அன்பின் நண்பர்களே...
நான் இந்த பாடலை நேற்று கேட்டேன்... எனது மனதை மிகவும் தொட்டு விட்டது
இவ்வரிகள்... நீங்களும் இரசிப்பீர்கள் என்று இதோ உங்களுக்காக...
கற்பாம் மானமாம் ஹே
கண்ணகியாம் சீதையாம்
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
கம்பனுக்கு சொல்லுங்கள் இதை கவிதை எழுதுவான்
அந்த வள்ளுவனை கூப்பிடுங்கள் வாழ்த்து பாடுவான்
கம்பனுக்கு சொல்லுங்கள் இதை கவிதை எழுதுவான்
அந்த வள்ளுவனை கூப்பிடுங்கள் வாழ்த்து பாடுவான்
அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய்
இவள் பெயரோ அகலிகை இருவது ரூபாய்
பத்தினிகள் பேரை வைத்து பரத்தையரை வளர்த்துவிடும் பாவிகள் பூமி
கற்பை பாருங்கள் சாமி..
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
மனமறிந்து தவறு செய்வோர் மாளிகையில் இல்லையோ
புது மலர்களுக்கு ஆளனுப்பும் மன்னவர்கள் இல்லையோ
வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கு தான் தண்டனை
வழுக்கிவிழும் பெண்களுக்கு சட்டத்திலும் வஞ்சனை
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
குணமிருந்தும் தவறு செய்வாள் குழந்தைக்காக ஒருத்தி
இந்த கொடுமை செய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க ஒருத்தி
படித்திருந்தும் வேலையின்றி பள்ளிகொண்டாள் ஒருத்தி
திரைப்படத் தொழிலில் ஆசை வைத்து பலியானாள் ஒருத்தி
தாய்மொழியாம் தாய் நாடாம் தாய்மையெனும் பண்பாம்
இங்கு சத்தியமாம் தத்துவமாம் தர்மமென்னும் ஒன்றாம்
கண்ணீரில் மிதக்குதய்யா கற்பு என்னும் ஓடம்
கண்ணீரில் மிதக்குதய்யா கற்பு என்னும் ஓடம்
இது கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் ஏன் கடவுளுக்கும் பாடம்
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
அய்யோ பாவம்… அய்யோ.. பாவம்…..