கவிஞர் இனியன் (கரூர்) பாடிய திருத்தசாங்கம்

124 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 23, 2021, 9:52:44 AM8/23/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

பொள்ளாச்சி நா. கணேசனார் திருத்தசாங்கம்

  கவிஞர் இனியன், வஞ்சி மாநகர்(கரூர்)
          பத்து வெண்பாக்கள்

           துச்சில்: அமெரிக்கா
          திருவோணத் திருநாள்
                     (21.8.21)

             நாமம்
அமெரிக்க விண்வெளி ஆய்வகம் நாசா
அறிவிய லாளர் அறிஞர்- அறிவர்
கணேசன் அவர்கள் கணினித் தமிழில்
கணித்தார்  எழுத்துரு கண்டு.

              நாடு
காரணம் கண்டு கருத்துடன் ஆய்வதில்
வாரணம் ஒத்த வலியுடையார்- தாரகையே
ஊரகப் பின்புலம் உள்ளவர் அன்னார்க்குப்
பாரத நாடு பகர்.

               நகர்
காவியம் கற்றுக் கவியுளம் காட்டிடும்
நாவினர் வாழ்ந்த நகரெதுகொல் –மேவிய
தெங்கு மரஞ்சூழ தென்றல் தவழ்ந்துவரும்
கொங்கிளம் பொள்ளாச்சி யாம்.

               ஆறு
எத்திக்கும் பேர்பரவி ஏத்தும் புகழுடையார்
சொத்தாய்த் திகழும் சொரிமுத்து- முத்தமிழே!
ஊழி பெயரினும் ஊற்றுப் பெருக்கெடுக்கும்
ஆழியா(று) என்பதே ஆறு.

               மலை
இட்டுரைக் காமல் இருப்பதை ஆராய்ந்து
கட்டுரை யாக்கும் கருத்துடையார்- சிட்டே!
நமதருமைப் பேரறிஞர் நாட்டுபுகழ் எல்லாம்
இமய மலைக்கே இணை.

               ஊர்தி
விரும்பி எழுதி விதைத்திடும் வித்தே
திரும்பி வளரும் தருவாய்; - சுரும்பே!
அறிவிய லாளர் அமைத்திட்ட ஊர்தி
அறிவே எனநீ அறி.

                 படை
தண்டமிழ் ஆய்வில் தமக்கிணை இல்லாதார்
விண்வெளி ஆய்விலும் வித்தகர்- வண்டே!
முடிவில்லா ஆய்வில் முகிழ்க்கும் கருத்தைப்
படிப்பவர் எல்லாம் படை

                  முரசு
வித்தாய்த் திகழும் வியன்குறள் நூலினை
நித்தமும் ஆய்ந்திடும் நீர்மையர்- தத்தையே!
முத்தான சொத்து முழுதாய் நிறைந்துள்ள
முத்தமிழே கொட்டும் முரசு.

                   தார்
வேர்ச்சொல் அறிந்து விளங்குமா(று) ஆய்ந்ததை
ஊர்க்கெலாம் சென்றே உரைப்பவர்- கார்முகிலே!
வேர்ச்சொல் மலர்களால் வேய்ந்தநல் மாலையை
மார்பில் அணிவார் மகிழ்ந்து.

                   கொடி
செப்பேடு கல்வெட்டில் சீர்மிகு ஆய்வாளர்
முப்போதும் சிந்தனை முன்வைப்பார்- அப்பால்
பகர வருவார் பணிவுடன் கையில்
மகர விடங்கர்க் கொடி.

குறிப்பு: அறிஞர் நா.கணேசன் அவர்கள் என் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் வசிக்கும் என் மகளின் இல்லத்திற்கு வருகை நல்கியபோது ஆர்வலர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து அளிக்கப்பெற்றது.
 

