பூஸூந்தர்

5 views
Skip to first unread message

amritha varshini

unread,
Dec 3, 2014, 8:19:22 PM12/3/14
to amrith...@googlegroups.com
From: uma kbs <uma...@yahoo.com>
Date: 2014-12-03 23:28 GMT+05:30
Subject: bhusunthar
To: "amrithava...@gmail.com" <amrithava...@gmail.com>


                             பூஸூந்தர்
 
அன்புள்ள, நல்ல மனமுள்ள காகம். பற்பல ஆண்டுகள் வாழ்ந்தது. ஒரு முறை வசிஷ்டர் தேவலோகம் செல்ல, அங்கே மேருவின் அருகிலுள்ள கற்பக வ்ருக்ஷத்தில் அந்தக் காகத்தைக் கண்டார். அது இவரை அறிந்து குசலம் விசாரிக்க,அவர் உனக்கு பழையவைகள் ஞாபகமிருக்கிறதா ?’ எனக் கேட்டார்
உடனே அது கூறத் தொடங்கியது :--- 
இது  சிவபெருமான்  வசிக்கும் இடமாகும்  இங்கே பல சிவ கணங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றிற்கு தலையில் கொம்பு,  கொம்பில் கைகள், வயிற்றில் முகம், மேலும் பல மிருகங்களின் ஜாடையுடன் கூடியவர்கள்   போன்றவைகள் உள்ளனர். இவர்களைத் தவிர மாத்ருக்கள் என்ற பெண்களும் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்
ஜயா, விஜயா, ஜயந்தி, அபராஹிதா, ஸித்தா, ரக்தா,ஆலம்பூசா, உல்பலா.போன்றவர்கள் ஆவர்.     ஒரு முறை ஆலம்பூஸாவின் வாஹனமான  சந்தா என்ற காகம்., தேவிகள் கூடி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது  , அவர்களின் வாஹனங்களுடன்  சேர்ந்து விளையாடின. அச்சமயம். சந்தா என்ற காகம்  ப்ரமிதேவியின் வாஹனங்களான அன்னங்களுடன் கூடி விளையாட,  அன்னங்கள்  யாவும் கருவுற்றன. அதனால்  21 காகங்கள் பிறந்தன. பெற்றோரின் ஆணைப்படி நாங்கள்  இம்மரத்திலேயே வாழ்ந்தோம்.  எனது 20 சகோதரர்கள் சிவ லோகம் சென்றனர். நானும் உங்களைக் கண்டதும் உலக வாழ்க்கையிலிருந்து  விடுபட்டேன். ஆனால் நான் பல யுகங்களைக் கண்டுள்ளேன்.முதலில் உலகில் வெறும் பாறைகள் தான் இருந்தன. பிறகு தான் மலைகள், செடிகள், காடுகள் போன்றவைகள் உருவாயின. பெருவெள்ளத்திற்கு பிறகு கடல்கள்  தோன்றின. ஒரு சதுர்யுகம் கழித்து காடுகள் உருவாயின. நான் 12 முறை பாற்கடல் கடைவதைப் பார்த்துள்ளேன். ஹிரண்யாக்ஷன் 3 முறை உலகை பாதாளத்திற்கு எடுத்துச் செல்வதைப் பார்த்துள்ளேன். ஆறு முறை ராமன் அவதாரம் செய்துள்ளான்  ஆறு கலியுகத்தில் புத்தர் அவதரித்துள்ளார். திரிபுரதஹனம் 30  முறை நடந்துள்ளது. தக்ஷனின் யாகம் இரு முறை கலைக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன். கிருஷ்ணன் சிவனுடன் ஏழு முறை பாணத்திற்காகப்  போரிட்டதைப் பார்த்துள்ளேன். சிவன் பத்து இந்திரர்களை அழித்துள்ளார். ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தைப் பார்த்துள்ளேன். கலியில் அந்தணர்கள் குடித்து அழிவர். வசிஷ்டராகிய நீர் ப்ரம்மாவிற்கு 18வது முறையாக பிறந்துள்ளீர். (ஞான வசிஷ்ட--பூஸுண்ட உபாக்யானம்).என்று தன் ஞாபக சக்தியை நிரூபித்து யுகம் யுகமாக நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறிற்று

உமாபாலசுப்ரமணியன்


Reply all
Reply to author
Forward
0 new messages