை நாட்களோ
> அதனைக் கூட்டுத்தொகையாக
> கொண்டது அந்த தேதி
> (பத்துக்கும் இருபதற்கும்
> இடைப்பட்டது). வருடத்தை
> குழப்ப வேண்டாமே, நான் என்ன
> நடிகையா மறைப்பதற்கு 1977.

பாதி நடிகை :)

ராமானுஜம் வேலையெல்லாம் காட்டாமல், பிறந்த தேதி மாதம் சொன்னால் இங்கே
பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவியும்.

வருடம் அவசியமில்லை. பெண்கள் சொல்லமாட்டார்கள்.  நீங்கள்
சொல்லிவிட்டீர்கள். எனவே அது 1967 ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
:)

> பத்திரிக்கையாளர்கள்
> குடியிருப்பு,

அட நம்ம மாலன் அங்கேதான் இருக்கார் :)

> கொண்டிருக்கும் போது 1997
> இறுதியில் துபாய்க்கு
> வந்துவிட்டேன். துபாய்

திருமணத்திறுகு முன்பே துபாயா? வெகுசிலரே இப்படி என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள். உங்கள் பெற்றோர் சிறப்பானவர்கள் என்பதற்கோர் சான்று.

> குழந்தை: ஒரு மகள் ஒன்றரை
> வயது. ஃபாதின் ஜுமானா.

இந்தக் கட்டங்கள் எல்லாம் என்ன? மகள் உலகைக் காண அமைத்த சாளரங்களா?

> நம்பாதது: என்னை ;-)

மேலே சொன்னதெல்லாம் நிஜம்தானுங்களே :)

> உயிர்: இணையம், புத்தகம்,
> தொலைக்காட்சி, தொலைப்பேசி
> (இது நான்கும் இருந்தாலே
> வாழ்க்கையை சந்தோஷமாக
> தள்ளிவிடுவேன் ;) )

இதில் இணையமும் தொலைபேசியும் தொடர்பு சாதனங்கள்
தொலைக்காட்சியும் புத்தகமும் தனி ஆவர்த்தனங்கள்

இரு தளங்களிலும் இனிமை காண்பதென்பது வரமல்லவா? பிறகு ஏன் தள்ளிவிடுவேன்
என்று ஏனோதானோ வார்த்தைகள்?

இந்த நான்குமே மறுமுனையின் இருப்பவர் நமக்கு எத்தனை சுவாரசியமானவர்
என்பதைப் பொறுத்தது :)

> ஒரு வருடம் வின் டி.வி.யில்
> வளைகுடா நேரத்தில்
> டெலிகுவிஸின் குவிஸ்
> மாஸ்டராக
> இருந்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள் ஜெஸிலா. அதென்ன வின் டிவி?

அன்புடனுக்கு வருக வருக என்று அன்புடன் அழைக்கிறோம்

அன்புடன் புகாரி


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
JAZEELA BANU  
View profile  
 More options Sep 30 2005, 7:52 am
From: JAZEELA BANU <sjaze...@gmail.com>
Date: Fri, 30 Sep 2005 15:52:29 +0400
Local: Fri, Sep 30 2005 7:52 am
Subject: Re: [anbudan] Re: Anbudan aRimugam