N. Ganesan

unread,
Aug 23, 2021, 5:33:06 PM8/23/21
to housto...@googlegroups.com, vallamai
அருங்கலைஞர் எனது நண்பர் நா.கணேசனது திறம் பாடும் நற்கவிதை தீட்டிய கவிஞர் இனியன் அவர்கட்கும், கவிதைத்தலைவன் கணேசன் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

ராமலிங்கம் ராஜா (நாமக்கல் கவிஞர் மகன்)

On Mon, Aug 23, 2021 at 10:51 AM Shanmuga ananth <ananth....@gmail.com> wrote:
வண்ணங்களின் கூட்டு வெண்மை; நாமம், நாடு, நகரென்று பல வண்ணத்தில் வெண்பா கூட்டி முதன் முதலில் வீட்டிற்கு வருவோர்க்கு இனிப்பை தரும் வழமை மாறாது இனியன் ஐயா அவர்கள் பாட்டாலேயே இனிப்பை படைத்து விட்டாr போலும்... பாட்டுடைத் தலைவன் ஐயா கணேசனார் அவர்களுக்கு வணக்கம்... வாழ்த்துக்கள்...

அன்புடன்,
சண்முகானந்தம்

திருச்சி புலவர் இராமமூர்த்தி:
> அருமை! இத்தகைய வரவேற்பை எவரும் அளித்ததில்லை!
> யாரும் பெற்றதில்லை!  நல்வாழ்த்துகள்! - திருச்சி புலவர் இராமமூர்த்தி.

Prof. S. Murugesan, Guindy Engg. College,
> 👏👏👏

Prof. Gomathinayakam, Guindy, (President, Tamil Nadu Foundation (formerly) )
> 👌💐✨💐✨👌 எங்கேயோ போய்விட்டீர்கள்! தம்பி! நானும் உங்களது நண்பன்
> என்பதில் மிக்க பெருமையுறுகிறேன்.  நன்றி வணக்கம்

கவிஞர் புகாரி, கனடா,
> முத்து முத்து வெண்பாக்கள் - உங்களுக்கு
>        முத்தம் தரும் வெண்பூக்கள்!

திருமதி. சௌந்தரவல்லி வா. செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன்)
> வாழ்த்துக்கள், தம்பி.

வாழ்த்திய அறிஞர் அனைவர்க்கும் நன்றி பல.


On Mon 23 Aug, 2021, 7:20 PM N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
பொள்ளாச்சி நா. கணேசனார் திருத்தசாங்கம்

  கவிஞர் இனியன், வஞ்சி மாநகர்(கரூர்)
          பத்து வெண்பாக்கள்

           துச்சில்: அமெரிக்கா
          திருவோணத் திருநாள்
                     (21.8.21)

                   கொடி
செப்பேடு கல்வெட்டில் சீர்மிகும் ஆய்வாளர்

N. Ganesan

unread,
Aug 23, 2021, 8:42:42 PM8/23/21
to Santhavasantham

-
From: podhuvan sengai <podh...@gmail.com>

இலக்கண அமைதியுடன் கூடிய இனிய சிற்றிலக்கியம்.
பாராட்டு 

On Tue, Aug 24, 2021 at 3:01 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அருங்கலைஞர் எனது நண்பர் நா.கணேசனது திறம் பாடும் நற்கவிதை தீட்டிய கவிஞர் இனியன் அவர்கட்கும், கவிதைத்தலைவன் கணேசன் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

ராமலிங்கம் ராஜா (நாமக்கல் கவிஞர் மகன்)

N. Ganesan

unread,
Aug 23, 2021, 8:44:13 PM8/23/21
to Santhavasantham
Siva Elango (S/O Pudhuvai Sivam) wrote:
வெண்பாக்கள் நன்று.
இதில் புகழ்ச்சி யில்லை. எல்லாமும் கணேசனார் தகுதியே.

N. Ganesan

unread,
Aug 28, 2021, 7:40:24 PM8/28/21
to vallamai, housto...@googlegroups.com
On Mon, Aug 23, 2021 at 8:53 PM saidevo <sai...@gmail.com> wrote:
இனியனார் சிற்றிலக்கியச் செழுமையில் கணேசனார் கீர்த்தியை அறிந்தது இனிமை, வியப்பு!
ரமணி

நன்றி, கவிஞர் ரமணி.

         நாமம்
அமெரிக்க விண்வெளி ஆய்வகம் நாசா
அறிவிய லாளர் அறிஞர்- அறிவர்
கணேசன் அவர்கள் கணினித் தமிழில்
கணித்தார்  எழுத்துரு கண்டு.
                                      - கவிஞர் இனியன் பாடிய திருத்தசாங்கம், பாடல் 1.

எழுத்துருவை எழுதுரு என வினைத்தொகையாய் எழுதுகிற ஃபாண்ட் என்றும் பாவிக்கலாம்.
யூனிகோட் என்னும் ஒருங்கு குறியீட்டைத் தமிழில் உள்ள ஒரே இணைய எழுத்துரு ஆக்கப்
பல்வேறு முயற்சிகள் எடுத்தோரில் அடியேனும் ஒருவன். என் புரப்போஸலில் இருந்த சட்டகத்தில் (Code Chart)
தென்கிழக்கு  ஆசியாவில் உள்ள மொழிகளைப் பேச்சுமொழியாக இருந்து
கல்விமொழி ஆக்கிய பெருமைக்குத் தமிழர் அங்கே பரப்பிய கிரந்த எழுத்துமுறை
யூனிகோடில் பயன்படுகிறது. தமிழ்-கிரந்தம் இரண்டையும் இணைத்து அழகான ஒரு எழுத்து முறையை
அக்‌ஷரமுகம் வினோத்ராஜன் தந்துள்ளார். அதில் செங்குத்தாக அடுக்கிய சம்யுக்தாக்‌ஷரம் இருக்காது.
கிரந்தம் கற்கவும், பயன்கொள்ளவும், முனைவர் வினோத் ராஜனின் முறை சிறப்பானது.
தென்கிழக்கு ஆசிய பாஷைகளுக்குத்  தாய்லிபி ஆகிய கிரந்தத்தை, சமணர்கள் பிராமியைக் கொணர்ந்து,
வட்டெழுத்து ஆக்கிய வளர்ச்சியை விட்டுவிட்டு, பல்லவர்களின் கிரந்தத்தை தமிழகம்
முழுவதும் ராஜராஜசோழன் அமலுக்குக் கொணர்ந்தான். தமிழ் எழுத்து வளர்ச்சியின்
முக்கியக் காலகட்டம் ஸ்ரீ ராஜராஜ சோழதேவர் எனலாம். இப்பொழுது நாம் பயன்படுத்தும் தமிழ்
எழுத்துகள் எல்லாம் கிரந்த வடிவினவை தாம். வட்டெழுத்து அல்ல. இதற்கு அடுத்த கட்டமாக,
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சென்னைப் பல்கலைப் பேரகராதி.
மு. ராகவையங்கார், ச. வையாபுரிப்பிள்ளை, ... போன்ற பெரும்பேராசிரியன்மார்
செய்தது. அதில்தான் தமிழ் அட்சரமாலையில் என்னென்ன எழுத்துகள் தற்காலத்
தேவைக்கு வேண்டும் எனத் தீர்மானம் ஆகியது. தமிழ் மொழியின் வார்த்தைகளுக்கு
18 தமிழ் மெய் எழுத்துகளும் (தொல்காப்பியம், நன்னூல்), பிற அயன்மொழி (இந்தியா, அறபி, ஆங்கிலம், ...)
வார்த்தைகளை எழுதத் தேவையான எழுத்துகள் என 5 வடவெழுத்துகளையும் தமிழ் லெக்ஸிகானில்
நிச்சயம் செய்தனர். இதைத்தான் ஒருங்கு குறியீட்டில் (யூனிகோட்) தந்துள்ளனர். ஆக, தற்காலத் தமிழ்
23 மெய் அட்சரங்களால் இயங்குகிறது.

இதனை எழுதச்செய்து, திருத்தி யூனிகோட் குழுவினரை ஏற்றச் செய்தேன்,
யூனிகோட் டெக் கமிட்டியின் சென்னை விஜயம்,

மின்குழுக்களில் முதலாக யூனிகோட் வளர்ச்சிக்கு உதவின குழு என்பதில்
சந்தவசந்தத்திற்குப் பெரும்பங்கு உண்டு. அப்போது கனடாக் கவிஞர் பேரா.
அனந்த் அவர்கள் வாழ்த்திய வெண்பா இது:

         பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
         வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
         பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
         காரணமாய் நின்றார் களித்து!

இப்படி மாறும்போது தானியங்கியாய் வந்த வெண்பாக்களில் பொடிச்செல்லம்
பற்றிய இலந்தைக் கவிதை கிட்டியது (2007). நேற்று அனுப்பிவைத்தது நினைவிருக்கலாம்.

----------------------------------------------------

சிகாகோ தமிழ்ச் சங்கம் தான் அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் தமிழ்ச் சங்கம். அதன்பின் டாக்டர் ப. குமரேசன்,... போன்றோர்
தொடங்கிய நியூ யார்க் தமிழ்ச் சங்கம். பின்னர் ஹ்யூஸ்டன் பாரதி கலைமன்றம், .... சிக்காகோ தமிழ்ச் சங்கத்திற்கு விஞ்ஞானி சந்திரா
(அவர் பெயரால் சந்திரா எக்ஸ்-ரே லேப் நாசா விண்ணில் செலுத்தியது. 2016-ல் நம் பால்வீதியின் நடுவிலே 12 கரும்புழைகளைக் கண்டுபிடித்தது.
ஆயிரம் கரும்புழைகள் இருக்கலாமாம்.  There could be as many as 1000 Black holes at the center of our Milky Way, so says astronomers who study images from Chandra.)
சந்திரா பலமுறை  சிகாகோ தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறாராம். இதனை எனக்கு சிக்காகோ தமிழ்ச்சங்கம் நடத்தின பாராட்டு விழாவில்
அழ. இராம்மோகன், பேரா. இ. அண்ணாமலை குறிப்பிட்டனர். அவர்கள் தந்த பட்டயம் இணைக்கிறேன். 2019-ல் நிகழ்ந்த 10-ம் உலகத்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் பங்கேற்றேன். முதல்நாள் Plenary session-ல் பேசும் வாய்ப்பமைந்தது. கணித்தமிழ் வளர்ச்சிக்கு
ஆற்றின உழைப்பைப் பாராட்டி சிகாகோ தமிழ்ச் சங்கத்தார் அளித்த பட்டையம்.
IMG_5510.JPG
----------------------------------

நான் B. E. (Hons) பயின்ற கிண்டி பொறியியற் கல்லூரி, பேரா. வா. செ. குழந்தைசாமி விருது,
ரூ 1 லட்சம் அளித்துப் பாராட்டியது. அதனை பேரூர் சைவ மடத்திற்கு, வண்ணச்சரபத்தின்
அச்சாகாத 53,000 திருப்புகழ்ப் பாடல்களை அச்சிடும் பணியில் ஒரு பங்காக இருக்கட்டும்
என நன்கொடை அளித்துவிட்டேன்.

அண்ணா பல்கலை விழாவில், திரு. உதயசந்திரன், ஐஏஎஸ் (இப்போதைய தலைமைச் செயலர்)

கவிஞர் குலோத்துங்கன் (வா. செ. குழந்தைசாமி) நூல்கள்:

Prof. VCK's lectures,

NG
 

Siva Elango (S/O Pudhuvai Sivam) wrote:
வெண்பாக்கள் நன்று.
இதில் புகழ்ச்சி யில்லை. எல்லாமும் கணேசனார் தகுதியே.


 

புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
           கவிஞர் புகாரி

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
               புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய் !
இளமையோடும் புதுமையோடும்
               தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்!

ஓசைகளாய் இருந்தவள்தான்
               ஓலைகளில் பெயர்ந்தாள்!
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
               சங்ககாலம் கொண்டாள்!

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
               தாள்களுக்குள் பெயர்ந்தாள்!
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
               தரணியெங்கும் நிறைந்தாள்!

காகிதத்தில் கனிந்தவள்தான்
               கணினிக்குள் பெயர்ந்தாள்!
கணினிக்குள் பெயர்ந்ததனால்
               அண்டவெளி வென்றாள்!

அழிந்திடுவாள் என்றோரின்
               நரம்பறுத்து நின்றாள்!
இணையமென்ற மேடைதனில்
               மின்னடனம் கண்டாள்!

அயல்மொழியைக் கலந்தோரை
               வெட்கியோட வைத்தாள்!
அழகுதமிழ் அமுதத்தமிழ்
               ஆட்சிமீண்டும் பெற்றாள்!


 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANw5n_cpL%3Ddhbh1PMeC3X7bY1GNJ5LZ4us-%2BX%2ButYmsWqd2jiA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages